என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rainwater Drainage"
- மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
- மழைக்காலம் முடியும் வரை, அதிகாரிகளை மாற்றக்கூடாது என அறிவுறுத்தல்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.
அப்போது, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், மழைநீர் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்," மழைநீர் வடிகால்களை தூர்வாறும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகளை அடுத்த 30 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தனியாக ஆய்வு செய்யாமல், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து செல்ல கூறியுள்ளோம். மழைக்காலம் முடியும் வரை, அதிகாரிகளை மாற்றக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
- பருவமழை தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ளன.
- மழைநீர் வடிகால்வாய்கள் துண்டிக்கப்பட்டு அடைப்புகள் ஏற்பட்டுள்ளன.
சென்னை:
மழைக்கால முன்னேற்பாடுகளை ஆண்டு தோறும் அரசு முன்னெடுத்து வருகிறது. இருந்தாலும் பருவ மழை காலம் சென்னை வாசிகளுக்கு போதாத காலமாகவே மாறி விடுகிறது.
எப்படியாவது சென்னையை மிதக்க வைத்து மக்களை தவிக்க வைத்து விடுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையில் பல இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை தண்ணீரில் மூழ்கி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு பருவமழை தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ளன. பருவ மழையை எதிர்கொள்ள சென்னை தயாராக இருக்கிறதா? எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் வடிந்தோட வாய்ப்புகள் இருக்கிறதா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில், மின் வாரியம், குடிநீர் வாரியம் என்று பல துறைகள் மேற்கொண்டு வரும் பணிகளால் இருக்கின்ற கால்வாய்களே அடைபட்டு கிடக்கின்றன. எனவே மழை வந்தால் தண்ணீர் எங்கே போகும் என்ற கேள்விதான் இப்போது சென்னை வாசிகளை பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த ஆண்டு பருவமழையை சந்திப்பது சவாலாக கூட இருக்கலாம் என்கிறார்கள்.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 7 மண்டலங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன.
மாதவரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், கோடம் பாக்கம், வளசரவாக்கம், சோழிங்க நல்லூர், தேனாம்பேட்டை ஆகிய 7 மண்டலங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் துண்டிக்கப்பட்டும், அடைப்புகள் ஏற்பட்டும் உள்ளன.
ஓட்டேரியில் நல்லா கால்வாயில் 250 மீட்டர் தூரத்துக்கு ஓடை துண்டிக்கப்பட்டுள்ளது. ரேடியல் ரோடும், ஓ.எம்.ஆர். ரோடும் இணையும் இடத்தில் மத்திய கைலாசில் இருந்து செல்லும் பாதையில் சுமார் 100 அடி தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ரூ.5,800 கோடி செலவில் நடைபெறும் மேம்பால சாலை பணிகள் துறைமுகத்தில் இருந்து மதுர வாயல் வரை நடக்கிறது. சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த மேம்பால சாலை பணிக்காக கூவம் ஆற்றில் 605 ராட்சத தூண்கள் கட்டப்படுகிறது.
மழை நீர் ஆற்றுக்குள் செல்லும் பகுதிகள் பல இடங்களில் மண் கொட்டப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் கூவம் ஆறு பல இடங்களில் இவ்வாறு மண் கொட்டப்பட்டு இருப்பதால் சுருங்கி கிடக்கிறது.
இது தவிர மின் வாரியம் சார்பில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணிகள், குடிநீரர் வாரிய பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. இதனால் நீர்வழித்தடங்கள் அடைபட்டு கிடக்கின்றன.
மாதவரம் பால் பண்ணை சாலை, ஜவகர்லால் நேரு ரோடு, புரசைவாக்கம் நெடுஞ் சாலை, பர்ணபி சாலை, துரைப்பாக்கம் ரேடியல் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுக்கலாம்.
இந்த பழுதுகளை மாநக ராட்சி கண்டறிந்துள்ளது. அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து பருவ மழைக்கு முன்பு இந்த பகுதிகளில் தடையின்றி மழைநீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லா விட்டால் ஆபத்தை தவிர்க்க முடியாது.
- மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை:
சென்னையில் தற்போது கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து தெளிப்பதை தொடங்குமாறு மலேரியா ஒழிப்பு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து மழைநீர் வடிகால்களிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2,600 தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை நகரம் முழுவதும் புகை அடித்தும், மருந்துகளை தெளித்தும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சென்னையில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மழைநீர் வடிகால்கள் இருப்பதால் அங்கு தொடர்ந்து மருந்து தெளிக்கப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகும் மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்றினாலும் கூட அந்த வழியாக கழிவுநீர் செல்கிறது. எனவே கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- முதலமைச்சர் கள ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
மழைக் காலங்களில் நகர் முழுக்க மழைநீர் தேங்கி, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், சென்னை நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வடகிழக்கு பருவமழை காலம் துவங்குவதற்கு முன்தாகவே பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்.
முதலமைச்சரின் திடீர் ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
- மதுரையில் 18 தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மதுரை
பருவ மழைக்கு முன்ன–தாக மதுரையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மழை நீர் வடிகால் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை–களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் பருவ மழை காலம் என்பதால் மதுரையில் தாழ்வான பகு–திகளில் அதிகளவில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், அந்த பகுதிகளை கண்டறிந்து அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவ–டிக்கைகளை எடுப்பதற்காக மாநகராட்சி கமிஷனர் பிர–வீன்குமார் அதிகாரிக–ளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். அந்த பகுதிளில் மழைநீரை தேக்கமின்றி வெளியேற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள்.
மதுரை ஆழ்வார்புரம், செல்லூர் சுயராஜபுரம், மீனாம்பாள்புரம், பந்தல்குடி கால்வாய், பி.பி.குளம், கீழ தோப்பு, தத்தனேரி, காந்தி நகர், தைக்கால் தெரு, ஓபுளா படித்துறை, கிருது மால் கால்வாய், அண்ணா தோப்பு பகுதி, பேச்சியம்மன் படித்துறை சாலை, சுங்கம் பள்ளிவாசல், இஸ்மாயில் புரம், தாமிரபரணி வீதி, ஆத்திகுளம் கண்மாய் மற் றும் வண்டியூர் ஆகிய 18 பகுதிகள் தாழ்வான இடங்க–ளாக கண்டறியப்பட்டுள் ளன.
இந்த பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள் ளது. மதுரையில் ஏற்கனவே கடந்த பல மாதங்களாக முல்லை பெரியாறு குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகின்றன.
ஒரு மணி நேரம் மழை பெய்தால் கூட அந்த சாலை–களில் சேறும் சகதியும் அதிக அளவில் குவிந்து வாகன ஓட்டிகளை திக்கு முக்காட வைத்து வருகிறது. மேலும் விரிவாக்க பகுதிகளான ஆனையூர், தபால் தந்தி நகர், திருப்பாலை, கூடல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் பொது–மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.
மேலும் பல மாதங்களா கியும் செல்லூர்-குலமங்க–லம் மெயின் ரோடு போடப்படாததால் வாகன ஓட்டிகள் படும் பாடு சொல்லி முடியாது. அது போல கூடல் நகர், ஆனை–யூர் பகுதிகளிலும் சாலைகள் படு மோசமாக காணப்படு–வதால் அடிக்கடி விபத்துக–ளும் நடந்து வருகின்றன.
பருவமழை தொடங்குவதற்கு முன்னர் இந்த பகு–திகளில் சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை–களை விரைந்து சீரமைக்க வேண்டும்.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு சாலை பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பு கிறார்கள். மேலும் பருவ மழை தொடங்குவதற்கு முன்னர் மதுரை நகரில் உள்ள மழை நீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 4 -வது வார்டு மற்றும் 16-வது வார்டு பகுதியில் பூமி பூஜை இன்று நடைபெற்றது.
- விழாவில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 4 -வது வார்டு மற்றும் 16- வது வார்டு பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
விழாவில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ,முன்னாள் மண்டல தலைவர் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன் ,தமிழ்ச்செல்வி கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ராமேசுவரம் கோவிலில் புகுந்த மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- ராமேசுவரத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மழை நீண்ட நேரம் பெய்ததால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்து விட்டது. குளம் போல் மழை நீர் தேங்கியதால் அதனை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் விரைந்து வந்து மழைநீரை வெளியேற்றினர். ராமேசுவரத்தில் அதிகளவு மழை பெய்யும் போது கோவிலுக்குள் தண்ணீர் குளம் போல் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய சிரமம் ஏற்படுகிறது. எனவே கோவிலுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மர்மநபர்கள் வடிகால்களில் குப்பைகள் கொட்டுவதும், ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது
- பிரதான சாலையில் இருந்த வடிகால்கள் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.
