என் மலர்
நீங்கள் தேடியது "yogi adityanath"
- நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார்.
- குற்றவாளிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவியின் துப்பட்டாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார். அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அங்கு நடந்த 343 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது:
சட்டத்தை சீர்குலைக்க யாரும் சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். பெண்களை துன்புறுத்துவது போன்ற பாலியல் குற்றத்தை யாராவது செய்தால் அவர்களுக்காக மரண தெய்வமான எமராஜ் காத்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வாட்ஸ்அப் சேனல்- 'Cheif Minister Office, Uttar Pradesh' என்ற பெயரில் அறிமுகம்.
- இதன் மூலம் தகவல்களை பொது மக்களுக்கு எளிதில் கொண்டுசேர்க்க முடியும்.
பொது மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் வகையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், "முதலமைச்சர் அலுவலகம், உத்தர பிரதேசம்" (Cheif Minister Office, Uttar Pradesh) என்ற பெயரில் வாட்ஸ்அப் சேனல் ஒன்றை துவங்கி இருக்கிறார். இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும்.
இந்த வாட்ஸ்அப் சேனல் மூலம், பொது மக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் குறைகளை முதலமைச்சர் அலுவலகத்தில் முறையிடலாம். இதற்கான அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் துவங்கி வைத்துள்ளார்.
முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில், "முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்-க்கு உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 25 கோடி பேரும் 'ஒரே குடும்பம்'. முதலமைச்சரின் தலைமையில், உத்தர பிரதேச அரசங்கம் 'குடும்பத்தின்' ஒவ்வொருத்தர் நலம் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது."
"உத்தர பிரதேச குடும்பத்தின் ஒவ்வொருத்தாருடன் எளிதில் தகவல் பரிமாற்றம் செய்யவும், தகவல் பரிமாற்றம்தான் ஜனநாயகத்தின் ஆத்மா என்று நினைக்கும் முதலமைச்சர் சார்பில் மாநில அரசு அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல்- 'Cheif Minister Office, Uttar Pradesh' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் பொதுநலன் மற்றும் அரசு துறை திட்டங்கள் தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு எளிதில் கொண்டுசேர்க்க முடியும். இந்த சேனலில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
- யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்து வணங்கினார். ரஜினிகாந்தின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக இமயமலை செல்வதை தவிர்த்து வந்தார்.
மேலும் கொரோன தொற்று பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இமய மலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரஜினிகாந்த், கடந்த 9-ந்தேதி பெங்களூரு சென்று, அங்கிருந்து டேராடூன் வழியாக இமயமலைக்கு சென்றார்.
அந்த பயணத்தை முடித்துக்கொண்டு உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்ற ரஜினிகாந்த், அம்மாநில முதல்-மந்திரியான யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்து வணங்கினார். ரஜினிகாந்தின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதுகுறித்து ரஜினியோ, "வயதில் சிறியவராக இருந்தாலும் சன்னியாசிகள், யோகிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் செய்தேன்" என்றார். இந்நிலையில் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி, தனது பேஸ்புக் பதிவில் ரஜினியை கிண்டலடித்து பதிவை வெளியிட்டுள்ளார். "ஹூகும் ஜெயிலர்" என்ற ஹேஸ்டேக்குடன் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உடலை நீட்டுவதும், வளைப்பதும் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இருப்பினும் நம் சூப்பர் ஸ்டார் யோகி போன்ற ஒருவரின் முன் வளைந்த விதம், அவரது முதுகை எளிதில் உடைக்கக்கூடும். அவர் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
ரஜினி குறித்து கேரள மந்திரியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முந்தைய அரசாங்கம் மாபியா கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டவில்லை.
- குற்றவாளிகள் மற்றும் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச மக்கள் விரும்புகிறார்கள்.
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உத்தரபிரதேச மாநில வளர்ச்சி பாதையில் யாராவது தடைகளை உருவாக்கினால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரபிரதேசத்தில் முந்தைய அரசாங்கம் மாபியா கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டவில்லை. அரசு சொத்துக்களை சட்ட விரோதமாக அபகரித்தவர்களுக்கு நான் ஆரத்தியா எடுக்க முடியும்? குற்றவாளிகள் மற்றும் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச மக்கள் விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாநிலத்தில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்த கலவரமும் நடக்கவில்லை. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அனைத்து பண்டிகைகளும் அமைதியாக கொண்டாடப்படுகிறது என்றார்.
- எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. என பெயர் வைத்துள்ள நிலையில் பா.ஜக-வினர் விமர்சனம்
- உங்களுடைய பெயர் மாற்றம், உங்களுடைய விளையாட்டை (அரசியல் செயல்பாடு) மாற்றாது
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மற்றும் கர்நாடகாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயரிட்டுள்ளது. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
இந்தியா எனப் பெயர் வைத்துள்ளதற்கு விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் சிலரே இந்தியா என பெயர் வைத்ததற்கு அதிருப்தி தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
நேற்று பிரதமர் மோடி கிழக்கு இந்திய கம்பெனிகள், இந்தியன் முஜாஹிதீன் உள்ளிட்டவைகளிலும் இந்தியா உள்ளது. நாட்டின் பெயரை வைத்து மக்களை திசைதிருப்பி ஏமாற்றிவிட முடியாது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கிண்டல் செய்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வைத்துள்ள இந்தியா பெயர் குறித்து கூறுகையில் ''காகம் தனக்குத்தானே அன்னம் என பெயர் வைத்துக் கொண்டாலும், அதனால் முத்தை எடுக்க முடியாது. அமாவாசை பவுர்ணமி என பெயர் மாற்றப்பட்டாலும், அது முழுமையான வெளிச்சத்தை கொடுக்க முடியாது. அதேபோல்தான், பெயரை மாற்றினாலும், பிளவுபடுத்தும் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பார்வை முடிவுக்கு வராது.'' என்றார்
மேலும், உங்களுடைய பெயர் மாற்றம், உங்களுடைய விளையாட்டை (அரசியல் செயல்பாடு) மாற்றாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இந்த குடியிருப்பு பிரயாக்ராஜின் லுகர்கஞ்ச் பகுதியில் 1731 சதுர மீட்டர் நிலத்தில் அமைந்துள்ளது.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் யோகி ஆதித்யநாத் உரையாடி, குழந்தைகளுக்கு சாக்லேட்களை வழங்கினார்.
உத்தரப்பிரதேசத்தில் பிரபல தாதாவும் அரசியல் பிரமுகருமான அதிக் அகமதுவிடம் இருந்து அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 76 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அந்த குடியிருப்புகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று திறந்து வைத்தார்.
மேலும் இந்த குடியிருப்புகளை மலிவு விலையில் ஏழைகளுக்கு வழங்கினார். ஜூன் 9ம் தேதி நடைபெற்ற குலுக்கல் முறைப்படி பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
இந்த குடியிருப்பு பிரயாக்ராஜின் லுகர்கஞ்ச் பகுதியில் 1731 சதுர மீட்டர் நிலத்தில் அமைந்துள்ளது. இந்த வீடுகள் ஒவ்வொன்றும் தலா 41 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ரூ.3.5 லட்சத்திற்கு பயனாளிகளிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குடியிருப்பை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் யோகி ஆதித்யநாத் உரையாடி, அவர்களின் குழந்தைகளுக்கு சாக்லேட்களை வழங்கினார்.
2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜு பால் கொலை மற்றும் அக்கொலைக்கு முக்கிய சாட்சியான உமேஷ் பால் பிப்ரவரி மாதம் கொல்லப்பட்டது தொடர்பாக அதிக் அகமது குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது, கடந்த ஏப்ரல் 15ம் தேதி இரவு, பிரயாக்ராஜில் காவல்துறையினரால் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நகர் முழுவதும் ரூ.32 ஆயிரம் கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- அயோத்தி, புதிய அயோத்தியாக மாறிவிட்டது.
அயோத்தி :
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் முழுவதும் ரூ.32 ஆயிரம் கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உலகிலேயே மிக அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி மாறும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், '500 ஆண்டு காத்திருப்புக்குப்பின் ராம பிரானின் சொந்த கோவிலில் அவரது சிலையை நிறுவுவது முக்கிய மைல்கல்களில் ஒன்றாக இருக்கும். உலக அளவில் அயோத்தியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வானது ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்' என தெரிவித்தார்.
மேலும் அவர், 'அயோத்தியின் பிரதான ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு பெரிய நகரமும் அயோத்தியுடன் இணைக்கப்படும். அயோத்தி, புதிய அயோத்தியாக மாறிவிட்டது. நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் முடிவடையும்போது, உலகிலேயே மிகவும் அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி அங்கீகரிக்கப்படும்' என்றும் கூறினார்.
- கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
- இந்த திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது.

தி கேரளா ஸ்டோரி
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்க உள்ளதாக அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவினர் லக்னோவில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
- விரைவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை:
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
இவரது ஆட்சியில் கடந்த 6 வருடங்களாக உ.பி.யில் ரவுடிகளை ஒழிப்பதற்கு என்கவுண்டர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி இதுவரை 183 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் பிரபல தாதா ஆதித்யா அகமது சகோதரர் அஷ்ரப் அகமது என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசின் அவசரகால நம்பரான 112 என்ற எண்ணில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் விரைவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் தொடர்பு எண்ணை ஆராய்ந்தபோது மிரட்டல் விடுத்தவர் பெயர் ரீகன் என்பதும் முகப்பில் அல்லா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- 2012 முதல் 2017 வரை மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்ததாக முதல்வர் தகவல்
- உத்தரபிரதேச அரசு சிறப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாக பேச்சு
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் ரவுடி அத்திக் அகமது, அவரது சகோதரர் படுகொலை போன்ற சம்பவங்கள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்நிலையில், லக்னோ மற்றும் ஹர்டோய் மாவட்டங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசும்போது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-
இனி உத்தரபிரதேசத்தில் மாபியாக்களும், குற்றவாளிகளும் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியாது. ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசம் கலவரங்களுக்கு பெயர் பெற்ற மாநிலமாக இருந்தது. பல மாவட்டங்களின் பெயர்களை கேட்டாலே மக்கள் அச்சமடைவார்கள். இப்போது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
2012 முதல் 2017 வரை மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்தன. ஆனால், 2017-2023 காலகட்டத்தில் ஒரு கலவரம்கூட வெடிக்கவில்லை. ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அந்த நிலை ஏற்படவில்லை. உத்தரபிரதேச அரசு சிறப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.