என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » dalit
நீங்கள் தேடியது "dalit"
- ராகுல் காந்தி, இந்தியாவில் தலித்துகள், முஸ்லிம்கள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
லக்னோ :
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் தலித்துகள், முஸ்லிம்கள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
அவரது கருத்தை உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, கோடிக்கணக்கான தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலை, அவரது வாழ்க்கைக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் கூறி இருப்பது கசப்பான உண்மை ஆகும். இதற்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் பிற கட்சிகள்தான் பொறுப்பு ஆவார்கள்" என கூறி உள்ளார்.
ராமபக்தனான அனுமானை தலித், ஜாட், முஸ்லிம் என பலர் சொந்தம் கொண்டாடிவரும் நிலையில் பா.ஜ.க. விளக்கம் அளிக்க வேண்டுமென மதுரா ஜீயர் வலியுறுத்தியுள்ளார். #AdhokshajanandDeo #LordHanuman #Mathuraseer
லக்னோ:
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும்கூட.
இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை கிழக்கு முதல் மேற்குவரை அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்க அனுமார் பாடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து, அம்மாநில மத விவகாரங்கள்துறை மந்திரி லக்ஷ்மி நாராயண் சவுத்ரி அனுமான் ஜாட் வம்சத்தை சேர்ந்தவர். அதனால்தான் அவர் மற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சகித்துகொள்ள முடியாமல் ராமனுக்கு ஆதரவாக நின்றார் என குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஆளுக்கொரு மாதிரியாக அனுமானை உரிமை கொண்டாடும் வகையில் இதுதொடர்பாக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன? என மதுரா ஜீயர் அதோக்ஷாஜானந்த் டியோ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருபுறம் காலத்துக்கு தக்கவாறு ராமர் கோவில் பிரச்சனையை பா.ஜ.க. கையாண்டு வருகிறது, இன்னொருபுறம், மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தலைவர்கள் இந்து கடவுள்களைப் பற்றி தகாத கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற மேல்சபை பா.ஜ.க. உறுப்பினர் புக்கல் நவாப் கூறிய கருத்து பா.ஜ.க. ஆமோதித்தால் பின்னர் அக்கட்சி அனுமானுக்கு ஒரு மசூதி கட்டித்தர வேண்டி இருக்கும் என்றும் அதோக்ஷாஜானந்த் டியோ காட்டமாக குறிப்பிட்டார். #AdhokshajanandDeo #LordHanuman #Mathuraseer
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும்கூட.
இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை கிழக்கு முதல் மேற்குவரை அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்க அனுமார் பாடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து, அம்மாநில மத விவகாரங்கள்துறை மந்திரி லக்ஷ்மி நாராயண் சவுத்ரி அனுமான் ஜாட் வம்சத்தை சேர்ந்தவர். அதனால்தான் அவர் மற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சகித்துகொள்ள முடியாமல் ராமனுக்கு ஆதரவாக நின்றார் என குறிப்பிட்டார்.
இதற்கும் மேலே ஒருபடி ஏறிச்சென்ற உ.பி. சட்டமன்ற மேல்சபை பா.ஜ.க. உறுப்பினர் புக்கல் நவாப் அனுமான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ரஹ்மான், அர்மான், குர்பான் என்ற ஒலிவடிவத்தில் அனுமானின் பெயரும் அமைந்திருப்பதால் அவர் முஸ்லிம்தான் என்று அவருக்கு தெரிந்த ஆதாரத்தை அவர் முன்வைத்திருந்தார்.