தூத்துக்குடி:-
தூத்துக்குடி மாநகரில் மழைநீர், கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது,
இந்நிலையில் சில இடங்களில் மர்மநபர்கள் வடிகால்களில் குப்பைகள் கொட்டுவதும், ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் பல இடங்களில் தண்ணீர் செல்வதில் தடைகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகரின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலுவலர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு வடிகால் ஆக்கிர–மிப்பாளர்கள் மீதும், குப்பைகள் கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குறிப்பாக தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதியில் ஊராட்சியாக இருந்தபோது போடப்பட்ட வடிகால்கள் மூலம் மழைநீர்,கழிவுநீர் சாலையில் தேங்காமல் சென்று வந்தது, ஆனால் தற்போது அந்த வடிகால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பினாலும், மணல் கொட்டி மூடியும் வைத்துள்ளனர். பல இடங்களில் குப்பைகளும் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சிறு மழை பெய்தாலும் தெருக்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. பிரதான சாலையில் இருந்த வடிகால்கள் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது. அதன்பின் புதிதாக வடிகால் அமைக்காததாலும் தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலை மழை நீர் முழுமையாக தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் ஆறுகளாக மாறிவிடுகிறது.
இதனால் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து உரிய கவனம் செலுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய வடிகால்களையும் உடனடியாக அமைக்க மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விழுப்புரம் மாவட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மக்கள் தூய்மை பணி நடைபெற்றது.
- பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் தூய்மையான நகரமாக வைத்துக் கொள்வது என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
விழுப்புரம்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கரு ணாநிதி பிறந்த நாளை யொட்டி முன்னிட்டு தமிழகம் முழுவதும் தூய்மை இயக்க த்திற்கான பணியினை முதல்-அமைச்சர் தொடங்கி வை த்தார். இந்நிலையில் அன்று விழுப்புரம் மாவ ட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொ ன்முடி தலைமையில் மக்கள் தூய்மை பணி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாதத்தின் 2-வது சனிக்கி ழமை மற்றும் 4-வது சனிக்கி ழமை அன்று விழுப்புரம் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் பணி என் நகரம் என் பெருமை என் குப்பை என் பொறுப்பு" என்ற தாரமந்திரத்திற்க்கு ஏற்ப துய்மை பணி நடைபெற்று வருகிறது.
இன்று மாபெரும் மழைநீர் வடிகால் தூர்வா ரும் முகாம் மற்றும் நகர த்தை தூய்மை படுத்தும் பணியினை மாவட்ட கலெக்டர்மோகன் தலை மையில், விழுப்புரம் சட்ட மன்ற உறுப்பினர் லட்சு மணன், நகர மன்ற தலைவர் தமிழச்செல்வி ஆகியோர் விழுப்புரம் 2-வது வார்டில் வட க்குத் தெரு பகுதியில் துவக்கி வைத்தனர். இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் தூய்மை யான நகரமாக வைத்துக் கொள்வது என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன மேலும் விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலையில் கோலியனூரான் வாய்க்காலில் மழைநீர் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் இருந்த நெகிழி குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கமலகண்ணப்பன் நகரிலும் இப்பணி நடைபெற்றது. மேலும் 29வது வார்டில் மகாபாராத தெரு, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் மாபெரும் துப்புரவு பணிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் விழுப்புரம் ஆணையர் சுரேந்திர ஷா, வருவாய் அலுவலர் நந்த கோபால், தாசில்தார் ஆன ந்தகுமார், நகர் மன்ற உறுப்பினர்கள் பத்மாவதி, புல்லட் மணி, அன்சர்அலி, வருவாய் ஆய்வாளர் ஏழுமலை,நகர தி.மு.க. செயலாளர் சக்கரை, துப்புரவு ஆய்வாளர் ரமணன், துப்புரவு மேற்பா ர்வையாளர் கார்த்தி, முன்னாள் கவுன்சி லர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை:
கீழ்ப்பாக்கம் தாசபிரகாஷ் சிக்னல் அருகே சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு முழுவதும் இதில் கம்பி கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை வேலை நடந்து கொண்டிருந்த போது திடீரென வடமாநில தொழிலாளி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இறந்து போன தொழிலாளியின்பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவரது உடல் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்