என் மலர்

  நீங்கள் தேடியது "Tripura"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக உனகோட்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், முதலமைச்சர் மாணிக் சஹா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

  அகர்தலா:

  திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டம் குமார்காட் நகரில் இன்று ஜெகன்னாதர் ரத யாத்திரை நடைபெற்றது. இரும்பினால் செய்யப்பட்ட ரதத்தை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். ரதம் சவுமுகானி பகுதியில் சென்றபோது உயர் அழுத்த மின் கம்பியில் ரதம் உரசியது. அப்போது ரதத்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் ரதம் இழுத்த பக்தர்கள் பலத்த மின் தாக்குதலுக்கு உள்ளாகி தூக்கி வீசப்பட்டனர். அத்துடன் ரதமும் தீப்பற்றியது.

  இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குமார்காட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக உனகோட்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

  இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், முதலமைச்சர் மாணிக் சஹா தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். அத்துடன், நேரில் பார்வையிடுவதற்காக குமார்காட் சென்றுகொண்டிருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இடைத்தேர்தல் முடிவு வெளியானவுடன் காங்கிரஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல்.
  • மோதலில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

  அகர்தலா:

  திரிபுரா மாநிலத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அகர்தலா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுதிப் ராய் பர்மன் வெற்றி பெற்றார்.

  இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில் 19 பேர் காயம் அடைந்தனர்.

  திரிபுராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்ஹா செங்கல்லால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பாஜக ஆதரவாளர்களால் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அம்மாநில காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் ஆசிஷ் குமார் சாஹா தெரிவித்துள்ளார்.

  மோதலில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. மோதலுக்குப் பிறகு காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

  காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலில் பாஜக  ஆதரவாளர்கள் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக திரிபுரா தகவல் மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில், திரிபுராவில் காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

  காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பாஜக குண்டர்கள் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். மக்கள் எங்களுடன் உள்ளனர். இந்த தாக்குதலை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தது வெட்கக்கேடு. அந்த குண்டர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். இவ்வாறு தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திரிபுரா மேற்கு தொகுதியில் 168 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்றும், 12-ந் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. #LokSabhaElections2019
  புதுடெல்லி:

  திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அங்கு திரிபுரா மேற்கு, திரிபுரா கிழக்கு என்ற 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த மாதம் 11-ந் தேதி திரிபுரா மேற்கிலும், 18-ந் தேதி திரிபுரா கிழக்கிலும் வாக்குப்பதிவு நடந்தது.

  இதில், திரிபுரா மேற்கு தொகுதியில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்தன. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல், வாக்காளர்களை அச்சுறுத்துதல் போன்ற முறைகேடுகளில் பா.ஜனதாவினர் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன.  இதையடுத்து, திரிபுரா மேற்கு தொகுதியில் 26 சட்டசபை தொகுதிகளில் அமைந்துள்ள 168 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த 168 வாக்குச்சாவடிகளிலும், நாடாளுமன்ற 6-வது கட்ட தேர்தலுடன் சேர்த்து, வருகிற 12-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

  இதேபோல் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளிலும், புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #TripuraElection

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திரிபுரா முதல் மந்திரி பிப்லப் குமார் தேப், பிரசார கூட்டங்களில் தேர்தல் விதிகளை மீறி காங்கிரஸ் கட்சியினரை தகாத வார்த்தைகளால் பேசுவதாக அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். #TripuraCM #Biblapkumardep #Congresscomplaints
  அகர்தலா:

  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை முழுவதுமாக அறிவித்த நிலையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றன. மேலும் சில கட்சியினர் பிரச்சார பொதுக் கூட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரிபுரா முதல் மந்திரி பிப்லப் குமார் தேப், காங்கிரஸ் கட்சியினரை ‘கொள்ளையர்கள்’, ‘சாத்தான் கூட்டத்தினர்’, ‘தரகர்கள்’, ‘தந்திர நரிகள்’ என தகாத வார்த்தைகளினால் கடுமையாக தாக்கி பேசினார்.

  இந்த செயலுக்கு திரிபுரா முதல் மந்திரி பிப்லப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். இதுவரை மன்னிப்பு கேட்காத நிலையில், திரிபுரா காங்கிரஸ் கட்சியினர் இன்று  பிப்லப்  மீது புகார் கொடுத்துள்ளனர்.

  இது குறித்து திரிபுரா காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் தப்பாஸ் டே கூறியதாவது:-

  மார்ச் 20 அன்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டங்களில் பிப்லப், வாக்காளர்களை மிரட்டும் வகையில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால், திரிபுரா மற்றும் அகர்தலா என்றுமே நவீன நகரங்களாக மாற சாத்தியமே இல்லை என கூறியுள்ளார்.  இலவச கேஸ் சிலிண்டர் சேவை நிறுத்தப்பட்டு, பணம் வசூலிக்கப்படும். மேலும் மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரிசி வாங்குவதை இந்திய உணவு கழகம் நிறுத்தி விடும் எனவும் பிப்லப் பேசினார். மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதுடன், காங்கிரஸ் கட்சியினரையும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார்.

