உ.பி.யில் நீண்ட காலம் முதல்வர் பதவி வகித்தவர் பட்டியல்: முதலிடம் பிடித்தார் ஆதித்யநாத்

உ.பி.யில் நீண்ட காலம் முதல்​வ​ராக பதவி வகித்​தவர்​ பட்​டியலில் யோகி ஆதித்​ய​நாத் முதலிடம் பிடித்தார்.இதற்குமுன் இந்தச் சாதனைக்கு சொந்​தக்​கார​ராக இருந்​தவர் கோவிந்த் வல்​லப் பந்த்.
உ.பி.யில் நீண்ட காலம் முதல்வர் பதவி வகித்தவர் பட்டியல்: முதலிடம் பிடித்தார் ஆதித்யநாத்
Published on

லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று அக்கட்சியின் யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவியேற்றார்.

இதையடுத்து, கடந்த 2022-ல் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் பா.ஜ.க. இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக முதல் மந்திரியானார்.

இந்நிலையில், உ.பி. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று நேற்றுடன் 8 ஆண்டு மற்றும் 130 நாளை நிறைவு செய்தார்.

இதன்மூலம் அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல் மந்திரியாக பதவி வகித்தவர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.

இதற்குமுன் இந்தச் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் கோவிந்த் வல்லப் பந்த். உத்தர பிரதேசத்தின் (சுதந்திரத்துக்கு பிறகு) முதல் முதல் மந்திரியான அவர் 8 ஆண்டு 127 நாள் தொடர்ந்து முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com