search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram Temple"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அயோத்திக்கு வாருங்கள் என்று மக்களை நேரில் அழைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.
    • அட்சதையுடன் ராம் லீலா புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் வழங்கி அயோத்திக்கு அழைப்பார்கள்.

    சென்னை:

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி நடக்கிறது.

    நாடு தழுவிய அளவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கும்பாபிஷேக நிகழ்ச்சி விபரங்களை கிராமங்கள் வரை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்வதோடு அயோத்திக்கு வாருங்கள் என்று மக்களை நேரில் அழைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.

    இதற்காக அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட 100 கிலோ அட்சதை சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அட்சதையை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பும் நிகழ்ச்சி சேத்துப்பட்டு ஆரிங்டன் சாலையில் உள்ள சின்மயா மிஷன் பள்ளியில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் விசுவ இந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கிறார்கள்.

    அட்சதையுடன் ராம் லீலா புகைப்படம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் வழங்கி அயோத்திக்கு அழைப்பார்கள். ஏற்கனவே 85 லட்சம் குடும்பத்தினர் தொடர்பில் இருப்பதாகவும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க திட்டமிட்டு உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் ராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது.
    • மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், பல நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 30 நிமிடங்களில் ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும். இப்படி மாற்றினால் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

    பாலஸ்தீனத்தை ஆதரிக்கிற இவர்கள் எல்லாம் (ஒவைசி கட்சி) அங்கேயே போய்விடட்டும். அவர்களுக்காக சண்டையிடட்டும். 

    ராமர் கோவில் கட்டப்பட்டு விடும் என்று யாரேனும் நினைத்தது உண்டா? ஜவகர்லால் நேருவுக்கோ, இந்திராவுக்கோ அந்தத் துணிச்சல் இருந்ததா?

    பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் இப்போது ராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், பல நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது. அது தெலுங்கானா மாநிலத்திலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வாக்குறுதி எல்லோரையும் அதிர வைத்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது.
    • இதற்கான அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறுகிறது.

    போபால்:

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு நாளை மறுநாள் (25-ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறுகிறது.

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், ராமர் கோவிலை விட பெரிய பிரச்சனை என்ன இருக்கிறது என அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கேள்வி

    எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமர் கோவிலை தவிர நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை என்ன? பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயிலை உருவாக்கினோம். ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இது வெறும் தேர்தல் பிரச்சனை அல்ல, நாடு முழுவதும் உள்ள பிரச்சனை என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது.

    சென்னை:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.

    ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டையொட்டி, ஜாதி வேறுபாடுகளை களைந்து, சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, குடும்ப அமைப்பை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி வாழ்க்கை முறை, சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்துவது ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது. அதை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரை, வீடு, வீடாகச் சென்று ஸ்ரீராம ஜென்மபூமி படம், அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதையுடன் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    உலகம் தழுவிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

    ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்புக்கு, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அனுமதி அளித்தார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி, கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது.

    இந்த ஆண்டு காவல் துறை அனுமதி மறுத்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, வருகிற 19-ந் தேதி அணிவகுப்பு நடக்கவுள்ளது. இது தொடர்பாக, டி.ஜி.பி.,யை சந்தித்து பேசியுள்ளோம்.

    ஆகம பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும், எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.,சின் நிலைப்பாடு. ஆனால், அவர்கள் முறையான ஆகம பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    அதுபோல, கலப்பு திருமணத்தையும் ஆதரிக்கிறோம். ஆனால், திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, ஆர்.எஸ்.எஸ்., மாநிலச் செயலாளர் ஜெகதீசன், மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அயோத்தி ராமர் கோவில் 2024, ஜனவரி 22-ம் தேதி அன்று திறக்கப்படுகிறது.
    • ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

    மும்பை:

    உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் 2.7 ஏக்கரில், 57,400 சதுர அடியில் ரூ.2000 கோடி மதிப்பில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி அன்று நண்பகல் 12.30 மணிக்கு அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். கும்பாபிஷேக நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார். இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அமைப்பு அழைப்பிதழை வழங்கியது.

    இந்நிலையில், ராமர் கோவிலுக்குச் சென்று பிரதமர் மோடி பூஜை செய்வது என்பது தேர்தலுக்கான தயாரிப்பாக இருக்கலாம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பிரதமர் இவ்வளவு பெரிய நிகழ்வை ஏன் விடப்போகிறார்? பிரதமரை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் தானே செல்வார்.

    ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர்.

    சிவசேனா, பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அனைத்து இந்துத்துவ அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும் இதில் ஈடுபட்டன.

    எல்.கே.அத்வானி ரத யாத்திரை நடத்தினார். அதன் விளைவாகவே ராமர் கோவில் கட்டப்படுகிறது.