  இவ்வாறு தப்பாஸ் டே கூறினார்.#TripuraCM #Biblapkumardep #Congresscomplaints
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். #TripuraCivicBypolls #BJP #PMModi
  அகர்தலா:

  திரிபுரா மாநிலத்தில் 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது.

  உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சியின் அனைத்து மேயர் மற்றும் தலைமைப் பொறுப்புகளை பாஜக கைப்பற்றி அசத்தியுள்ளது. 
   
  இந்த வெற்றியை தொடர்ந்து, திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லாப் குமார் தேபுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

  இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடி அம்மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த திரிபுரா மக்களுக்கு நன்றி. இந்த வெற்றிக்காக அரும்பாடுபட்ட கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என பதிவிட்டுள்ளார். #TripuraCivicBypolls #BJP #PMModi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படும் மே தினத்தை மாநில அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து நீக்கிய திரிபுரா மாநில பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Tripura #MayDay
  அகர்தலா:

  சர்வதேச அளவில் உழைப்பாளர் தினமாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தின் பாஜக அரசு உழைப்பாளர் தினத்தை மாநில பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பலதரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் வலுத்து வருகிறது.

  இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அம்மாநில எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, மே தினத்தை மாநில பொது விடுமுறை பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.  ஆளும் பாஜக அரசின் இந்த செயலானது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரானது என்றும், இதன்மூலம் பாஜக தொழிலாளர்களை எப்படி பார்க்கிறது என புரிந்துகொள்ள முடியும் எனவும் திரிபுரா மாநில முன்னாள் தொழிலாளர் நலத்துறை மந்திரி மனிக் டே கடுமையாக சாடியுள்ளார்.

  மேலும், இதற்கு முன்னதாக இந்தியாவின் எந்த மாநிலமும் மே தினத்தை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதாக கேள்விப்பட்டது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Tripura #MayDay 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திரிபுரா மாநிலத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 258.5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பாதுகாப்பு படை மற்றும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். #Tripura #CannabisCaptured
  அகர்டலா:

  திரிபுரா மாநிலம் ஆடாம்பூர் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இந்த தகவலை அடுத்து, போலீசாருடன் அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

  அப்போது வீட்டில் சிறிய அளவில் சுரங்கம் ஒன்றை ஏற்படுத்தி அதனுள் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்.  கைப்பற்றப்பட்ட கஞ்சா 258.5 கிலோ அளவிலான எடை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் மீது போதைமருந்து தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #Tripura #CannabisCaptured
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் திரிபுரா அணியை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி பெற்றது. 7-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 5-வது வெற்றியாகும். #VijayHazareTrophy
  சென்னை:

  விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, திரிபுராவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த திரிபுரா அணி 46.4 ஓவர்களில் 196 ரன்களுக்கு சுருண்டது.

  தமிழகம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளும், ரஹில் ஷா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய தமிழக அணி 31.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 197 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  அபினவ் முகுந்த் 131 ரன்கள் விளாசி (100 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 7-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 5-வது வெற்றியாகும். தமிழக அணி அடுத்த லீக்கில் வருகிற 7-ந்தேதி ஜம்மு-காஷ்மீரை சந்திக்கிறது. #VijayHazareTrophy


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திரிபுரா மாநிலத்தின் காலியாக உள்ள 3 ஆயிரத்து 386 இடங்களுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #TripuraPanchayatByelections
  அகர்தலா:

  திரிபுரா மாநிலத்தில் சுமார் 3 ஆயிரத்து 386 உள்ளாட்சி இடங்கள் காலியாக உள்ளன. இங்கு வேட்பாளர்கள் இறப்பு மற்றும் ராஜினாமா போன்ற காரணங்களால் அந்த இடங்கள் காலியாகின.

  பஞ்சாயத்து, பஞ்சாயத்து சமிதி மற்றும் ஜில்லா பரிஷத் என காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, செப்டம்பர் 30-ம் தேதி உள்ளாட்சிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 3-ம் தேதி எண்ணப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

  இதுதொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. #TripuraPanchayatByelections
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு அதிகாரிகள் பணி நேரத்தில் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிய கூடாது என திரிபுரா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
  அகர்தலா:

  திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில அரசு அதிகாரிகள் உடைக் கட்டுப்பாடு தொடர்பாக முதன்மை செயலாளர் சுஷில் குமார் விடுத்துள்ள சுற்றறிக்கையில், ``பொதுவாக அரசு அதிகாரிகள் உடைக் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

  மாநிலத்தில் அரசு அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மேலும், பல அரசு அதிகாரிகள்  அலுவலக நேரத்திலும், ஆலோசனைக் கூட்டங்களிலும் மொபைல் போன்களை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.

  எனவே, திரிபுராவில் அரசு அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கப்படுகிறது. மேலும், அலுவலக ஆலோசனைக் கூட்டங்களின்போது அரசு அதிகாரிகள் தங்களது மொபைல் போன்களை அணைத்து வைக்க வேண்டும். இதை, உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’’ என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print