என் மலர்
நீங்கள் தேடியது "யோகி ஆதித்யநாத்"
- பாலையா நடிப்பில் 2021-ல் வெளியான அகண்டா படம் பெரும் வரவேற்பை பெற்றது.
- அகண்டா 2 படத்தில் சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார்.
ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் டிச.5-ல் வெளியாகிறது.
இந்நிலையில், 'அகண்டா 2' படக்குழுவினர். லக்னோவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
- உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.
அந்த கோர விபத்தின் தாக்கம் மறைவதற்குள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் உள்ள சனார் ஜங்ஷன் பகுதியில் இன்று காலை 9 மணிக்கு பயணிகள் ரெயில் ஒன்று 4-வது நடைமேடை பகுதியில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் 3-வது நடைமேடையை கடந்து சென்று கொண்டி ருந்தனர்.
பயணிகளில் மற்றொரு பிரிவினர் தண்டவாளத்தை கடந்து அடுத்த பக்கம் செல்வதற்கு நடந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர் திசையில் இருந்து மிக வேகமாக ஹவுரா செல்லும் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
ரெயில் மிக அருகில் வந்த போதுதான் பயணிகள் கவனித்து அலறினார்கள். 4-வது நடைமேடைக்கும், 3-வது நடைமேடைக்கும் இடையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அதற்குள் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர். அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சனார் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லக்கூடிய ரெயில் ஆகும். இதனால் அந்த ரெயில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
ரெயில் மோதிய வேகத்தில் 3 பயணிகளின் உடல்கள் கடுமையாக சிதறி போனது. பலியான 6 பயணிகளும் இன்று பவுணர்மி தினத்தை முன்னிட்டு வாரணாசியில் புனித நீராடி சிவனை வழிபடுவதற்காக சென்று கொண்டிருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
6 பேர் பலியானது குறித்து தகவல் அறிந்ததும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் அதிர்ச்சி தெரிவித்தார். பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள அவர் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.
சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என்றார் உள்துறை மந்திரி அமித்ஷா.
- யோகியை மீண்டும் உத்தரகாண்ட்டிற்கு அனுப்பவேண்டும் என விரும்புவதாக அகிலேஷ் கூறினார்.
லக்னோ:
சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பொய்யான புள்ளிவிவரங்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்கள் பாஜகவினர்.
அண்டை நாட்டவர் குறித்து பாஜகவினர் கூறுவது அவர்களின் புனைவுக் கதைகள் தான்.
உத்தர பிரதேசத்திலும் ஊடுருவல்காரர்கள் உள்ளனர். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும் ஊடுருவல்காரர் தான்.
உண்மையில் அவர் உத்தரகாண்ட்டில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு ஊடுருவியவர். அவரை மீண்டும் உத்தரகாண்ட்டிற்கு அனுப்ப வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என தெரிவித்தார்.
அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் இவ்வாறு கூறியுள்ளார்.
- ஒரு துறவி சமூகத்தை தனது குடும்பமாகவும், தேசத்தை தனது குலமாகவும் கருதுவார், அவரது ஒரே அடையாளம் சனாதன தர்மம் தான்.
- ராமர் கோவில், இரு மகான்களின் உறுதியான போராட்டத்திற்கு சான்றாக நிற்கிறது.
அயோத்தி ராமர் கோயில் குறித்து ஒருவர் பெருமையடையவில்லை என்றால், அவர் இந்தியர் என்பதே சந்தேகம்தான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
நேற்று, கோரக்நாத் கோவிலில் மகான் திக்விஜய்நாத்தின் 56-வது நினைவு நாளையும், மகான் அவைத்தியநாத்தின் 11-வது நினைவு நாளையும் முன்னிட்டு நடைபெற்ற விழாவில் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "இன்று, இந்தியாவில் ராமர் கோவிலை கண்டு பெருமைப்படாதவர்கள் யார்? அப்படிப் பெருமை கொள்ளாதவர்கள் இந்தியர்களாக இருப்பது சந்தேகத்திற்குரியது" என்று தெரிவித்தார்.
மேலும், "ஒரு துறவி சமூகத்தை தனது குடும்பமாகவும், தேசத்தை தனது குலமாகவும் கருதுவார், அவரது ஒரே அடையாளம் சனாதன தர்மம் தான். ராமர் கோவில், இரு மகான்களின் உறுதியான போராட்டத்திற்கு சான்றாக நிற்கிறது" என்று தெரிவித்தார்.
- நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
- மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி 2வது இடம் பிடித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல் மந்திரி யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய Mood of the Nation கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 2,06,826 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பானது நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 36 சதவீதம் பேர் உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சிறப்பாகச் செயல்படும் முதல் மந்திரியாக கருதுகின்றனர். உ.பி. முதல்வர் கடந்த பிப்ரவரியில் 35 சதவீத ஆதரவு பெற்று இருந்தார். தற்போது ஒரு சதவீதம் அதிகரித்து 36 சதவீதம் பெற்றுள்ளார்.
2வது இடம் பிடித்துள்ள மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளை 13 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.
அவரைத் தொடர்ந்து 7 சதவீதம் பேர் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சிறந்த முறையில் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
- நீதியை பெற்று தந்ததற்காக முதல் மந்திரிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார் பூஜா பால்.
- கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி பூஜா பால் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
லக்னோ:
உ.பி.யின் பிரயாக்ராஜில் 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வான ராஜு பால் சுட்டுக் கொல்லப்பட்டார். பூஜா பாலை திருமணம் செய்த சில நாட்களில் இந்தச் சம்பவம் நடந்தது. இதற்கு முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் 2023-ம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச சட்டசபை கூட்டத்தொடரின்போது சமாஜ்வாதி கட்சி பெண் எம்.எல்.ஏ.வான பூஜா பால், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்தும், அவரை புகழ்ந்தும் பேசினார்.
