என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பரவச அனுபவம்
- தத்துவங்களின் பெருவொளியாக லலிதா சகஸ்ரநாமம் இருக்கிறது.
- மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப் பட்டது என்பது இந்த நாமங்களின் பெருங்கடலின்
ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம்.
நிர்த்ஞுவைதா த்வைதம் எனப்படும் இருமை நோக்கை நீக்குபவள், த்ஞுவைத-வர்ஜிதா இயல்பாகவே இருமை நிலை
இல்லாதவள், சாமரஸ்ய பராயணா - சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே.
இந்த அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை நாம் பாராயணம் செய்யவும், தியானம் செய்யவும் வேண்டும்.
அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும்
தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் எல்லாம் அன்னையின்
உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்.
தத்துவங்களே அன்னையின் இருக்கைகளாகவும் (தத்வாஸனா), காற்சிலம்பின் மணிகளாகவும், கையில் ஏந்தி
விளையாடும் பூக்களாகவும், மகா காளிக் கோலத்தில் அவள் அணியும் மண்டையோட்டு மாலைகளாகவும் ஆகிவிடுகின்றன!
அதுவே லலிதா சகஸ்ரநாமம் அளிக்கும் பரவச அனுபவம்.
இந்த துதியைப் பொருள் உணர்ந்து படிக்கும் போதும், தியானிக்கும் போதும் தர்க்க மனத்தின் எல்லைகளுக்கு அப்பால் அது சுழன்றடித்துச் செல்கிறது.
பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நாமம் நம் மனதில் ரீங்கரித்து
மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
தத்துவங்களின் பெருவொளியாக லலிதா சகஸ்ரநாமம் இருக்கிறது.






