search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர்"

    • டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி மாநகராட்சியில் போராட்டம் நடத்தியது
    • மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.

    டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். 10 எம்.பி.க்கள் (7 லோக்சபா மற்றும் 3ராஜ்யசபா) மற்றும் 14 எம்.எல்.ஏ.க்கள் (டெல்லி சட்டசபையில் உள்ள மொத்தமுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் ஐந்தில் ஒரு பங்கு) மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

    இதன் மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 274 ஆக உள்ளது. ஒரு வேட்பாளருக்கு மேயர் பதவிக்கு 138 வாக்குகள் தேவை .இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 134 கவுன்சிலர்களும் பாஜக வுக்கு 105 கவுன்சிலர்கள் உள்ளனர்.



    ஆம் ஆத்மிக்கு 134 கவுன்சிலர்கள், 13 எம்எல்ஏக்கள் மற்றும் 3 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர் . இதில் 3 சுயேச்சை கவுன்சிலர்களில் ஒருவரின் ஆதரவு ஆம் ஆத்மிக்கு உள்ளது. இதனால் ஆம் ஆத்மிக்கு ஆதரவு 151 ஆக உயர்ந்தது.

    மேலும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு 9 காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆதரவும் கிடைக்க இருந்தது.ஆம் ஆத்மிக்கு மொத்த ஆதரவு 160 ஆக உயரும் சூழ்நிலையால் மேயர் தேர்தலில் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.




    டெல்லி மேயர்,துணை மேயர் பதவிக்கான தேர்தல் இன்று 26- ந் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் மேயர் தேர்தலை கவர்னர் அலுவலகம் நேற்று ரத்து செய்தது. டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

    ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் "தலித் விரோதி பாஜக" என்ற போஸ்டர்களை ஏந்தி கோஷமிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.

    • வெறிநாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
    • ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா அருகில் மாநகராட்சி சார்பில் வெறி நாய்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. மேயர் இந்திராணி தலைமை வகித்தார். ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு முகாமில் மண்டலம் 3-க்கு உட்பட்ட56, 57, 58 ஆகிய வார்டுகளில் திரியும் 111 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தெருக்களில் பொது மக்களை அச்சு றுத்தும் வகையிலும், போக்குவரத்து இடையூ றாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் நாய்கள் சுற்றி திரிகின்றன.

    பல்வேறு இடங்களில் பொதுமக்களை நாய்கள் கடித்தாக புகார்கள் வந்தன. இதையடுத்து ''நாய்கடி ரேபிஸ்" தடுப்பு நடவடிக்கையாக மாநக ராட்சி சார்பில் வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 18.9.2023 முதல் 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை அந்த அந்த பகுதிகளில் வரும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

    இம்முகாமில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் வினோத் குமார், உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேசு வரன், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் கவிதா, கால்நடை மருத்துவர் ஜெயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் ஆய்வு நடத்தி முடித்தார்
    • மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் ஆய்வு நடத்தி முடித்த நிலையில் இன்று காலை 52-வது வார்டுக்கு உட்பட்ட தெங்கம்புதூர், குளத்து விளை ஆகிய பகுதிகளில் மேயர் மகேஷ் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி நல அலுவலர், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.
    • ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது.

    கோவை:

    கோவை பீளமேட்டில் நடந்த ஓணம் விழாவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

    அப்போது அவர் அங்குள்ள மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மலையாள சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். தமிழக முதலமைச்சர் கூட மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதுபோல, தீபாவளிக்கும் முதலமைச்சர் வாழ்த்து கூறினால் அவர் அனைவருக்குமான முதலமைச்சராக செயல்படுவார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்.

    ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.

    கோவை மாநகராட்சி மேயர் மற்றும் குடும்பத்தினர் மீது இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் முதன்மையான பதவியில் இருப்பவரின் குடும்பத்தின் மீது இது போன்ற புகார்கள் வருகிறபோது, மாநில அரசு இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது எல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதமாக மாற்றுவது சர்வசாதாரணமாகி விட்டது. கோவை மேயர் குடும்பத்தினர் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. ஆதாரங்கள், சாட்சியங்கள் இருப்பதை வைத்து மத்திய அரசின் துறைகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு கட்சி பாகுபாடு பார்ப்பது கிடையாது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார்.
    • உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேயராக இருப்பவர் முனேஷ் குர்ஜார். இவரது கணவர் சுஹில்.

    பெண் மேயரின் கணவர் சுஷில் குர்ஜார் நிலம் குத்தகை வழங்கியதற்கு ஈடாக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளார். அவர் வீட்டில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

    சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார்.

    லஞ்ச ஒழிப்பு துறையினர் வீட்டில் சோதனை நடத்தி ரூ.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சுஷில் குர்ஜாருடன் அவரது உதவியாளர்கள் நாராயண் சிங், அனில் துபே ஆகியோரும் பிடிபட்டனர்.

    சுஷில் தனது உதவியாளர்கள் மூலம் நிலம் குத்தகைக்கு விண்ணப்பித்த நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் செய்தார். அவர்கள் பொறி வைத்து சுஷிலை பிடித்தனர்.

    அவரது உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    லஞ்சம் வாங்கிய போது மேயர் முனேஷ் குர்ஜார் இருந்தார். அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கருதியும், வழக்கு விசாரணையில் தலையிடக் கூடும் என்பதாலும் அவரை மேயர் பதவியில் இருந்து மாநில காங்கிரஸ் அரசு அதிரடியாக நீக்கி உத்தர விட்டது. இரவோடு இரவாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவர் கவுன்சிலர் பதவியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். 

