அரசு பழங்குடியினர் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.
அரசு பழங்குடியினர் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
Published on

அந்தியூர்:

நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பெங்களூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு யோகா செய்கிறார். இதையடுத்து பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் ராஜேஷ்குமார் ஒருங்கி ணைந்து வழி நடத்தினார். இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com