search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்  -மேயர் ஜெகன் பெரியசாமி  தலைமையில்  நடந்தது
    X

    மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடந்த போது எடுத்த படம்.


    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் -மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது

    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 434 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்க மானிய நிதி அளிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
    • மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விதிப்பில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று நடைபெற்றது. கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

    தீர்மானங்கள்

    கூட்டத்தில் சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுதல், முத்தம்மாள் காலனியில் புதிய ரேஷன் கடை கட்டுதல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 434 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்க மான்ய நிதி அளிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    உள்ளாட்சி அமைப்பு திட்டப் பணிகளுக்கு மானியம் பெறுவதற்கு மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விதிப்பில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

    எனவே சொத்துவரி, காலிமனை வரி சீராய்வு செய்வதற்கு மாநகராட்சி பகுதிகளில் கட்டப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு அவற்றின் அமைவிடம், கட்டுமானத்தின் தன்மை அடிப்படையில் பரப்பளவிற்கு ஏற்றவாறு 4 வகைகளாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்ய வேண்டும்.

    அதன்அடிப்படையில் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி தீர்மானத்தின்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் 1-4-2022 முதல் காலிமனை வரி உயர்வு செய்து பொது சீராய்வு மேற்கொள்ள மண்டலங்கள் வாரியாக புதிய வரியும், பொது சீராய்வு மேற்கொள்ள அனுமதி கோருதல்,

    உள்ளாட்சி அமைப்பு களில் நிர்வாகத்தை வலுப்ப டுத்தவும், பொதுமக்களின் பங்கேற்பு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தவும் மாநகராட்சி சட்டப்பிரிவுகளின்படி வார்டு குழு மற்றும் பகுதிசபா அமைக்கவும் அதற்கு வார்டு கவுன்சிலர் தலைவராகவும் வாக்குரிமை பெற்ற பகுதி வாசிகள் பகுதிசபா குழு உறுப்பினர்களாகவும் மாநகராட்சி அனுமதி பெற்று நியமித்திடவும் இந்தக் குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்படவும் அதற்கான அஜெண்டா தயாரிக்கவும் கவுன்சிலர் கூட்டம் நடத்த தவறினால் ஆணையாளர் கூட்டத்தை நடத்தவும் அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே வார்டு குழு மற்றும் பகுதிசபா 60 வார்டுகளிலும் அமைக்க அரசாணை மற்றும் அரசிதழ் அறிக்கையினை மாமன்றத்தில் சமர்ப்பித்தல் உட்பட பல தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது,

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், குழு தலைவர்கள் ராமகிரு ஷ்ணன், கீதாமுருகேசன், சுரே ஷ்குமார், அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கசாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன்சுரேஷ், பொன்னையா, சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×