    பிரதமர் மோடி அங்கு சென்று பூஜை செய்வது வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்பாக இருக்கலாம் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அயோத்தி கோவிலில் அர்ச்சகர்களுடன் சேர்த்து சுமார் 150 பேர் பணியாற்றுகின்றனர்.
    • ஊதிய உயர்வுக்கு பிறகு அனைவரின் சம்பளம் இரு மடங்கை நெருங்கும் என கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரியில் இக்கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான பலன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமக்கு கிடைக்கும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. இதற்கு கோவில் ஊழியர்கள் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பது பா.ஜ.க.வின் எண்ணமாக உள்ளது.

    இச்சூழலில் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்க, அக்கோவிலை கட்டிவரும் ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை, உத்தர பிரதேச அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    கோவில் தலைமை அர்ச்சகரின் மாத சம்பளம் ரூ.25,000 ஆக உள்ளது. இது ரூ.32,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்குமுன் ரூ.15,520 என்றிருந்த அவர்களது மாத சம்பளம் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 6 மாதங்களில் அவர்களுக்கான ஊதியம் இரண்டு மடங்கு உயர்கிறது.

    இதுபோல் உதவி அர்ச்சகர்களுக்கு கடந்த ஏப்ரலில் ரூ.20,000 என்றிருந்த சம்பளம் ரூ.31,960 ஆகவும், இதர உதவியாளர்களுக்கு ரூ.8,940 என்றிருந்த ஊதியம் இனி ரூ.24,440 ஆகவும் உயர்த்தி தரப்படும். ராமர் கோவிலின் மற்ற பணியாளர்களுக்கும் இதேபோல் ஊதிய உயர்வு கிடைக்கும். வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் இதுபோல் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது.

    இதற்காக 16 பேர் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையில் அனைவரது சம்பளம், இதர படிகள் மற்றும் சலுகைகளை உயர்த்தலாம் என அறிவுறுத்தியது. இதையடுத்து இதன்படி சம்பள உயர்வு அளிக்கலாம் என உத்தரபிரதேச அரசுக்கு காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையையும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

    வாரணாசி அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரமும் இதர பணியாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.47 ஆயிரம் வரையும் சம்பளம் கிடைக்கிறது. ஊதிய உயர்வுக்கு பிறகு அனைவரின் சம்பளம் இரு மடங்கை நெருங்கும் என கூறப்படுகிறது. இக்கோவிலில் அர்ச்சகர்களுடன் சேர்த்து சுமார் 150 பேர் பணியாற்றுகின்றனர். இக்கோவிலில் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரமும் அளிக்கப்பட உள்ளது. உத்தர பிரதேச அரசின் இந்த முடிவுக்கு எதிர்வரும் மக்களவைத் தேர்தல் காரணமாக கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாரதியஜனதா மீது கூறிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
    • பேச்சு அடங்கிய வீடியோவை பாரதியஜனதா கட்சியினர் எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக இருந்து வருபவர் பி.ஆர். பாட்டீல். இவர் பாரதியஜனதா மீது கூறிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற அவர்கள் (பா.ஜனதா)ராமர் கோவில் மீது குண்டுகள் வீசி முஸ்லீம்கள் மீது பழி சுமத்துவார்கள் என குற்றம் சாட்டி உள்ளார். அவரது பேச்சு அடங்கிய வீடியோவை பாரதியஜனதா கட்சியினர் எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

    இது கர்நாடகாவில் பரபரப்பாகி உள்ளது. இது தொடர்பாக பாரதியஜனதாவினர் கூறும் போது இந்து-முஸ்லீம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீல் கருத்து தெரிவித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார்.
    • ரஜினிகாந்த் அயோத்தியில் ராமர் கோவில் அமையவுள்ள இடத்துக்கு, தனது மனைவி லதாவுடன் சென்றார்.

    இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்டு வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேற்று முன்தினம் சந்தித்தார். இந்த நிலையில் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார்.

    அதனைத்தொடர்ந்து அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார். ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதாவும் தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், 'இந்த கோவிலுக்கு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இங்கு தரிசனம் செய்தது எனது அதிர்ஷ்டம்' என்று கூறி சென்றார்.

    பின்னர் ரஜினிகாந்த் அயோத்தியில் ராமர் கோவில் அமையவுள்ள இடத்துக்கு, தனது மனைவி லதாவுடன் சென்றார். அங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள மதகுருமார்களை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் அங்கு ராமர் தரிசனமும் செய்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.
    • ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஓட்டல் ஒன்றில், பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், அயோத்தியில் நடைபெறும் தீப உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ளும்படியும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் யோகி ஆதித்யநாத், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணியை திட்டமிட்ட காலத்தில், உயர்ந்த தரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.

    பின்னர், ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக அலுவலர்களிடமும் விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடனும் உரையாடினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print