என் மலர்
நீங்கள் தேடியது "ஒடிஷா"
- விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினா்
- கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
ஒடிசா மாநிலம் தெபிகரா பகுதியில் உள்ள நதி படித்துறையில் துா்கா சிலையை கரைக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் கடந்த 3-ந்தேதி நள்ளிரவில் ஊா்வலமாகச் சென்றனா்.
தா்கா பஜாா் வழியாகச் ஊா்வலம் சென்றபோது, அதிக சத்தத்தில் பாடல் ஒலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.
அப்போது துா்கா சிலை ஊா்வலத்தினா் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.
இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் தடை உத்தரவை மீறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினா்.வித்யாதா்பூர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி, வன்முறை நடைபெற்ற தா்கா பஜாா் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து நகரத்தின் மேற்குப் பகுதியான சி.டி.ஏ செக்டாா் 11-ல் முடிவடைந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.
அப்போது அவா்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப் பட்டன. மேலும் கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். வன்முறையை தடுக்க கட்டாக்கில் 13 காவல் நிலைய எல்லை பகுதிகளில் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை ஒடிசா அரசு பிறப்பித்தது.
இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று இரவு 10 மணி முதல் தர்கா பஜார், மங்களாபாக், பூரிகாட், லால் பாக் மற்றும் ஜகத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலானது.
மேலும், பொய்யான தகவல் பரப்பப்படுவதைத் தடுக்க கட்டாக் மாநகராட்சி, கட்டாக் வளா்ச்சி ஆணையம் மற்றும் 42 மவுஜா மண்டலம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே துா்கா சிலை கரைப்பின்போது ஏற்பட்ட வன்முறைக்கு எதிராக கட்டாக் நகரில் இன்று 12 மணி நேர கடை அடைப்புக்கு விஷ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்தது.
கட்டாக் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியப் பகுதிகளில் போலீசார் மற்றும் விரைவு நடவடிக்கை படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
அமைதி காக்கும்படி முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
- ஒடிசாவின் பல பகுதிகளில் தங்கம் இருப்பதை ஓடிசா சுரங்கத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார்.
- இந்தியா கடந்த ஆண்டில் 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்தது.
ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இதில் தியோகர், சுந்தர்கர், நபரக்பூர், கியோன்ஜர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய பகுதிகளில் தங்க கனிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மயூர்பன்ச் மல்கன்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஒடிசா தங்க சுரங்கமாக மாற உள்ளது. இங்கு 10 முதல் 20 மெட்ரிக் டன்கள் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசாவின் பல பகுதிகளில் தங்கம் இருப்பதை ஒடிசா சுரங்கத்துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதமே சட்டசபையில் அறிவித்தார். இதனால் இங்கு தங்க சுரங்கம் தோண்டுவதற்கான ஏலம் விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது.
இந்தியா கடந்த ஆண்டில் 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. நாட்டின் உள்நாட்டு தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1.6 டன்கள் என்ற அளவிலேயே உள்ளது. ஒடிசாவில் தங்கம் எடுக்கப்பட்டால் இந்தியாவில் உள்நாட்டு தங்கம் உற்பத்தி அதிகரிக்கும், இறக்குமதியும் ஓரளவு குறையும்.
முதல் கட்டமாக ஒடிசாவின் தியோகர் பகுதியில் தங்க சுரங்கத்தை ஏலம் விடுவதற்கான பணிகளை ஒடிசா அரசு, ஒடிசாசுரங்க கார்பரேஷன், இந்திய தொல்லியல் துறை ஆகியவை விரைவுப்படுத்தி உள்ளன. இதன்மூலம் ஒடிசாவில் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.
- ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.
கோயிலுக்குச் சென்ற புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் பூரியில் உள்ள ஸ்ரீஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும், மேலும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைய வழிகாட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று ஒடிஷா பாஜக தலைவர் சம்பித் பத்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
- பல முக்கிய அரசு அதிகாரிகளுடன் ஒன்றாக இருப்பது போல இவர்கள் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்.
- அரசு டெண்டர்களை வாங்கி தருவதாக கூறி பல தொழிலதிபர்களை ஏமாற்றியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளரான பி.கே.மிஸ்ராவின் மகள் மற்றும் மருமகன் போல் நடித்து, பல தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தம்பதியை ஒடிசா போலீசார் கைது செய்தனர்
சுரங்க உரிமையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த தம்பதியை காவலர் கைது செய்துள்ளனர்.
38 வயதான ஹன்சிதா அபிலிப்சா மற்றும் அவரது கணவர் என கூறப்படும் அனில் மொஹந்தி ஆகியோர் ஒடிசாவில் உள்ள முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி பலரை ஏமாற்றியுள்ளனர்.
"புவனேஸ்வர் நகரில் இந்த 'தம்பதி' அலுவலகம் நடத்தி வந்துள்ளனர். டிஜிட்டல் முறையில் பல முக்கிய அரசு அதிகாரிகளுடன் ஒன்றாக இருப்பது போல இவர்கள் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர். இந்த புகைப்படங்களை காட்டி பல அரசியல்வாதிகளுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் இதன்மூலம் அரசு டெண்டர்களை வாங்கி தருவதாக கூறி பல தொழிலதிபர்களை ஏமாற்றியுள்ளனர்" என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த தம்பதியால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






