என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Priest"
- கிராம பூசாரிகள் பேரவை கூட்டம் நடந்தது.
- சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சோம சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிராம பூசாரிகளின் ஒன்றிய அளவிலான பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிராம பூசாரிகள் பேரவை மாவட்ட இணை அமைப்பாளர் முத்து தலைமை தாங்கினார். பேரவை ஒன்றிய அமைப்பாளர் அரிமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சோம சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில் பெரும்பான்மையான கிராம பூசாரிகளுக்கு ஓய்வூதியம் முறையாக கிடைக்க வில்லை எனவும், நலவாரிய உதவிகள் கிடைக்க வில்லையெனவும் பூசாரிகள் முறையிட்டனர். மேலும் கிராமப் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் நலவாரியம் கிடைக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டுமெனவும், அரசு வழங்கக்கூடிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிராமப்புற பூசாரிகளுக்கு கிடைக்கப் பெற வழிவகை செய்ய வேண்டுமெனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
- ரெயில் நிலையம் எதிரேஉள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்ய சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை பாத்திமா மேல்நிலைப்பள்ளி முதல்வரும் கிறிஸ்தவ பாதிரியாருமாக இருப்பவர் மகிமை.
சம்பவத்தன்று மதியம் இவர் ரெயில் நிலையம் எதிரேஉள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்ய சென்றார்.
அப்போது ஆலய நுழைவு வாயிலில் பாதிரியார் மகிமை பைக்கில் சென்ற போது புதுவை பெட்டிகெனல் தெருவை சேர்ந்த சாமி என்ற ஆரோக்கிய சாமி என்பவர் வழிமறித்து தகாதவார்த்தை களால் திட்டினார்.
மேலும் தனக்கு அரசியல் செல்வாக்கும் அடியாள் பலமும் உள்ளது. உன்னை என்றாவது ஒரு நாள் கொலை செய்து விடுவேன் என்று கூறியதோடு சிகரெட் புகையை பாதிரியார் மகிமையின் முகத்தில் ஊதினார். இதையடுத்து பாதிரியார் மகிமை ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாதிரியார் ஜெகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
- தலைமறைவான ஜெகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை:
குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெகன்(வயது 39). இவர் பாதிரியாராக இருந்து வருகிறார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் சொந்தமாக கிறிஸ்தவ சபை கட்டி போதகம் செய்து வருகிறார்.
இவரது சபைக்கு சில ஆண்டுகளாக 40 வயது பெண் ஒருவர் வந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை தொடர்பு கொள்வதற்காக அவரிடம் செல்போன் எண்ணை ஜெகன் வாங்கி உள்ளார்.
எப்போதாவது போன் செய்து வந்த ஜெகன், காலப்போக்கில் அந்த பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு கணவர் இல்லை. ஒரு மகன் மட்டுமே உள்ளார் என்பதை அறிந்த மதபோதகர் அந்த பெண்ணி டம் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அந்த பெண் நேற்று மாலையில் வீட்டில் இருந்த 40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, பாதிரியார் ஜெகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
அவரை கைது செய்வதற்காக அவர் தங்கியிருக்கும் தச்சநல்லூர் மங்களா குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து தலைமறைவான ஜெகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பூச்சந்தை சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
- தமிழ் அர்ச்சகர்களையும் பங்கெடுக்க செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தெய்வ தமிழ்ப் பேரவை நகர அமைப்பாளர் பழ.ராசேந்திரன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் பூக்கார தெரு பூச்சந்தை சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ளது.
இந்த குடமுழுக்கின் போது நிகழும் வேள்விச்சாலை, கருவறை, கோபுரகலசம் ஆகிய மூன்று இடங்களிலும் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும்.
வேள்விசாலை, கோபுர கலசம் ஆகிய இடங்களில் சமஸ்கிருத அர்ச்சகர் எண்ணிக்கைக்கு இணையாக தமிழ் அர்ச்சகர்களையும் பங்கெடுக்க செய்ய வேண்டும். எனவே குடமுழுக்கை தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்திட உரிய ஏற்பாடுகள் செய்து உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஞானசுந்தரம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உதவி அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.
- எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (வயது 42) .இவரது மனைவி அபிநயா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும்,4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஞானசுந்தரம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உதவி அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பணியிலிருந்த அர்ச்சகர் ஞானசுந்தரம் மந்திரங்கள் கூறுவதற்காக மைக்கை கையில் எடுத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஞானசுந்தரம் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து திருவாரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
- பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தத் திருச்சபையின் பிஷப்பாக பர்னபாஸ் இருக்கிறார்.
திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபையின் கல்வி நிலவரக் குழு செயலாளர் மற்றும் திருச்சபை கட்டுப் பாட்டின்கீழ் வரும் பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளர் பதவிகளை தி.மு.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் எஸ். ஞானதிரவியம் வகித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல பிஷப்பின் ஆதரவாளர்களை தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதும், இந்தத் தாக்குதலில் பிஷப் காட்பிரே நோபிள் மோசமாக தாக்கப்பட்டதும், உதைக்கப்பட்டதும் வீடியோ காட்சிகளாக சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பாராளுமன்ற உறுப்பினரே தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரு பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே அவர்களை கைது செய்யவும் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் வழங்குகின்றனர். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.
