search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uniform"

    • கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
    • காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்

    காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.

    • மதுரையில் மறுசுழற்சி செய்யபட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக தயாரான சீருடைகள் விநியோகம் செய்யப்பட்டது.
    • நிப்பான் நிறுவனர் தனுஷ்கோடி மற்றும் இந்தி யன் ஆயில் நிறுவனத்தின் கோட்ட மேலாளார் பிரேமா மற்றும் சம்பத்குமார் ஆகியோர் சீருடைகளை வழங்கினர்.

    மதுரை

    மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் சீருடைகள் தயாரிக்கப் பட்டு இந்திய ஆயில் நிறுவ னத்தின் மூலமாக சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழி யர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் சீரு டைகளாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந் நிகழ்வில் நிப்பான் நிறுவனர் தனுஷ்கோடி மற்றும் இந்தி யன் ஆயில் நிறுவனத்தின் கோட்ட மேலாளார் பிரேமா மற்றும் சம்பத்குமார் ஆகி யோர் கலந்து கொண்டு ஊழியர்களுக்கு சீருடை களை வழங்கினர்.

    • 38 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது
    • புகளூர் டிஎன்பிஎல் காகிதஆலை நிறுவனம் வழங்கியது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் சமுதாயப் பணிகளில் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஓனவாக்கல் மேடு கிராமத்தை சேர்ந்த நலிவுற்ற சமுதாயத்தை சார்ந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் பள்ளியில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது.ஓனவாக்கல் மேடு கிராமத்தைச் சேர்ந்த 38 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் 2023- 2024 ஆம் கல்வியாண்டில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வி பயின்று வருகின்றனர்.இலவச கல்வி பெரும் குழந்தைகளுக்கு 2செட் பள்ளி சீருடைகள், காலனி, காலனி உறை மற்றும் பள்ளி கட்டணம் முழுவதும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வியும், இவர்களுக்கான பள்ளி கட்டணம் உட்பட அனைத்து செலவினங்களையும் டிஎன்பிஎல் காகித நிறுவனத்தின் மூலமாக பள்ளி நிர்வாகத்திற்கு செலுத்தும் .2007 -2008 ஆம் ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்த இலவச கல்வி திட்டத்தின் மூலம் இதுவரை 11 மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர்.

    மேலும் இந்த கல்வியாண்டில் 38 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ 13 லட்சம் செலவிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வித் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி சேஷாயி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் காகித பிரிவில் 3 1/2 ஆண்டுகால கட்டணமில்லா தொழில்நுட்ப பட்டய படிப்பு பயில ஆண்டுதோறும் 5 மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ,விடுதி கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் செலுத்தி காகித ஆலை நிறுவனம் கட்டணம் இல்லா கல்வி அளித்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎல் காகித ஆலை அழகு -1 ஐ சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் என்.புகளூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அழகு-2 ஐ சுற்றியுள்ள மொண்டிசெட்டிப்பட்டி, கே .பெரியபட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதல் முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசையின்படி வித்யா ,பிரவீன், ராமன் மற்றும் கௌசிக் ஆகிய நான்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 63 மாணவர்கள் கட்டணமில்லா தொழிற் பட்டயப்படிப்பு முடித்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர் .இக்கல்வியாண்டில் 19 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் இலவச தொழிற்கல்வி பயின்று வருகின்றனர்.இத் திட்டத்திற்காக டிஎன்பிஎல் காகித ஆலை நிறுவனம் தனது சமுதாய நலப்பணித் திட்டத்தின் மூலம் இந்த கல்வியாண்டில் 8 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது .38 மாணவர்களுக்கு இலவச பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குநர்( இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர்( மனிதவளம் )கலைச்செல்வன் மற்றும் முதுநிலை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு38பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகளை வழங்கினார்கள்.

    • ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.
    • 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் சீருடையுடன் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர்:

    தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர அமைப்பாளர் முத்துக்குமார், தெற்கு மாநகர அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர். கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாநகரத்துக்கு நிர்வாகிகளை நியமிக்க ஒப்புதல் வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நியமனம் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வது,

    வருகிற 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் சீருடையுடன் கலந்துகொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜசேகரன், பாலசுப்பிரமணியம், சசி என்கிற ஞானசிகாமணி, சசிக்குமார், லிங்கேஸ்வரன், ரவிச்சந்திரன், முகமது ஜூனைத், வடக்கு மாநகர துணை அமைப்பாளர்கள் சந்திரசேகர், பாண்டித்துரை, வஞ்சிமுத்து, பார்த்திபன், தியாகு, தெற்கு மாநகர துணை அமைப்பாளர்கள் விக்னேஷ், அரவிந்த், திருநாவுக்கரசு, சையது அபுதாஹிர், அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அசோக்பாபு மற்றும் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினர்.
    • இலவச சீருடைகள் , பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி பா.ஜனதா சார்பில் நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் தொழி லாளர்களுக்கு இலவச சீருடைகள் , பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா நகர மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அசோக்பாபு மற்றும் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினர்.

