என் மலர்
கனடா
- ஜி7 நாட்டின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு கனடாவில் நடைபெற்றது.
- இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.
ஒட்டாவா:
ஜி7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு கனடாவின் ஒண்டாரியாவில் உள்ள நயாகரா பகுதியில் நடைபெற்றது.
இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
இந்நிலையில், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்க் ரூபியோவை நேரில் சந்தித்து உரையாடினார்.
முன்னதாக கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மொபைல் ஆர்டர் பிக்கப் கவுண்டரில் நின்றிருந்தபோது காரணமின்றி தாக்கினார்.
- இளைஞரின் காலரைப் பிடித்து சுவரோடு தள்ளி, "நீ என் முன்னால் பெரிய ஆள் போல் காட்டிக்கொள்கிறாயா?" என்று கேட்கிறார்.
மேற்கத்திய நாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மொபைல் ஆர்டர் பிக்கப் கவுண்டரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் மீது நபர் ஒருவர் காரணமின்றி தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவில், இளைஞரை, போதையில் இருப்பது போல் தோன்றும் அந்த நபர் எவ்வித காரணமுமின்றி தள்ளிவிடுகிறார். இதனால் இளைஞரின் கைபேசி கீழே விழுந்தது.
இளைஞர் அமைதியாகத் தன் கைபேசியை எடுத்தபோது, ஆத்திரமடைந்த அந்த நபர் இளைஞரின் காலரைப் பிடித்து சுவரோடு தள்ளுகிறார். "நீ என் முன்னால் பெரிய ஆள் போல் காட்டிக்கொள்கிறாயா?" என்று அவர் இளைஞரிடம் கேட்பது பதிவாகியுள்ளது.
- குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு கொண்டு வந்துள்ளது.
- இதில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை குறைத்துள்ளது.
டொரண்டோ:
கனடாவில் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் கொண்டு வந்தது. இதில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை அதிரடியாகக் குறைத்தது.
இந்நிலையில், தற்காலிகமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மாணவர் விசாக்கள் தொடர்பான மோசடிகளைக் குறைக்கவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சர்வதேச மாணவர்களுக்கான அனுமதியை கனடா அரசு குறைத்துள்ளது.
கனடாவின் உயர்கல்வி நிலையங்களில் படிக்க அனுமதி கோரிய இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களில் சுமார் 74 சதவீதம் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
- உலகின் பிற நாடுகளுடன் உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளோம்.
- வெளிநாடுகளுடன் சிறந்த உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக கனடா வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையானது. இதையடுத்து கனடாவுடனான அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்தையை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
உலகின் பிற நாடுகளுடன் உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளோம். உலக பொருளாதாரத்தில் 60 சதவீத பங்களிப்பை வழங்கும் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதை விட சிறந்த இடம் வேறு இல்லை.
இந்தியாவுடனான உறவில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், இந்தியாவுடனான வர்த்தக உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது இல்லை. ஆனால் எங்களது வெளியுறவு துறை மந்திரி உள்ளிட்ட பிற மந்திரிகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளுடன் சிறந்த உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் தன்மையை மாற்ற வேண்டும். இது ஒரே இரவில் நடக்காது என எனக்கு தெரியும். நாங்கள் மிக விரைவில் முன்னேறி வருகிறோம் என்றார்.
- முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை.
- உலகின் மிகப்பெரிய ஆடை மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான Canam குழுமத்தை அவர் நிறுவினார்
கனடாவில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலதிபரும், Canam இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
திங்கட்கிழமை காலை, வீட்டின் வெளியே அவர் தனது காரில் அமர்ந்திருந்தபோது மர்ம நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, காரில் இருந்த சாஹ்சி காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.
தர்ஷன் சிங் சாஹ்சி பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1991 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்து தொழிலதிபராக உயர்ந்தார்.
உலகின் மிகப்பெரிய ஆடை மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான Canam குழுமத்தை அவர் நிறுவினார். இது 40க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. தனது நிறுவனத்தில் ஏராளமான பஞ்சாபிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார்.
- மெக்டொனால்ட்ஸ் கடையில் இந்திய ஊழியர் பணியாற்றி வந்தார்.
- வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கனடாவில் ஓக்வில்லில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடையில் இந்திய ஊழியர் ஒருவர் இனவெறி கருத்துக்களால் தவறாக நடத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவில் ஒரு இளைஞர் இந்திய ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, "உடனடியாக உங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்.. அருவருப்பான இந்தியரே" என்று கூறுவது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது கவலையை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே இங்கிலாந்தின் ஓல்ட்பாரி நகரத்தில் கடந்த வாரம் 20 வயதுடைய இந்திய வம்சாவளி சீக்கிய பெண் சாலையில் நடந்துசென்றபோது 2 இளைஞர்கள் அவரை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண்ணிடம் உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என ஆக்ரோஷமாக கூறி உள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச கோர்ட்டில் இஸ்ரேல் பிரதமர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
- இதில் கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சர்வதேச கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது.