- ரூ.350 கோடியில் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையம் கட்ட 2018-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இதுவரை ஒரு கோவில் மட்டும் தான் கட்டபட்டுள்ளது.
நெல்லை:
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்ற பொன்.மாணிக்கவேல் இன்று நெல்லைக்கு வருகை தந்தார். அவர் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 38 ஆயிரம் கோவில்கள் உள்ளது. இதில் நலிவடைந்த கோவில்கள் பல உள்ளது. கோவில்கள் பணம் வருமானத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. இது தவறான முன்னுதாரணம். இது போன்று பிரிப்பது வியாபார நோக்கமாக மாறிவிடும்.
தூத்துக்குடி மாவட்டம் நானல்காடு பகுதியில் உள்ள திருகண்டீஸ்வரர் கோவில் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. சிதிலமடைந்த கோவில் ஆபத்தான நிலை இருப்பதால் கோவில் மூடப்பட்டுள்ளது. அது பாண்டியர் காலத்து கோவில். உடனடியாக சிதலமடைந்த கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
கோவில் பூஜைக்கு வயதான அர்ச்சகர்களை நியமித்துள்ளனர். அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் வழங்குகின்றனர். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.
கோவில்களை வரலாற்று பொக்கிஷங்களாக பார்க்க வேண்டும். கோவில்கள் தமிழ் பேரரசர்களால் கட்டப்பட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் உடனடியாக அதனை காப்பாற்ற வேண்டும். ரூ.350 கோடியில் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையம் கட்ட 2018-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இதுவரை ஒரு கோவில் மட்டும் தான் கட்டபட்டுள்ளது. உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை பணிகள் முழுமை பெறவில்லை. பந்தநல்லூர் கோவில் திருமேனி பாதுகாப்பு மையம் மட்டும் கட்டபட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அங்கும் நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவிக்கப்பட்ட அளவீடுகளில் கட்டப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக சொல்லி வருகின்றனர்.
தமிழகத்தை ஆளுகின்றவர்களும், முதலமைச்சராக வர ஆசைப்படுபவர்களும் கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அப்சராவை கோவில் பின்புறத்தில் எரித்து சுமார் இரண்டு லாரி மணலால் மூடி கொலையை மறைத்துள்ளார்.
- கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷரூர்நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா (36). கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் சாய் கிருஷ்ணா ஷரூர்நகர் பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.
நற்குடா கிராமத்தைச் சேர்ந்த அப்சரா (30) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அப்சராவுக்கும் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதில், அப்சரா கர்ப்பமானதாக தெரிகிறது. பின்னர், சாய் கிருஷ்ணாவின் வற்புறுத்தலால் அப்சரா கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
மேலும், அப்சரா சாய் கிருஷ்ணாவிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதற்கு பூசாரி சாய் கிருஷ்ணா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுல்தான்பல்லி பகுதியில் உள்ள பசு கொட்டகத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அங்கு, திருமணம் குறித்து அப்சரா பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாய் கிருஷ்ணா அப்சராவை அடித்து தாக்கியுள்ளார். பின்னர், அப்சராவை கோவில் பின்புறத்தில் எரித்து சுமார் இரண்டு லாரி மணலால் மூடி கொலையை மறைத்துள்ளார்.
தொடர்ந்து, சாய் கிருஷ்ணா அப்சராவை காணவில்லை என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் சாய் கிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையின் மூலம் அப்சராவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை கைது செய்தனர். பூசாரி செய்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் ராம் சங்கர் தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.
- ராம் சங்கர் தாஸ், தான் பயன்படுத்தி வந்த ஆடையை கயிறாக்கி, அதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அயோத்தியை சேர்ந்த 28 வயதான பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நரசிம்மா கோயிலில் பூசாரியாக இருந்து வந்த ராம் சங்கர் தாஸ், போலீசார் தனக்கு தொல்லை கொடுத்ததாலேயே, இந்த முடிவை எடுத்ததாக கூறியிருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் 80 வயது முதியவர் ராம் சரன் தாஸ் காணாமல் போன வழக்கில் போலீசார் ராம் சங்கர் தாஸ் மீது சில தினங்களுக்கு முன்பு தான் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் ராம் சங்கர் தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ராம் சங்கர் தாஸ் இரண்டு நாட்களாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார்.
இதனால் ராம் சங்கர் தாஸ்-ஐ தேடிய போலீசார், அவரது அறையை திறந்து பார்த்தனர். அப்போது ராம் சங்கர் தாஸ் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. ராம் சங்கர் தாஸ், தான் பயன்படுத்தி வந்த ஆடையை கயிறாக்கி, அதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
மேலும் தற்கொலையை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருக்கிறார். ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், ராம் சங்கர் தாஸ், ராய்கஞ்ச் போலீஸ் அவுட்போஸ்ட் மற்றும் கான்ஸ்டபில் மீது குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கோட்வாலி காவல் நிலைய அதிகாரி மனோஜ் சர்மா கூறும் போது, "பூசாரி ராம் சங்கர் தாஸ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். போதை பழக்கம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர் போலீசார் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்," என்று தெரிவித்தார்.
மேலும், இரண்டு நாட்களாக விசாரணைக்கு ராம் சங்கர் தாஸ் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவரது அறைக்குள் சென்றோம். அங்கு அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது, என்று அவர் தெரிவித்தார்.