என் மலர்
இந்தியா

அயோத்தி ராமர் கோயிலை நினைத்து பெருமைப்படாதவர்கள் இந்தியர்கள்தானா? - யோகி ஆதித்யநாத்
- ஒரு துறவி சமூகத்தை தனது குடும்பமாகவும், தேசத்தை தனது குலமாகவும் கருதுவார், அவரது ஒரே அடையாளம் சனாதன தர்மம் தான்.
- ராமர் கோவில், இரு மகான்களின் உறுதியான போராட்டத்திற்கு சான்றாக நிற்கிறது.
அயோத்தி ராமர் கோயில் குறித்து ஒருவர் பெருமையடையவில்லை என்றால், அவர் இந்தியர் என்பதே சந்தேகம்தான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
நேற்று, கோரக்நாத் கோவிலில் மகான் திக்விஜய்நாத்தின் 56-வது நினைவு நாளையும், மகான் அவைத்தியநாத்தின் 11-வது நினைவு நாளையும் முன்னிட்டு நடைபெற்ற விழாவில் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "இன்று, இந்தியாவில் ராமர் கோவிலை கண்டு பெருமைப்படாதவர்கள் யார்? அப்படிப் பெருமை கொள்ளாதவர்கள் இந்தியர்களாக இருப்பது சந்தேகத்திற்குரியது" என்று தெரிவித்தார்.
மேலும், "ஒரு துறவி சமூகத்தை தனது குடும்பமாகவும், தேசத்தை தனது குலமாகவும் கருதுவார், அவரது ஒரே அடையாளம் சனாதன தர்மம் தான். ராமர் கோவில், இரு மகான்களின் உறுதியான போராட்டத்திற்கு சான்றாக நிற்கிறது" என்று தெரிவித்தார்.
Next Story






