என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Powerful Passport"

    • தொடர்ந்து 7வது ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்துள்ளது.
    • சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை 2வது இடத்தில் உள்ளது.

    ஒட்டாவா:

    உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை கனடாவைச் சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் என்ற பிரபல கடன் வழங்கும் சர்வதேச நிறுவனம் நேற்று வெளியிட்டது.

    ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

    இந்தப் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பாஸ்போர்ட் 179 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய அணுகலைப் பெற்றுள்ளது. தொடர்ந்து 7வது ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்து வருகிறது.

    சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை 2வது இடத்தில் உள்ளது.

    இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் சரிவைச் சந்தித்துள்ளன. விசா நெறிமுறைகளை கட்டுப்படுத்தியதால் இந்த நாடுகள் சரிவைச் சந்தித்தன.

    இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 67-வது இடம் தரப்பட்டுள்ளது.

    அண்டை நாடான இலங்கை 84வது இடத்திலும், பாகிஸ்தான் 91வது இடத்திலும் நீடிக்கிறது.

    • உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
    • பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான் ஆகியவை 2-வது இடத்தில் உள்ளன.

    லண்டன்:

    லண்டனில் செயல்பட்டு வரும் ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் அமைப்பு உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

    ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், 6 நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

    பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகியவை 2-வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 192 நாடுகளுக்குப் பயணிக்கலாம் அல்லது அந்த நாடுகளுக்குப் பயணித்து, அங்கு சென்று இறங்கியதும் விசா பெற்றுக் கொள்ளலாம்.

    ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து லக்செம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை 3-வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 191 நாடுகளுக்குப் பயணிக்கலாம்.

    இந்தப் பட்டியலில், இந்தியா 82-வது இடத்தில் உள்ளது. செனகல் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவையும் 82வது இடத்தை இந்தியாவுடன் பகிர்ந்துள்ளன.

    இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×