என் மலர்
வழிபாடு

நாளை வளர்பிறை பஞ்சமி: வராகியின் அருளைப் பெற வராகி மந்திரம்
- வளர்பிறை பஞ்சமி திதியில் வராகியை வணங்கும் போது வராகி தேவியின் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
- வீட்டில் வழிபடும்போது வராகி படம் அல்லது சிலை இருந்தால், விரலி மஞ்சளில் மாலை கட்டி வராகிக்கு சாற்றி வழிபடலாம்.
வளர்பிறை பஞ்சமியில் வராகி அம்மனை வழிபட்டால் போதும் வாழ்வில் உள்ள துன்பங்கள் அகலும். தீய சக்திகள் தலைதெறிக்க ஓடும். நீங்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்களிலும் வெற்றிமேல் வெற்றி வந்து சேரும் என்பது நம்பிக்கை.
நாளை வளர்பிறை பஞ்சமி வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்
* வராகி அம்மன் கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள், மாலை வேளையில் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து நல்லெண்ணெய் அல்லது நெய் விளக்கேற்றி வழிபடலாம்.
* சாமி தரிசனம் செய்த பின் அம்மனுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு முதலானவற்றை நைவேத்தியமாக படைத்து கோவிலில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.
* வளர்பிறை பஞ்சமி திதியில் வராகியை வணங்கும் போது மறக்காமல் வராகி தேவியின் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
வராகி மூல மந்திரம்
ஓம் ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதீ வார்த்தாளி, வாராஹி வாராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம:
ருத்தே ருந்தினி நம: ஸதம்பே ஸ்தம்பினி நம: ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம் ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு.
* கோவிலில் நீங்கள் விளக்கேற்றும் போதே அன்னையின் சந்நிதியில் அமர்ந்து, மனம் முழுக்க வராகியை மட்டும் நினைத்து, மனதுருகி மூல மந்திரத்தை சொல்ல வேண்டும்.
* அன்றைய தினம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டின் பூஜையறையில் அமர்ந்து வராகி மூல மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரத்தை மனதார சொல்லி வழிபடலாம்.
* வீட்டில் வழிபடும்போது வராகி படம் அல்லது சிலை இருந்தால், விரலி மஞ்சளில் மாலை கட்டி வராகிக்கு சாற்றி வழிபடலாம்.
* ஒருவேளை வீட்டில் வராகி அம்மனின் திருவுருவப் படம் இல்லை என்றாலும் பரவாயில்லை, வராகியை மனதில் நிறுத்தி வராகி மந்திரத்தை சொன்னாலே போதும் வராகி அம்மன் தீமைகளில் இருந்து நம்மை காத்திடுவாள்.
வராகி மந்திரம்
"ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி"
தினமும் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும். செல்வமும், நல்ல எதிர்காலமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் வராகி மந்திரத்தின் பயனால் வராகி அம்மனின் அருளைப் பெறலாம் என்கின்றனர் வராகி பக்தர்கள்.






