search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமாஜ்வாதி கட்சி"

    • நிஹால்கர் ரெயில் நிலையத்தின் பெயர் மகாராஜா பிஜிலி பாசி ரெயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
    • ஸ்மிருதி இரானியின் கோரிக்கையை அடுத்து ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோ கோட்டத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களின் பெயர்கள் துறவிகள் (Saints) மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களால் மறுபெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

    அதன்படி, காசிம்பூர் ஹால்ட் ரெயில் நிலையம் இனி ஜெய்ஸ் சிட்டி ரெயில் நிலையம் என்றும், நிஹால்கர் ரெயில் நிலையத்தின் பெயர் மகாராஜா பிஜிலி பாசி ரெயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.

    இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்து, ரெயில் நிலையங்களின் பெயர்களை மாற்றுவதற்கு பதிலாக ரெயில் நிலையங்களின் நிலையை மேம்படுத்துவதிலும், ரெயில் விபத்துகளை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, அமேதியின் கலாச்சார அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அமேதியின் முன்னாள் எம்.பி. ஸ்மிருதி இரானியின் கோரிக்கையை அடுத்து இந்த ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும்.
    • பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல.

    நாடு சுதந்திரம் பெற்றபோது அதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தங்க செங்கோல் செய்யப்பட்டு மவுண்ட்பேட்டனிடம் கொடுத்து அதன்பிறகு அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கியதாக வரலாறு.

    அதன் பிறகு அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சௌத்ரி கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,

    * சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும்.

    * பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும் செங்கோல்.

    * செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என நம்புகிறேன்.
    • சமாஜ்வாதி கட்சி தனது தோல்வி மற்றும் இடங்களைப் பற்றி சிந்திக்கவில்லை என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியில் சமாஜ்வாதி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    சமாஜ்வாதி கட்சி தனது தோல்வி மற்றும் இடங்களைப் பற்றி சிந்திக்கவில்லை.

    மக்கள் இடங்களை மதிப்பீடு செய்யத் தொடங்கியபோது காங்கிரசுக்கு இவ்வளவு சீட் ஏன் கொடுத்தீர்கள் என்றார்கள்?

    கூட்டணியில் வரவேண்டும் என்பதனால் காங்கிரசுக்கு 17 இடங்கள் கொடுத்துள்ளேன்.

    உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என்று நம்புகிறேன்.

    அவர்கள் (பா.ஜ.க.) 400ல் வெற்றி பெறப் போவதில்லை. தோற்கப் போகிறார்கள்.

    அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும் என கனவு காண்பவர்களை 400 இடங்களில் தோற்கடிக்கச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
    • காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்

    காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊழல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
    • ஆனால் ஊழலை பெருக்குபவர்களே பா.ஜ.க.வினர் தான் என்றார் அகிலேஷ்.

    லக்னோ:

    சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பிலிபித் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    நாளுக்கு நாள் விலைவாசி உயர்கிறது; டீசல், பெட்ரோல் அல்லது அடிப்படைத் தேவைகள் எல்லாம் இப்போது விலை உயர்ந்தவை.

    இந்த அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. ஊழல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

    ஆனால் ஊழலை பெருக்குபவர்களே பா.ஜ.க.வினர் தான்.

    உத்தர பிரதேசம் அவர்களை ஆட்சி அமைக்க வைத்தது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். 2014-ல் ஆட்சிக்கு வந்தாலும் 2024-ல் வெளியேற்றப்படுவார்கள். உத்தர பிரதேச மக்கள் அன்புடன் வரவேற்பார்கள், அவர்கள் உற்சாகமாகவும் விடை அளிப்பார்கள்.

    அவர்கள் சீனா எங்கள் கிராமங்களின் பெயரை மாற்றியிருந்தால், சீனாவின் பெயரை மாற்றுவோம் என பா.ஜ.க. அரசு கூறுகிறது. சீனாவின் பெயரைத் திருத்தாதீர்கள், அவர்களுடன் வியாபாரத்தை நிறுத்துங்கள், அப்போதுதான் நம் தேசம் முன்னோக்கிப் பார்க்கப்படும் என தெரிவித்தார்.

    • மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
    • பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது.

    மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.

    அதன்படி, யஷ்வீர் சிங் (பிஜ்னோர்), மனோஜ் குமார் (நாகினா), பானு பிரதாப் சிங் (மீரட்), பிஜேந்திர சிங் (அலிகார்), ஜஸ்வீர் வால்மீகி (ஹத்ராஸ்) மற்றும் தரோகா சரோஜ் (லால்கஞ்ச்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
    • அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டி.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகளை, சமாஜ்வாதி கட்சி ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.

    இந்நிலையில், 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.

    இதில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    லக்னோ, கோரக்பூர், பைசாபாத் உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கேதர்நாத், பத்ரிநாத் கோவில்கள் புத்த மடாலயங்கள் இருந்தன
    • கோவில்களில் ஏன் புத்த மடாலயங்களை தேடக்கூடாது?

    வாரணாசி மற்றும் மதுராவில் மசூதிக்குள் கோவில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மயூரா கூறியதாவது:-

    உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் கோவில்கள், புரியில் உள்ள ஜெகநாத் கோவில், கேரளாவில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில், மகாராஷ்டிரா பந்தர்புரில் உள்ள விதோபா கோவில் ஆகியவற்றில் புத்த மடாலயங்கள் இருந்தன. இந்த புத்த மடாலயங்கள் இடிக்கப்பட்டு, அந்த இடங்களில் இந்து கோவில்கள் உருவாகின. அங்கு 8-ம் நூற்றாண்டு வரை புத்த மடாலயங்கள் இருந்தன.

    என்னுடைய நோக்கம் கோவில்கள் புத்த மடாலயங்கள் ஆக வேண்டும் என்பது அல்ல. ஆனால், நீங்கள் ஒவ்வொரு மசூதியாக கோவில்களை தேடினால், பின்னர் ஒவ்வொரு கோவில்களிலும் ஏன் புத்த மடாலயங்களை தேடக்கூடாது?'' எனக் தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் புபேந்திர சிங் சவுத்ரி, ''சமாஜ்வாதி கட்சி மற்றும் அதன் தலைவர்களால் மீண்டும் மீண்டும் சனாதன தர்மம் அவமதிக்கப்பப்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்துக்கள் புனித தலமாக கேதர்நாத், பத்ரிநாத், ஜெகநாத் புரி விளங்குகிறது. இது சர்ச்சைக்குரிய கருத்து மட்டுமல்ல. இது அவரின் அற்பமான மனநிலை மற்றும் அரசியலையும காட்டுகிறது.

    இந்தியா மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வை புண்படுத்துகிறது. சமூகத்தில் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. மயூரா இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். சமாஜ்வாடி கட்சி இதை ஏற்றுக்கொண்டால், அதுகுறித்து அகிலேஷ் யாதவ் கருத்து விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார்.

    • சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம்கான்.
    • அசம்கான் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்துவந்தார்.

    லக்னோ:

    சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம்கான் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    இந்த வழக்கு உத்தர பிரதேச சிறப்பு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம்கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

    இதையடுத்து, உ.பி.யின் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியில் இருந்து அசம் கானை தகுதிநீக்கம் செய்து பேரவை தலைவர் உத்தரவிட்டார். அசம்கானின் ராம்பூர் சதார் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து அசம்கான் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

    • அசம் கான் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார்.
    • சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம் கான்.

    லக்னோ:

    சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    இதற்கிடையே, இந்த வழக்கு உத்தர பிரதேச சிறப்பு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், உ.பி.யின் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியில் இருந்து அசம் கானை தகுதிநீக்கம் செய்து பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

    • சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம் கான்.
    • கடந்த பொதுத்தேர்தலில் பிரதமர், முதல் மந்திரி ஆகியோரை அவதூறாகப் பேசியிருந்தார்.

    லக்னோ:

    சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு உத்தர பிரதேச ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

    ×