என் மலர்
நீங்கள் தேடியது "Racist attack"
- மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மொபைல் ஆர்டர் பிக்கப் கவுண்டரில் நின்றிருந்தபோது காரணமின்றி தாக்கினார்.
- இளைஞரின் காலரைப் பிடித்து சுவரோடு தள்ளி, "நீ என் முன்னால் பெரிய ஆள் போல் காட்டிக்கொள்கிறாயா?" என்று கேட்கிறார்.
மேற்கத்திய நாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மொபைல் ஆர்டர் பிக்கப் கவுண்டரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் மீது நபர் ஒருவர் காரணமின்றி தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவில், இளைஞரை, போதையில் இருப்பது போல் தோன்றும் அந்த நபர் எவ்வித காரணமுமின்றி தள்ளிவிடுகிறார். இதனால் இளைஞரின் கைபேசி கீழே விழுந்தது.
இளைஞர் அமைதியாகத் தன் கைபேசியை எடுத்தபோது, ஆத்திரமடைந்த அந்த நபர் இளைஞரின் காலரைப் பிடித்து சுவரோடு தள்ளுகிறார். "நீ என் முன்னால் பெரிய ஆள் போல் காட்டிக்கொள்கிறாயா?" என்று அவர் இளைஞரிடம் கேட்பது பதிவாகியுள்ளது.
- நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.
- அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்ல.
அயர்லாந்தில், இந்திய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளனது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டூப்லினில் மூன்று இளைஞர்களால் ஒரு இந்தியர் தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாலை 5:30 மணியளவில் ஃபேர்வியூ பார்க்கில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் எட்டு தையல்கள் போடப்பட்டன.
தனக்கு நேர்ந்ததை விவரித்த பாதிக்கப்பட்டவர், "நான் பூங்காவிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மின்சார ஸ்கூட்டரில் வந்த ஒரு இளைஞன் என் அருகில் வந்து என் வயிற்றில் உதைத்தான்.
நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.
நான் தரையில் விழுந்த பிறகும் அவர்கள் என்னைத் தொடர்ந்து தாக்கினர். அவர்களில் ஒருவர் தனது ஸ்ட்டீல் தண்ணீர் பாட்டிலால் என் கண்ணில் அடித்தார்" என்று தெரிவித்தார்.
மேலும் அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்லை என்றும் 2 இளைஞர்கள் மட்டும் தனக்கு உதவி செய்து காவல்துறைக்கு தகவல் அளித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார். சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், வரும் நாட்களில் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக 6 வயது இந்திய சிறுமி, சிறுவர்கள் கும்பலால், " உனது நாட்டுக்கே திரும்பிப் போ' என கூறி தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவை ஆன்லைனிலும் பரப்பப்பட்டன.
- காவல்துறை இதை ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதி விசாரித்து வருகிறது.
அயர்லாந்தில் இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் அயர்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) அயர்லாந்தின் டப்ளின் நகரில் தல்லாக்ட் பகுதியில் வைத்து அவர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அவரது ஆடைகளை கிழித்து அந்த கும்பல் ரத்த காயங்கள் ஏற்படும்படி தாக்கியுள்ளது.
குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவை ஆன்லைனிலும் பரப்பப்பட்டன.இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு ஆளானவர் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட மீட்கப்பட்டு, தல்லாக்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காவல்துறை இதை ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதி விசாரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டவரை சந்தித்த உள்ளூர் கவுன்சிலர், அவர் அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தாக்குதலை மோசமானது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என உள்ளூர் அரசியல் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.
- மாட்ரிட் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்ரிட் வீரர் வினிசியஸ் கூறினார்.
- இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாகவும் வினிசியஸ் கூறினார்.
பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் 77-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் இளம் வீரர் லமின் யமால் ஒரு கோல் அடித்தார். கோல் அடித்த உற்சாகத்தில் அதனை கொண்டாடும் விதமாக ஜெர்சியில் இருக்கும் அவரது பெயரை சுட்டிக் காட்டி கொண்டாடினார். உடனே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவர் மீது இனவெறி முழக்கங்களை எழுப்பினர். 17-வது வயதான வீரருக்கு எதிராக ரசிகர்கள் இனவெறி முழுக்கம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பார்சிலோனா அணி வீரர் லமின் யமால் மீது இனவெறி முழக்கங்கள் எழுப்பிய மாட்ரிட் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
- மைதானத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் திட்டியதாக சில இந்திய ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.
- இனவெறி குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பஸ்டனில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.
4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் குவித்துள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டத்தின் போது இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளது. மைதானத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் திட்டியதாக சில இந்திய ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த இனவெறி குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மேரீஸ் வில்லே பகுதியை சேர்ந்தவன் ஜான் கிரைன். சம்பவத்துன்று இவன் ஒரு கடைக்கு சென்று காபி குடித்தான். அதற்கு பணம் தராமல் வெளியே செல்ல முயன்றான். அங்கு சீக்கியர் ஒருவர் பணியில் இருந்தார். அவரிடம் குடித்த காபிக்கு பணம் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜான் கிரைன் சீக்கியரை தாக்கினான்.
மேலும் சூடான காபியை அவரது முகத்தில் ஊற்றி அவமதித்தார். இத்தாக்குதலில் சீக்கிய ஊழியர் காயம் அடைந்தான். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் கிரைன் அங்கிருந்து ஓடிவிட்டான். மறுநாள் அவனை போலீசார் கைது செய்தனர்.
அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எனக்கு முஸ்லிம்களை பிடிக்காது. அவரை முஸ்லிம் என கருதி தாக்கினேன் என கிரைன் கூறினான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். திருட்டு- தாக்குதல் மற்றும் இனவெறி உள்ளிட்ட குற்றப்பிரிவுகளில் அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூபா கவுண்டி சிறையில் அவன் அடைக்கப்பட்டான். #Racistattack
அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் ஹர்விந்தர்சிங் டாட் என்ற சீக்கியர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அங்குள்ள ஒரு கடையில் பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு ஆண்ட்ரூ ராம்சே என்ற 24 வயது வெள்ளைக்கார வாலிபர் வந்தார். அவரிடம் சிகரெட் தயாரிக்க ரோலிங் பேப்பர் கேட்டார். அதற்கான அடையாள அட்டை இல்லாததால் அவர் தர மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஹர்விந்தர் சிங்கிடம் தகாதமுறையில் நடந்து கொண்டார். அவரது தாடியை பிடித்து இழுத்து முகத்தில் குத்தினார். தொடர்ந்து அடித்து உதைத்து கீழே தள்ளினார். அவரது முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இருந்தும் அவர் விடவில்லை. தொடர்ந்து இனவெறி தாக்குதலில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் விரைந்து வந்துனர். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் மீது இனவெறி தாக்குதல் பிரிவில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #Racistattack