    தொடர்ந்து பாரத பிரதமர் மோடியின் சாதனை ஆட்சியின் கையேடுகள், வீடு வீடாக சென்று ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சிகள் கேந்திர பொறுப்பாளரும் தொகுதி பொதுச் செயலாளருமான விஜயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவர் இன்பசேகர் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிகளில் தலைமை அலுவலக பொறுப்பாளர் மகேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், பச்சையப்பன், பிரவீன்குமார், மாநில மகளிர் அணி துணைத் தலைவி கீதா சிவனேசன், ஓ.பி. .சி அணி மாவட்ட துணைத் தலைவி மஞ்சுளா, மாவட்ட மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வாசுகி,

    கிளை நிர்வாகிகள் சுதாகர் ,முருகன், உதயசங்கர், முனிராஜா, சரவணன், திலகா, மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் முருகன், நிர்வாகிகள் ராஜசேகரன், மணிவண்ணன், கஜேந்திரன், மூர்த்தி, செந்தில்குமார் மற்றும் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவிகள் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் சீராகுளம் அருகில் வசித்து வரும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் என்.விஜயராகவன் வழங்கினார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சீராகுளம் அருகே மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மற்றும் தாய் தந்தையை இழந்த பள்ளி மாணவிகள் கிருஷ்ணவேணி, ஸ்வேதா ஆகியோருக்கு புத்தகப்பை, எழுதுகோல், சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை சங்கத்தின் மாநில தலைவர் என்.விஜயராகவன் தலைமையில் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் பழனிவேல் தினேஷ்குமார், ராஜீவ் காந்தி கார்த்திக் வாணி கோகிலா அபிராமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    அதேபோல் பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    • கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • பொதுசெயலாளர் ஜீவா வினோத்குமார் கலந்து கொண்டு சுமை தூக்குவோர் சங்கத் தலைவரிடம் சீருடைகளை வழங்கினார்.

    கடலூர்:

    உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொது செயலாளர் ஜீவா வினோத்குமார் கலந்து கொண்டு சுமை தூக்குவோர் சங்கத் தலைவரிடம் சீருடைகளை வழங்கினார். இதில் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வர்த்தக பிரிவு தலைவர் அசோக் ராஜ், மாவட்ட தொழில் பிரிவு தலைவர் அழகு முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் பாட்டிகளை மறுசுழற்சி செய்து இந்த சீருடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • ஆண்டுக்கு 405 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

    இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள் மற்றும் இண்டேன் எல்பிஜி சிலிண்டர் விநியோகப் பணியாளர்கள் உள்பட சுமார் 3 லட்சம் பேருக்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த பிரத்யேக பசுமை சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை மறுசுழற்சி செய்து இந்த சீருடைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த முயற்சியின் மூலம் ஆண்டுக்கு 20 மில்லியன் அளவிலான சுமார் 405 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

