என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "america president trump"

    • நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்
    • அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் மம்தானியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை இதன்மூலம் பெற்றார்.

    நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    குறிப்பாக மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப் அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், நியூயார்க் மேயர் மம்தானி நாளை வெள்ளை மாளிகையில் என்னை சந்திக்க உள்ளார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நியூயார்க் நகர கம்யூனிஸ்ட் மேயர் ஜோஹ்ரான் மம்தானி என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பு நாளை (நவம்பர் 21) ஓவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சில உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வந்தது.
    • உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக நுகர்வோர்கள் புகார்கள் அளித்து வந்தனர்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன.

    இறக்குமதி வரி உயர்ந்ததால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்தது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து சில உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வந்தது.

    இந்தநிலையில் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களின் மீதான வரிகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

    இந்த புதிய வரி விலக்கு வருகிற 20-ந்தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நிர்வாக உத்தரவு மூலம் தேயிலை, பழச்சாறு, கோகோ, மசாலா பொருட்கள், வாழைப் பழங்கள், ஆரஞ்சு, தக்காளி மற்றும் சில உரங்கள் உள்ளிட்ட பொருட்களின் மீதான வரிகள் நீக்கப்படுகின்றன.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறுமபோது," காபி போன்ற சில உணவுகள் பொருட்கள் மீதான வரியை நாங்கள் குறைத்துள்ளோம்" என்றார்.

    உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருவதாக நுகர்வோர்கள் புகார்கள் அளித்து வந்தனர். இது சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் உள்ளூர் தேர்தலில் எதிரொலித்தது.

    இந்த தேர்தல்களில் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்தது. இதற்கு விலைவாசி உயர்வு பிரச்சினைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாட்டிறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேயர் தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசிய மம்தானி டிரம்ப்பை கடுமையாக விமர்சித்தார்.
    • மம்தானி ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் நிறைய இழக்க நேரிடும்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

    ஏற்கனவே ஜோஹ்ரான் மம்தானி- டிரம்ப் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் மேயர் தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசிய மம்தானி டிரம்ப்பை கடுமையாக விமர்சித்தார். அதே போல் மம்தானியின் வெற்றியை டிரம்ப் விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் ஜோஹ்ரான் மம்தானிக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மம்தானி தனது வெற்றி உரையின்போது பேசியது மிகவும் கோபமான பேச்சு என்று நான் நினைக்கிறேன். அதில் நிச்சயமாக என் மீது கோபமாக இருந்தது. அவர் ஒரு மோசமான தொடக்கத்திற்கு சென்றுவிட்டார்.

    அவர் என்னிடம் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் அமெரிக்க அரசுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். மம்தானி ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் நிறைய இழக்க நேரிடும். நியூயார்க் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்.

    நியூயார்க்கில் கம்யூனிசத்தில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு விரைவில் புளோரிடா நகரம் அடைக்கலமாக இருக்கும்.

    ஆயிரம் ஆண்டுகளாக, கம்யூனிசம் என்ற கருத்து வேலை செய்யவில்லை. இந்த முறை அது வேலை செய்யுமா என்று நான் சந்தேகிக்கிறேன். அது உண்மையில் ஒருபோதும் வேலை செய்யவில்லை.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப் அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2-ம் கட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
    • ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழ போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்க அதி பர் டிரம்ப் மற்றும் கத்தார், எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த்தால் ஏற்பட்டு உள்ளது.

    ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் ஹமாஸ் அமைப் பினர் தங்கள் வசம் இருந்த 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்தனர். மேலும் உயிரிழந்த 4 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தனர்.

    இதற்கு ஈடாக 1968 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது. ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் பிணைக் கைதிகளின் உடல்கள் உள்ளன. அவற்றை விரைவாக ஒப்படைக்கவில்லை என்றால் காசாவுக்குள் அனுப்பப்படும் நிவாரண பொருட்களை தடுப்போம் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.

    இதையடுத்து நேற்று மேலும் 4 பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர். இன்னும் அவர்களிடம் 20 பிணைக்கைதிகளின் உடல்கள் உள்ளன.

    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2-ம் கட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழ போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை ஹமாஸ் இன்னும் ஏற்கவில்லை.

    இதைதொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினருக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்," நான் ஹமாசிடம் பேசினேன். அப்போது நீங்கள் ஆயுதங்களை களையப் போகிறீர்கள் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் நாங்கள் ஆயுதங்களை களையப் போகிறோம் என்று சொன்னார்கள்.

    அவர்கள் ஆயுதங்களை களையவில்லை என்றால், நாங்கள் அவர்களை நிராயுதபாணியாக்குவோம். அது விரைவாகவும் வன்முறையாகவும் நடக்கும். ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இதுபற்றி ஹமாசுக்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளது. அவர்களிடம் உள்ள பிணைக்கைதிகளின் உடல்களை உடனடியாக ஒப் படைக்க வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2-ம் கட்டம் தொடங்குகிறது" என்றார்.

