என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அம்மனின் தோற்றம்
    X

    அம்மனின் தோற்றம்

    • தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி.
    • நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள்.

    தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி.

    நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள்.

    இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா சகஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது.

    சிதக்ஞுனிகுண்டஞு சம்பூ தா அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள்,

    ராகஞுஸ்வரூப பாசா'ட்யா ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள்,

    க்ரோதாகார அங்குசோ'ஜ்வலா தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள்,

    மனோரூப இட கோதண்டாஞு மனமாகிய கரும்புவில்லை உடையவள், பஞ்சதன்மாத்ர சாயகா ஐந்து புலன்களாலும்

    உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும்,

    ஐந்து மலர்க்கணைகளாக கொண்டவள்.

    பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே.

    மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்.

    Next Story
    ×