    பிளாஸ்டிக் பாட்டில் அல்லாத பசுமையான எதிர்காலத்தை நோக்கி என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எஸ்.எம்.வைத்யா சீருடையை அறிமுகம் செய்து வைத்தார். இந்த பசுமை சீருடை நமது பசுமை சுற்றுச் சூலுக்கான உறுதிப்பாட்டை ஒளிரச் செய்யும் என்றும், முன்கள எரிசக்தி வீரர்கள் அதனை நிறைவேற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • தமிழ் தான் திராவிடத்தை ஆளவும் வைக்கிறது, தமிழர்களை வாழவும் வைக்கிறது.
    • மாணவர்களுக்கு சீருடை, புத்தகப்பை தாமதமின்றி வழங்க நடவடிக்கை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன்,டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் தாய்மொழியாம் தமிழ் தான். தமிழ் தான் திராவிடத்தை ஆளவும் வைக்கிறது, தமிழர்களை வாழவும் வைக்கிறது. வரும் நவம்பர் முதல் வாரத்திற்குள்ளாக சீருடை உள்ளிட்ட பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும். டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக புத்தகப்பை வழங்குவதற்கான பணிகளை தொடங்கி ஜனவரி மாதத்திற்குள்ளாக வழங்கி விடுவோம். அடுத்த கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்து 2 வாரத்திற்குள்ளாக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடை, புத்தகப்பை ஆகியவை தாமதம் இல்லாமல் வழங்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்லக்கண்ணு, கால்நடைபராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், தஞ்சாவூர் வருவாய்கோட்டாட்சியர் ரஞ்சித், உதவி இயக்குனர்சையத் அலி, பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜனாதிபதியின் கவுரவக்கொடி தமிழக போலீசுக்கு வழங்கப்பட்டது.
    • முதல் கட்டமாக 500 ‘பேட்ஜ்’ தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஜனாதிபதியின் கவுரவக்கொடி தமிழக போலீசுக்கு வழங்கப்பட்டது. இதன் நினைவாக, டி.ஜி.பி., முதல் போலீசார் வரை என, அனைவருக்கும், தமிழக அரசின் பதக்கம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.ஜனாதிபதியின் கவுரவக்கொடி கிடைத்து–ள்ளதால், அனைத்து போலீசாரும், சீருடையிலும், இனி ஜனாதிபதியின் கொடியான 'நிஸான்' என்ற சின்னம் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக, 'லோகோ' இடம்பெற்ற 'பேட்ஜ்' திருப்பூரிலும் தயாரிக்கப்ப–டுகிறது.இங்குள்ள 'எடர்நல் டெக்ஸ்டைல்ஸ்' மற்றும் 'ஷைன் டெக்ஸ்டைல்ஸ்' ஆகிய இடங்களில் தயாராகி வருகிறது. முதல் கட்டமாக, 500 'பேட்ஜ்' தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ்துறை நவீனமாயமாக்கல் கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் கூறியதாவது:-

    டி.ஜி.பி., உத்தரவின் பேரில், 'லோகோ' தயாரிக்கும் பணி மேற்கொ–ள்ளப்பட்டது. பல 'லோகோ' தயாரிப்பாளர்களை அணுகி, மாதிரி தயார் செய்ய கூறினோம்.

    மும்பை, டில்லியில், தலா இருவர், சென்னையில் ஒருவர் மற்றும் திருப்பூரில் நால்வர் மாதிரி தயார் செய்தனர். அதில், தரம், கலர் உள்ளிட்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு, சரியான 'லோகோ'வை முடிவு செய்தோம். 'லோகோ' வில் இடம்பெற்றுள்ள கலர், பஞ்சாப், மலர்கோட்லாவில் தயார் செய்யப்பட்டு, பின், இங்கு பேட்ஜ் தயார் செய்யப்பட்டது. 'லோகோ'வில், ஒன்பது கலர் இடம்பெற்றுள்ளது. இனி, மொத்தமாக ஊர்களுக்கு பிரித்து வழங்கி 'பேட்ஜ்' செய்யும் பணி நடக்க உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

    • பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பேனா வழங்கப்பட்டது.
    • ரோட்டரி சங்க பட்டய தலைவர் அலாவுதீன், ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாணவிகள் 32 பேருக்கு சீருடையும், மாணவ, மாணவிகள் 500 பேருக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சியும் தாளாளர் அப்துல் மத்தீன் தலைமையில் நடந்தது.

    ரோட்டரி சங்க பட்டய தலைவர் அலாவுதீன், ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். பள்ளி நிர்வாகிகள் ரமீஸ், அஜ்ஹர், ஆசிரியர்கள், ரோட்டரி உறுப்பினர்கள் பொருளாளர் சிவகார்த்திக், மருத்துவர் செய்யது ராசிக்தீன், தர்மராஜ், சுந்தரம், சபிர், செய்யது மிதாஹிதின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விபத்து ஒன்றில் இவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்ட முடியாமல் போனது.
    • பல்வேறு இடங்களில் தனக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்றும் வேலை கிடைக்கவில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கல் அருகே மஞ்சகொள்ளை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். ஆட்டோ டிரைவர். இவருக்கு சுபா என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில் இவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்ட முடியாமல் போனது. இவர் பல்வேறு இடங்களில் தனக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்றுள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    மேலும் தனக்கோ அல்லது மனைவிக்கோ அரசு வேலை வழங்க கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். பிள்ளைகளுக்கு சீருடை மற்றும் தினம்தோறும் உணவுக்கு வழியில்லாமல் வாழ்ந்து வருவதாகவும், அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ தனக்கு வேலை வாய்ப்பு வழங்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×