ஒருபுறம் காலத்துக்கு தக்கவாறு ராமர் கோவில் பிரச்சனையை பா.ஜ.க. கையாண்டு வருகிறது, இன்னொருபுறம், மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தலைவர்கள் இந்து கடவுள்களைப் பற்றி தகாத கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற மேல்சபை பா.ஜ.க. உறுப்பினர் புக்கல் நவாப் கூறிய கருத்து பா.ஜ.க. ஆமோதித்தால் பின்னர் அக்கட்சி அனுமானுக்கு ஒரு மசூதி கட்டித்தர வேண்டி இருக்கும் என்றும் அதோக்ஷாஜானந்த் டியோ காட்டமாக குறிப்பிட்டார். #AdhokshajanandDeo #LordHanuman #Mathuraseer
தாழ்த்தப்பட்ட பிரிவினரை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி குறிப்பிடலாம் என மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Dalit
ஐதராபாத்:
தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை ‘தலித்’ என்று குறிப்பிட்டு வருகிறார்கள். 1940-ம் ஆண்டு ஐதராபாத்தில் சுதந்திர போராட்டத்தின் போது தாழ்த்தப்பட்டோர் ஒன்று கூடி இயக்கம் நடத்தினார்கள். அப்போது ‘தலித்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. 1970-ல் மராட்டியத்தில் ‘தலித் பாந்தர்ஸ்’ என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது.
தற்போதும் தொடர்ந்து ‘தலித்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட பிரிவினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாதி ரீதியாக தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் ‘தலித்’ வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
அதில் விவாதங்கள், கட்டுரைகள், மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் ‘தலித்’ வார்த்தையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்காது.
எனவே தாழ்த்தப்பட்ட பிரிவினரை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி குறிப்பிடலாம். அதே சமயம் போலீஸ் புகார்கள், கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் ‘தலித்’ என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது. ஏனெனில் அரசியல் சட்டப்படி தாழ்த்தப்பட்டோர் என்ற வார்த்தை மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. #Dalit

தலித் என்ற முத்திரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பலவீனமாக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #VCK
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் திருமாவளவன் பேசியதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்கியபோது, அதன் தலைவர் திருமாவளவன். இந்த சமூகம் இதை எப்படி பார்க்கிறது என்றால், திருமாவளவன் தலித் என்பதால் அந்த கட்சி தலித் கட்சி. ஒரு நொடியில் அது தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.
தலித் கட்சி என்றவுடன் அந்த பரிமாணம் என்னவாக முடிகிறது என்றால், 80 சதவீத மக்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று முடிகிறது. 20 சதவீத தலித்துகளுக்கானது தான் என்ற நிலையை உருவாக்கிவிடுகிறது. இந்த முத்திரையானது எனக்கும், நான் உருவாக்கிய கட்சிக்கும் ஒரு பெரிய பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 80 சதவீத மக்களை அது என்னிடம் இருந்து தனிமைப்படுத்துகிறது.
ரஜினி, கமல், விஜயகாந்த் கட்சி தொடங்கினால் அது அனைவருக்குமான கட்சி. திருமாவளவன் கட்சி தொடங்கினால் அது தலித்துகளுக்கான கட்சி.
இவ்வாறு அவர் பேசினார். #Thirumavalavan #VCK

வெறுக்கத்தக்க வகையில் தலித், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்து உள்ளதாக சர்வதேச மனித உரிமை ஆணையமான ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறுகிறது. #AmnestyInternational
புதுடெல்லி:
நாடு முழுவதும் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மை மக்கள் போன்றவர்கள் மீது பரவலாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அதில், சில தாக்குதல்கள் அவர்களை கடுமையாக அவமதிக்கும் வகையிலும், கீழ்த்தரமாக நடத்தும் வகையிலும் இருக்கிறது. இதை வெறுக்கத்தக்க தாக்குதல் என்று அழைக்கிறார்கள்.
இந்த வகை தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறி இருக்கிறது.
2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக கூறி முகமது அக்லக் என்பவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இது போன்ற வெறுக்கத்தக்க தாக்குதல்கள் எந்த அளவுக்கு நடைபெறுகிறது என்பது பற்றி ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் கணக்கெடுத்தது. அதில், 2015 செப்டம்பருக்கு பிறகு இதுவரை 603 வெறுக்கத்தக்க குற்றங்கள் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் முதல் 6 மாதத்தில் மட்டும் 100 குற்றங்கள் நடந்துள்ளன. அதில், உத்தரபிரதேசத்தில் தான் அதிக குற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அங்கு மட்டும் 18 குற்றங்கள் நடந்துள்ளன. குஜராத்தில் 13 குற்றங்களும், ராஜஸ்தானில் 8 குற்றங்களும், தமிழ்நாடு, பீகாரில் தலா 7 குற்றங்களும் நடந்துள்ளன.
கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச மாநிலம் ஹபூரில் முகமது காசிம் என்பவர் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக கூறி கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6 மாதத்தில் தலித்துகளுக்கு எதிராக 67 குற்றங்களும், முஸ்லிம்களுக்கு 22 குற்றங்களும் நடந்துள்ளன.
குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிதான் இத்தகைய குற்றங்கள் நடப்பதன் மைய பகுதியாக இருப்பதாகவும் ஆம்னெஸ்டி இண்டர் நேஷனல் கூறி இருக்கிறது.
அதில், குறிப்பாக மீரட், முசாப்பர் நகர், சகரான் பூர், புலந்த்சாகர் ஆகிய பகுதிகளில் நிலைமை மோசமாக இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி மீரட்டில் உள்ள சொகாப்பூர் கிராமத்தில் தலித் இளைஞர் உயர் ஜாதியினரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.
பாக்பட் என்ற இடத்தில் குர்ஜார் சமூக பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்ததால் அந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
புலந்த்சாகர் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்ததால் அந்த வாலிபரின் தந்தையை தனது எச்சிலை துப்பி பின்னர் நக்க வைத்து உள்ளூர் பஞ்சாயத்தார் அவமதித்த சம்பவம் நடந்தது.
இதுபோல் நடந்த பல குற்றங்களையும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் சுட்டிக்காட்டி தனது இணைய தளத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது. #AmnestyInternational

