search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tribal"

    • 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8 லட்சம் பழங்குடிகள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனா்.
    • கூடலூா், ஊட்டி பகுதிகளில் ரூ.25 கோடி செலவில் 3 விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

    ஊட்டி,

    ஊட்டியில் சர்வதேச பூா்வீக குடிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

    இதனை தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    உலகில் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இயற்கை வளங்களைப் பேணிக் காப்பதில் பழங்குடிகள் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனா். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8 லட்சம் பழங்குடிகள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனா்.

    பழங்குடிகளின் மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருவது வருத்தம் அளிப்பதாக உள்ளது. தமிழக அரசு பழங்குடியினா் ஆணையம் அமைத்து உள்ளது. இதன் மூலம் பழங்குடிகளின் பிரச்னைகளுக்கு விரைவாக தீா்வு காண முடியும்.

    தமிழகத்தில் உள்ள 48 பழங்குடியின தொழிற்கல்விக் கூடங்கள் மூலம் 30 ஆயிரம் மாணவா்கள் படித்து வருகின்றனா். அதேவேளையில், பழங்குடி மாணவா்களிடையே பள்ளி இடைநிற்றல் அதிகம் உள்ளது. திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் ரூ.40 கோடியில் கல்லூரி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. பழங்குடி மாணவா்களுக்கு இணையவழி நூலகமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 9 மாணவா்கள் வெளிநாடுகளில் கல்வி பயின்று வருகின்றனா்.

    தாட்கோ நிறுவனம் மூலம் பழங்குடி மாணவா்களுக்கு ஓட்டல் மேனேஜ் மெண்ட் உள்ளிட்ட படிப்புகள் உடன் வேலையும் பெற்று தரப்படுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.539 கோடி செலவில் 14 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கூடலூா், ஊட்டி பகுதிகளில் ரூ.25 கோடி செலவில் 3 விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிந்து, அங்கு மாணவ, மாணவியா் சோ்க்கப்படுவாா்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தோடா் பழங்குடியின மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அமைச்சா் கயல்விழி செல்வராஜ் அவா்களுடன் சோ்ந்து நடனம் ஆடினாா். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊராட்சி.ஒனாறிய தலைவர்கள் மாயன், கீர்த்தனா மற்றும் பழங்குடியின தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பழங்குடியினர் சான்று சிறப்பு முகாம் நடந்தது.
    • சான்றிதழ் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே வைகை நகர், லீலாவதி நகர், வேந்தோணி உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை இல் லாததால் ஜாதி சான்றிதழ் பெறுவதில் மிகவும் சிரமம் பெற்றனர்.

    இதனை அடுத்து நரிக் குறவர் இன மக்கள் பழங் குடியினர் என சாதி சான்றி தழ் பெறுவதற்கு ஆவணங் களை மாற்றுவதற்கான சிறப்பு முகாம் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் ரவி தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக் காளர் அட்டை உள்ளிட்டவற் றில் மாற்றம் செய்வதற்காக தங்களது ஆவணங்களை சமர்ப்பித்தனர். இவர் களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கிடைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சிறப்பு முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் சம்பத், மண்டல தாசில்தார் அமர்நாத் மற்றும் கிராம நிர் வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க பள்ளிகளில் முகாம் நடைபெற்றது.

    சேலம்:

    2022-2023-ம் கல்வி யாண்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி களில் 9, 10-ம் வகுப்பு மற்றும் 11, 12-ம் வகுப்பு களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியர்களுக்கான பிரிமெட்ரிக், போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் கட்டாய மாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலமாக விவரம் அனுப்பி வைக்கப்பட்டு உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், வங்கி கணக்கு நடப்பில் உள்ளதை உறுதி செய்திடவும், புதிய அஞ்சல வங்கி கணக்குகள் தொடங்க சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி கட்டணம் ஏதும் இல்லாமல் மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் பெற்றோ ரின் தொலைபேசி எண் கொண்டு அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கிட அஞ்சல் அலுவலர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே முகாம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இவ்வசதியினை மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஈரோட்டில் பிளஸ் - 2 பொதுத் தேர்வில் 95.72 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.11 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இதில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற துறைகளை ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் தேர்ச்சி விகிதம் உள்ளது.

    இதுகுறித்து பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் தேர்வு நடந்த 5 பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஆசனூர்-74 சதவீதம், பர்கூர்-80 சதவீதம், கெத்தேசால்-75 சதவீதம், தலமலை-44 சதவீதம், பிளஸ்-2 தேர்வில் ஆசனூர்-68 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதும், பூர்த்தி செய்யாததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பர்கூர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை 418 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 418 பேருக்கு ஒரு தமிழாசிரியர், ஒரு ஆங்கில ஆசிரியர் உள்ளனர்.

    இது குறித்து கேட்டால் இந்த பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையில் வருவதில்லை வேறு துறைகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை தான் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது.

    பள்ளி கல்வித் துறையில் காலிப்பணியிடங்களில் 95 சதவீதத்தை நிரப்பி விட்டு மீதி ஆசிரியர்கள் இருந்தால் இது போன்ற பிற துறை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இதுபோன்ற பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தற்போது பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    அந்தியூர்:

    நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பெங்களூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு யோகா செய்கிறார். இதையடுத்து பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் ராஜேஷ்குமார் ஒருங்கி ணைந்து வழி நடத்தினார். இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×