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திருவிளக்கு பூஜையில் மாணவிகள் பங்கேற்றனர்.
    • மேயர் இந்திராணி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் உலக நலனுக் காக ஆடி வெள்ளியை யொட்டி 1,008 திருவிளக்கு பூஜை அனுஷாதேவி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வரவேற்றார். கல்லூரி தலைவர் ராஜ கோபால், உதவி தலைவர் ஜெயராம், கல்லூரி செயலாளர் விஜய ராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் (பொறுப்பு) பிரபு, அறக்கட்டளை உபயதாரர் மகாலட்சுமி தர்மராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு அழைப் பாளராக மதுரை மாநக ராட்சி மேயர் இந்திராணி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து 1,008 திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 2-வது ஸ்தானிகர் ரமேஷ் பட்டர் தலைமையில் கல்லூரி மாணவிகள், பேரா சிரியைகள் அனைவரும் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட னர். விழாஏற்பாட்டினை கல்லூரியின் பொருளாதார துறை உதவி பேராசிரியை விஷ்ணு சுபா, தமிழ்துறை உதவி பேராசிரியை பரிமளா ஆகியோர் செய்திருந்தனர்.

    • நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , துணை மேயர் பாலசுப்ரமணியம் , மண்டல தலைவர்கள் , மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் மாநகராட்சி கவுன்சிலர்கள் பயிற்சி முகாமிற்கு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மாநகராட்சி சார்பில் மேயர், துணை மேயர் , மண்டல தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வந்திருக்கக் கூடிய நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் உயர் அதிகாரிகள் யாரும் ஏன் வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிகழ்ச்சி ஒரு வாரத்திற்கு முன்னதாகவே திட்டமிட்ட நிலையில் திடீரென முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் ஆய்வு கூட்டம் தேதி குறிக்கப்பட்டதால் அங்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்து மாமன்ற உறுப்பினர்களை சமரசம் செய்தனர்.

    இதன் பின்னர் பள்ளி மேலாண்மை குழுவின் உரிமைகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.

    • பூங்காவை சீரமைக்க உத்தரவு
    • பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியில் மேயர் மகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தெரு இறுதியில் உள்ள வீட்டின் முன்பக்கம் நீர் உறிஞ்சி குழி அமைக்கவும், கழிவு நீரோடை மற்றும் கல்வெட்டு அமைக்கவும், பூங்காவிலுள்ள தண்ணீர் தொட்டியை பில்லர் போட்டு வைக்கவும் உத்தரவிட்டார். அந்த பகுதியில் உள்ள பூங்காவில் மின்விளக்குகள்அமைக்கவும், பூங்கா காம்பவுண்ட் ஓரம் உள்ள மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தை மக்கள் பயன்பாட்டிற்கான கட்டிடம் அமைக்கவும், வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் முறையாக நீர் உறிஞ்சி குழி அமைத்து பராமரிக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் ராணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட நிர்வாகிகள் ஆய்வின் போது உடனிருந்தனர்.

    நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் ரூ.9 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியையும் 48-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.27 லட்சம் செலவில் குளத்தூர் காலனி பகுதியில் அலங்கார தரை கற்கள், பரசுராமன் தெருவில் தார்சாலை அமைக்கும் பணி மற்றும் கழிவுநீர் ஒடை அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    • 4 -வது வார்டு மற்றும் 16-வது வார்டு பகுதியில் பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    • விழாவில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 4 -வது வார்டு மற்றும் 16- வது வார்டு பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ,முன்னாள் மண்டல தலைவர் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன் ,தமிழ்ச்செல்வி கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மாநகராட்சி மேயர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • தேவையான அளவு குடிநீர் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்தநிலையில் இன்று காலை அன்னூர் குறுக்கிலியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 4-வது குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தினமும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. தேவையான அளவு குடிநீர் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தலைமை பொறியாளர் வெங்கடேஷ், செயற்பொறியாளர் கண்ணன் ,இளநிலைபொறியாளர் கோவிந்த பிரபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர். 

    • அ.தி.மு.க. சார்பில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    • தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மார்சல் நேசமணியின் பிறந்தநாள் விழா

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம், தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மார்சல் நேசமணியின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு பகுதி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம். பி. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட், துணை மேயர் மேரி பிரின்சிலதா, காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், கவுன்சிலர் நவீன்கு மார், அனுஷாபிரைட், மேரி ஜெனட்விஜிலா, வக்கீல் மதியழகன் உட்பட பலர் நிகழச்சியில் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு, மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மண்டல தலைவர்கள் சிவபிரபு, செல்வன் மற்றும் கவுன்சி லர்கள் கலந்துகொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளர் ஆர்.ஜே.கே. திலக், மாணவரணி செயலாளர் மனோகரன், தொழிற்சங்க செயலாளர் சுகுமாறன், அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், கவுன்சிலர் அக்சயா கண்ணன், ஸ்ரீலிஜா, முன்னாள் நகர செயலாளர் சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நேசமணி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி மண்டல தலைவர் அன்பு கிருஷ்ணன் தலை மையில் மாலை அணி விக்கப்பட்டது. நிர்வாகிகள் தங்கவேல், பிரேம், யூஜின், மரிய ராஜன், சாமி நாடார், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 8 புதிய ஸ்மார்ட் வகுப்புகள் கட்டி கொடுத்துள்ளனர்.
    • ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 15.வேலம்பாளையம் நடுநிலை ப்பள்ளியில் வேலம்பாளையம் அறிவுத்திருக்கோவில் மற்றும் அட்சயா அறக்கட்டளை சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 8 புதிய ஸ்மார்ட் வகுப்புகள் கட்டி கொடுத்துள்ளனர்.இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு புதிய ஸ்மார்ட் வகுப்புகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாசலம், ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பத்மாவதி, செல்வராஜ், அனுசுயாதேவி, சண்முகசுந்தரம், பிரேமலதா , கோட்டா பாலு, அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×