    இந்த நிலையில் காசாவில் 6 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் அமைப்பினர் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டி 6 பேரையும் கொன்றுள்ளனர். அவர்களை சுட்டு கொல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. இதற்கிடையே 30-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஆயுதங்களை கைவிட டிரம்ப் எச்சரித்த நிலையில், பொதுவெளியில் 6 பேரை ஹமாஸ் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தனது அதிகாரத்தை மீறி ட்ரம்ப் வரிகளை விதித்து உள்ளதாக கருத்து.
    • வரி விதிப்பு குறித்து நீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த பேரழிவு என ட்ரம்ப் விமர்சனம்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.

    அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    இதற்கிடையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

    • இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 25 சதவீதம் வரி விதிப்பு.
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    வரிவிதிப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில் அறிவித்துள்ளார்.

    வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் இன்று சந்தித்துப் பேசினர். #KimJongUn #DonaldTrump #VietnamSummit
    ஹனோய்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிரம்ப் - கிம் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



    இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் இன்று இரவு சந்தித்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இரவு விருந்தில் பங்கேற்றனர்.

    டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #KimJongUn #DonaldTrump #VietnamSummit
    அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவருக்கும் இடையேயான 2-வது சந்திப்பு அடுத்த மாதம் இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. #KimJongUn #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சந்திப்புக்கு பின்னர் இரு நாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. இதனிடையே மீண்டும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரஸ்பர விருப்பம் தெரிவித்தனர்.



    அதன்படி இருநாட்டு தலைவர்கள் இடையேயான 2-வது சந்திப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. உச்சி மாநாட்டுக்கான தேதி மற்றும் இடம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில், அமெரிக்கா வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தலைநகர் வாஷிங்டன்னில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் டிரம்ப்-கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது அவர், “இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு அடுத்த 2 மாதங்களில் நடக்கும்” என தெரிவித்தார். #KimJongUn #DonaldTrump
    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்க உதவும் என ரஷியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். #TrumpPutinMeet #JonHuntsman
    வாஷிங்டன்:

    உலகின் வல்லரசு நாடுகளாக திகழ்வது அமெரிக்கா மற்றும் ரஷ்யா. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இரு நாட்டு அதிபர்கள் இடையிலான முதல் சந்திப்பு ஜூலை 16-ல் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடக்க உள்ளது என வெள்ளை மாளிகை கடந்த மாதம் அறிவித்தது.

    அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜான் பால்டன், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு, சிரியா, உக்ரைன் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்க உதவும் என ரஷியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹெல்சின்கியில் நடக்கவுள்ள டிரம்ப்-புடின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை குறைக்கும். அத்துடன், உலகளவிலும் நிலவி வரும் பெரும் பதட்டத்தை தணிக்க உதவும் என தெரிவித்துள்ளார். 
    #TrumpPutinMeet #JonHuntsman
    அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ஜூலை 5-ம் தேதி வடகொரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #KimJongUn #MikePompeo
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேசினர். இதையடுத்து,  வடகொரிய அதிபர் தங்களது நாட்டில் செயல்பட்டு வந்த அணு சோதனை மையங்களை மூடினார்.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ஜூலை 5-ம் தேதி வடகொரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியாவுடன் அதிபர் கிம் ஜாங் அன்னுடன் போட்ட ஒப்பந்தம் குறித்தும், அணு சோதனை மையங்களை அழிப்பது தொடர்பாகவும் பேசுவதற்காக அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக்  பாம்பியோ ஜூலை 5-ம் தேதி வடகொரியா செல்ல உள்ளார் என தெரிவித்துள்ளது .#KimJongUn #MikePompeo 
    சிங்கப்பூர் கேபெல்லா ஓட்டலில் நடைபெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது பேச்சுவார்த்தை முடிவடைந்தது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.

    டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர்.

    இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு நாட்டு தலைவர்களும் சுமார் 45 நிமிடம் பேசினர்.

    சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.



    இந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கூறுகையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது என தெரிவித்தார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பை உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் ஏராளமானோர் கண்டுகளித்தனர். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.

    டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர்.

    சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஓட்டலை சுற்றி பல்வேறு பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமானோர் இந்த சந்திப்பை கண்டனர்.



    தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் அந்நாட்டு மக்கள் இருவரது சந்திப்பையும் பார்த்தனர். இதேபோல், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் டிரம்ப் - கிம் சந்திப்பை பார்த்து ரசித்தனர்.

    வடகொரியா உருவான பின்னர், வடகொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்தித்திக் கொள்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    ×