என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Canada Prime Minister"

    • பாராளுமன்றத்திற்கும் மீண்டும் போட்டியிடப்போவதில்லை.
    • அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி.

    கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் விலகினார். அடுத்த பிரதமருக்கான போட்டியில் அமைச்சர் அனிதா ஆனந்த் உள்பட 9 பேர் களத்தில் குதித்தனர்.

    இந்த நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த், தான் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


    இதுதொடர்பாக அவர் கூறும்போது, பிரதமர் பதவிப் போட்டியில் இருந்து விலகியுள்ளேன். மேலும் பாராளுமன்றத்திற்கும் மீண்டும் போட்டியிடப்போவ தில்லை. தனக்கு முக்கிய அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி. என்னை எம்.பி.,யாக்கிய ஓக்வில்லி தொகுதி மக்களுக்கு உண்மையாகவே நன்றியுடன் இருக்கிறேன். கல்வித்துறைக்குத் திரும்புவதன் மூலம் எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க உள்ளேன் என்றார்.

    • டாக்டரான அவர் தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார்.
    • ரூபி தல்லா 3 முறை எம்.பியாக இருந்துள்ளார்.

    கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகியதையடுத்து புதிய பிரதமர் வருகிற மார்ச் மாதம் தேர்வு செய்யப்படுகிறார். இதில் பலர் களத்தில் குதித்துள்ளனர்.

    இந்த நிலையில் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்திய வம்சாவளி பெண் எம்.பியான ரூபி தல்லா அறிவித்துள்ளார். டாக்டரான அவர் தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார். ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த ரூபி தல்லா 3 முறை எம்.பியாக இருந்து உள்ளார்.

    இதற்கிடையே ரூபி தல்லா கூறும்போது, கனடாவில் 5 லட்சம் பேர் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. புலம்பெயர்ந்தோர் நம் நாட்டை மகத்தானதாக கட்டியெழுப்ப உதவியிருப்பதை நன்கு அறிவேன்.

    ஆனால் மனிதர்கள் கடத்தி வரப்படுவதை நாம் தடுக்க வேண்டும். கனடாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ஒவ்வொருவரையும் நான் நாடு கடத்துவேன். இப்போது தொடங்கி கனடா மீண்டு வருகிறது என்றார்.

    மெங்வான்ஜவ் கைதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிபட கூறி உள்ளார். #Huawei #MengWanzhou #ChinaTelecom #JustinTrudeau
    ஒட்டவா :

    சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ், கனடாவில் வாங்கூவர் நகரத்தில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை கனடா எடுத்தது.

    அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஈரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறியதாக கூறப்படுகிற விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த நடவடிக்கை, அமெரிக்கா, சீனா இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதாக அமைந்துள்ளது.

    இந்த கைது நடவடிக்கை மனித உரிமை மீறல் என சீனா கொந்தளித்து இருப்பதுடன், மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.

    சீனாவில் வலைத்தள ஆர்வலர்கள் மெங்வான்ஜவ் கைதை கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். இது அரசியல் விளையாட்டு என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

    இந்தநிலையில், மெங்வான்ஜவ் கைதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ஒரு அறிக்கையில் உறுதிபட கூறி உள்ளார். #Huawei #MengWanzhou  #ChinaTelecom #JustinTrudeau
    ×