என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sambit patra"

    • காங்கிரஸ் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆக்சிஜன் வழங்கி வருகிறது.
    • உள்ளே அது காங்கிரஸ் காரிய கமிட்டியாக இருக்கிறது. ஆனால், வெளியில் பாகிஸ்தான் காரிய கமிட்டி போல் செயல்படுகிறது.

    பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சரண்ஜித் சிங் சன்னி, "பஹல்காம் தாக்குதல் நடந்து 10 நாட்களுக்குப் பிறகும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. நாங்கள் உறுதியான நடவடிக்கைகளைக் கோருகிறோம், பாகிஸ்தானுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் பார்க்க முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. 56 அங்குல மார்பளவு கொண்டவர் செயல்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.

    நம் நாட்டின் மீது ஒரு குண்டு வீசப்பட்டால், நமக்குத் தெரியாதா? பாகிஸ்தானில் நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள். எதுவும் நடக்கவில்லை,. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நாம் பார்க்க முடியவில்லை, யாருக்கும் அது தெரியாது. இன்றுவரை, சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. அதற்கு எதாவது ஆதாரங்கள் இருக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதற்கு பாஜக தலைவர்கள் கடும கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா "காங்கிரஸ் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆக்சிஜன் வழங்கி வருகிறது. உள்ளே அது காங்கிரஸ் காரிய கமிட்டியாக இருக்கிறது. ஆனால், வெளியில் பாகிஸ்தான் காரிய கமிட்டி போல் செயல்படுகிறது.

    தீர்மானம் நிறைவேற்றுவது மற்றும் தலைவர்கள் பேசுவது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் மற்ற தலைவர்கள் மற்ற விசயத்தை பேசுகிறார்கள். காரிய கமிட்டி தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, சன்னி தனியாக பத்திரிகையாளர்களை சந்தித்து 2019 புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட்டில் இந்திய விமான தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரத்தை கேடுகிறார். பாகிஸ்தான் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்கவும், அவர்களின் மன உறுதியை அதிகரிக்கவும் காங்கிரஸ் எந்த வாய்ப்பையும் விட்டுவிடுவதில்லை.

    இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

    நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் "பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் நேரம் இது" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.
    • ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.

    கோயிலுக்குச் சென்ற புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் பூரியில் உள்ள ஸ்ரீஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும், மேலும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைய வழிகாட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று ஒடிஷா பாஜக தலைவர் சம்பித் பத்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா, மகாகாளேஸ்வரர் கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தியின் கோத்திரம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். #SambitPatra #MahakaleshwarTemple #RahulGandhi #BJP #Congress
    போபால்:

    இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதியில்லாத சோம்நாத் கோயிலுக்கு கடந்த ஆண்டு ராகுல் காந்தி சென்றபோது, அவர் பூணூல் அணிந்த சிவபக்தர் என விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

    தற்போது மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். இதை இந்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியின்போது பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா சுட்டிக்காட்டினார்.



    அப்போது, சோம்நாத் கோயிலுக்கு ராகுல் சென்றதை நினைவுகூர்ந்த சம்பித் பத்ரா, ராகுல் பூணூல் அணிந்திருக்கிறார் என்றால் அவரது கோத்திரம் என்ன? என்றும், அவர் அணிந்திருக்கும் பூணூல் என்ன வகை? என்றும் கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பியுள்ளார். #SambitPatra #MahakaleshwarTemple #RahulGandhi #BJP #Congress
    ×