மத்திய பிரதேச மாநிலம் டிகம்கர் மாவட்டத்தில் உள்ள தரம்பூர் கிராமத்தில் தன் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக தலித் இளைஞரை பஞ்சாயத்து தலைவர் கொடூரமாக தாக்கியுள்ளார். #BanPartiality #DalitManAttacked
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் டிகம்பர் எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது தரம்பூர் கிராமம். இந்த கிராமத்தில் வாழும் தலித் சமூகத்தைச் சார்ந்த தயாராம் அகிர்வால் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர், அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான ஹேமந்த் குர்மியின் வீட்டின் வழியாக சென்றுள்ளார். அவரை வழிமறித்த ஹேமந்த் குர்மி, அவரது சகோதரர் வினோத் குர்மி மற்றும் பக்கத்து வீட்டுக்காரரான தினேஷ் யாதவ் ஆகியோர் தயாராம் அகிர்வாலை மிக கொடூரமான முறையில் தாக்கினர்.
இந்த சம்பவம் குறித்து தயாராம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் ஹேமந்த் குர்மி, வினோத் குர்மி, முன்னு குர்மி, அனிருத் குர்மி, மற்றும் அவர்களது அண்டை வீட்டார் தினேஷ் யாதவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று இரவு ஹேமந்த் குர்மி உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். #BanPartiality #DalitManAttacked

குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் திருடன் என எண்ணி தலித் தொழிலாளி தூணில் கட்டி வைத்து கொடூரமாக அடித்துக்கொன்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GujaratIsNotSafe4Dalit
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று அதிகாலை முகேஷ் வனியா என்பவர் தனது மனைவி மற்றும் உறவினருடன் சேர்ந்து தேவையற்ற பொருட்களை எடுக்க சென்றனர். அப்போது அங்கிருந்த தொழிற்சாலை நிர்வாகிகள் அவர்களை தடுத்தனர். திருடர்கள் என எண்ணி முகேஷ் வனியாவை கயிற்றால் கட்டினர். அதனை தடுக்க முயன்ற முகேஷின் மனைவியையும் தாக்கினர்.
இதையடுத்து அவர் தனது உறவினர்களை அழைத்துச் செல்ல சென்றுவிட்டார். அவர் வருவதற்குள் முகேஷை அவர்கள் இரும்புக்கம்பியால் கொடூரமாக அடித்தனர். அவர் வலியால் துடித்த போதும் நிறுத்தாமல் தாக்கினர். படுகாயமடைந்த முகேஷை அவர் மனைவி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், குஜராத் தலைவர் ஜிக்னேஷ் மவானி இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல தலைவர்கள் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GujaratIsNotSafe4Dalit

×

X