இதற்கிடையே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என கூறி பூஜா பாலை சமாஜ்வாதி கட்சியில் இருந்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நீக்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், லக்னோ நகரில் உள்ள முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் இல்லத்துக்கு சென்ற பூஜா பால், அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தனது கணவர் கொலை வழக்கில் நீதி பெற்றுத் தந்ததற்தாக முதல் மந்திரிக்கு நன்றி என்றார் பூஜா பால்.
- கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு பூஜா பால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
லக்னோ:
கட்சி விரோத நடவடிக்கை காரணமாக, உத்தரபிரதேசத்தில் பூஜா பால் எம்எல்ஏ, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக, சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டசபையில் சமாஜ்வாதி எம்.எல்.ஏ.வான பூஜா பால் பேசுகையில், தனது கணவர் கொலை வழக்கில் நீதியை பெற்றுத் தந்ததாக முதல் மந்திரி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், முதல் மந்திரியைப் பாராட்டி பேசிய சில மணி நேரங்களுக்கு பிறகு, பூஜா பாலை கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். கட்சி விரோத நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு அவரை கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பூஜா பால், சமாஜ்வாதி கட்சியினரின் பெண்களுக்கு எதிரான நிலையை இது காட்டுகிறது என கடுமையாகச் சாடினார்.
- ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
- இதையொட்டி, அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
லக்னோ:
நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் விழாவை ஒட்டி உத்தர பிரதேச அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.
- உ.பி.யில் நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்தார்.
- இதற்குமுன் இந்தச் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் கோவிந்த் வல்லப் பந்த்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று அக்கட்சியின் யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
இதையடுத்து, கடந்த 2022-ல் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் பா.ஜ.க. இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக முதல் மந்திரியானார்.
இந்நிலையில், உ.பி. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று நேற்றுடன் 8 ஆண்டு மற்றும் 130 நாளை நிறைவு செய்தார்.
இதன்மூலம் அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல் மந்திரியாக பதவி வகித்தவர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்குமுன் இந்தச் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் கோவிந்த் வல்லப் பந்த். உத்தர பிரதேசத்தின் (சுதந்திரத்துக்கு பிறகு) முதல் முதல் மந்திரியான அவர் 8 ஆண்டு 127 நாள் தொடர்ந்து முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாட்டுச் சாணம் சார்ந்த இயற்கை வண்ணப்பூச்சு அரசு கட்டிடங்களில் இடம்பெற வேணடும்.
- மாட்டுச் சாணம்: பாஜக அரசின் புதிய சாதனை எனத் தெரிவித்துள்ளார் அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பசு பாதுகாப்பு மையங்கள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மாட்டுச் சாணம் சார்ந்த இயற்கை வண்ணப்பூச்சு அரசு கட்டிடங்களில் இடம்பெற வேணடும். அதுவும் மிகப்பெரிய அளவிலான உற்பத்தியுடன் நடைபெற வேண்டும்" என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் உ.பி.யின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில் "மாட்டுச் சாணம்: பாஜக அரசின் புதிய சாதனை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ் கருத்து குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் கூறுகையில் "அகிலேஷ் யாதவ் ாட்டுச் சாணம் மற்றும் கால்நடைகளை வெறுக்கிறார். ஆஸ்திரேலியா சென்ற பிறகு அவர் இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளை மறந்துவிட்டாரா, அல்லது தனது திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பசு, கங்கை மற்றும் கீதையை அவமதிக்கிறாரா?" என பதில் அளித்துள்ளார்.
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.
- முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
லக்னோ:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
முர்ஷிதாபாத் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி அமைதியாக இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் மிரட்டல்களுக்கு மேல் மிரட்டல்களை விடுக்கின்றனர்.
வங்கதேசத்தில் நடந்ததை அவர்கள் வெட்கமின்றி ஆதரிக்கிறார்கள். வங்கதேசத்தை அவர்கள் விரும்பினால் அவர்கள் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் ஏன் இந்திய நிலத்திற்கு சுமையாக இருக்கிறார்கள்?
வங்கதேசம் பற்றி எரிகிறது. மாநில முதல் மந்திரி அமைதியாக இருக்கிறார். மதச்சார்பின்மை என்ற பெயரில் கலவரக்காரர்களுக்கு, கலவரத்தை உருவாக்க அனைத்து சுதந்திரத்தையும் அளித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக முழு முர்ஷிதாபாத் தீப்பிடித்து எரிகிறது. ஆனால் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. இத்தகைய அராஜகத்தை அடக்க வேண்டும் என தெரிவித்தார்.
- உத்தரப் பிரதேசத்தில் இது நாள்தோறும் நடப்பது விந்தையாக இருக்கிறது.
- ஒவ்வொரு நாளும், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மொத்தமாக சீர்குலைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடனாக பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை என்ற சிவில் பிரச்னையை கிரிமினல் வழக்காக மாற்றியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சிவில் வழக்குகளை குற்றவியல் விஷயங்களாக மாற்றுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இது மிகவும் தவறு. ஆனால் இது நடக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் இது நாள்தோறும் நடப்பது விந்தையாக இருக்கிறது. இந்த நடைமுறை தவறு என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியும் மீண்டும் இதையே செய்வதா?.
ஒவ்வொரு நாளும், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன. இது அபத்தமானது. கடன் வாங்கிய பணத்தை கொடுக்காமல் இருப்பதை மட்டும் வைத்து குற்றவியல் குற்றமாக அதை மாற்ற முடியாது என்று தெரிவித்தார்.






