என் மலர்
இந்தியா

ஆந்திராவில் அரசுப் பள்ளியில் ஆசிரியைக்கு மசாஜ் செய்த பழங்குடியின மாணவிகள் - வீடியோ வைரல்
- பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
- மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், மேலியபுட்டி மண்டலத்தில் பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
இங்கு பாட நேரத்தில் ஆசிரியை ஒருவர் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, மாணவிகள் அவருக்குக் கால்கள் பிடித்துவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் தான் முழங்கால் வலியால் அவதிப்பட்டதாகவும், அன்றைய தினம் கீழே விழுந்ததாகவும், மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார்.
இதுதொடர்பாக விசாரணை முடியும் வரை அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, மாணவர்களைத் தனது காரைக் கழுவவும் பிற தனிப்பட்ட வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தியதற்காகவும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