ஒட்டாவா:
காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடங்குவர். எனவே போர்க்குற்றம் செய்ததாக நெதர்லாந்து சர்வதேச கோர்ட்டில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இதில் கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சர்வதேச கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் இஸ்ரேல்-காசா போர் முடிவுக்கு வந்தது. அதேசமயம் அவருக்கு எதிரான கைது வாரண்ட் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு பெஞ்சமின் நேதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி குற்றம்சாட்டினார். எனவே கனடாவில் நுழைந்தால் சர்வதேச கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தும் விதமாக அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் சர்வதேச கோர்ட்டின் பிடிவாரண்டை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது.
- கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஒட்டாவா:
கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார்.
கப்ஸ் கஃபே என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த ஜூன் மாதம் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது
தொடர்ந்து ஆகஸ்ட் மாதமும் இந்த ஓட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக கபில் சர்மா ஓட்டலில் மீண்டும் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், குல்வீர் சித்து, கோல்டி தில்லோன் உள்ளிட்ட குற்றவாளி குழுக்க்கள் பொறுப்பேற்றுள்ளன.
இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி அறிக்கை வெளியிட்டார்.
- இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பெற்றார்.
இந்தியாவில் இருந்து செயல்படும் சர்வதேச குற்றக் குழுவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடா அரசு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தின்படி இன்று (செப்டம்பர் 29) இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனடா பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கிச்சூடு, கொலைகள் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல், அச்சத்தை பரப்புதல், வெளிநாட்டு வாழ் இந்திய சமூகத்தினரை குறிவைத்து மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் முக்கிய செயல்பாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் இனி அந்நாட்டில் பிஷ்னோய் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், நிதிகளை முடக்கவும் கனடா அரசுக்கு அதிகாரம் கிடைக்கிறது.
முன்னதாக, கனடாவின் சர்ரேயில் உள்ள பாலிவுட் பிரபலம் கபில் ஷர்மாவின் கஃபே மீது இரண்டு முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு இந்தக் கும்பலைச் சேர்ந்த கோல்டி டில்லான் என்பவர் பொறுப்பேற்றதாகக் கூறப்பட்டது. கும்பலின் தலைவன் லாரான்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் இருந்தபடி தனது கும்பலை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- இது வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
- அந்த பணியாளர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் உள்ளனர்.
அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா விண்ணப்ப கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்தார்.
எச்-1பி விசா பெறுபவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இதனால் இக்கட்டண உயர்வால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு ஊழியர்களை கட்டுப்படுத்த விசா விதிகளை அமெரிக்கா கடுமையாக்கி வரும் நிலையில், சீனா புதிய விசா நடைமுறையை அறிவித்தது.
அறிவியல், தொழில்நுட் பம், பொறியியல், கணிதம் சார்ந்த துறைகளில் உலக அளவில் உள்ள சிறந்த ஊழியர்களை ஈர்க்கும் நோக்கில் கே விசாவை அறிமுகம் செய்துள்ளது. இது வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் அதிகமான எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இனி விசா நீட்டிப்பு கிடைக்காது. இவர்கள் திறமையானவர்கள். அவர்களுக்கு கனடாவில் ஒரு வாய்ப்பு வழங்கி பயன்படுத்தி கொள்வோம்.
விரைவில் இது குறித்து ஒரு விசா சலுகையை வழங்குவோம். அந்த பணியாளர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் உள்ளனர். மேலும் அவர்கள் கனடாவில் வேலைக்கு வர தயாராக உள்ளனர்.
கனடா அரசாங்கம் இந்த வகையான திறமைகளை உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுகுறித்து தெளிவான சலுகை விரைவில் இருக்கும்" என்று கூறினார்.
கனடா பிரதமர் கார்னி அறிவிப்பின்படி விசா சலுகை அளிக்கப்பட்டால் அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணமாக இருக்கும்.
ஆயிரக்கணக்கான உயர் திறமையான இந்திய நிபுணர்களுக்கு ஒரு தெளிவான மாற்று இடமாக கனடா இருக்கும்.
- குட்டி ஜீப்பை பிரதான சாலையில் ஓட்டி சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார்.
- பார்பி காரை சாலையில் ஓட்டிய நபரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கனடாவில் மதுபோதையில் குழந்தைகள் ஓட்டும் குட்டி ஜீப்பை பிரதான சாலையில் ஓட்டி சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பார்பி ஜீப்பை சாலையில் ஓட்டி வந்த லின்கோயின் என்பவரை போலீசாரை சாலையில் வைத்தே கைது செய்தனர்.
பார்பி காரை சாலையில் ஓட்டிய நபரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
- சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுகின்றன.
- பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் கனடாவில் நிதி உதவி பெறுவது அம்பலமாகி உள்ளது.
கனடா நிதி அமைச்சகம் 'கனடாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி மதிப்பீடு-2025' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், "கனடிய குற்றவியல் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுவதாக உளவுத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி மற்றும் வங்கிகள் மூலம் இந்த நிதி திரட்டல் நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான பஞ்சாபில் ஒரு சுதந்திர அரசை நிறுவுவதற்காக காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை கூறுகிறது.
மேலும், பயங்கரவாத குழுக்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பெறப்பட்ட நிதியை பயன்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது.
பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.
முன்னதாக, இந்திய அரசாங்கம் கனேடிய அரசாங்கம் காலிஸ்தானியர்களை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.






