என் மலர்
நீங்கள் தேடியது "அர்ச்சகர் பள்ளி"
- ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் மிக குறைவாக உள்ளது
- ஆகமம் மற்றும் ஆகமம் அல்லாத கோவில்களை 3 மாதத்தில் அடையாளம் காண உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி பல கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் ஆகமத்திற்கு எதிராக அனைத்து சாதி அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்கள் நியமிப்பதற்கோ தேர்வு செய்வதற்கோ தடை விதிக்கவேண்டும் என்று ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் உச்சநீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கோடு தமிழகத்தில் உள்ள அனைத்து கோவிலைகளிலும் அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனம் செய்யவேண்டும் என்ற வழக்கையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், "2,500க்கும் மேற்ப்பட்ட அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனை நிரப்பும் வகையில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் மிக குறைவாக உள்ளது என்றும் அந்த கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமனம் செய்யக்கூடாது. ஆகம விதிகளை பின்பற்றாத கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனம் செய்ய தங்களுக்கு ஆட்சபனை இல்லை என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ராமேஸ்வரம் கோயிலில் அரச்சகர், மணியம் உள்ளிட்டோரை நியமிக்கவும் ஆகமம் மற்றும் ஆகமம் அல்லாத கோவில்களை 3 மாதத்தில் அடையாளம் காணவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பின்னர் இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
- தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- ஆண்டுக்கு 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ள நிலையில் தற்போது 16 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பயணிகள் தங்கும் விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பழனியில் மாவட்ட கலெக்டர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ெ பான்ராஜ், கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜசேகரன், மணிமாறன், உதவி ஆணையர் லெட்சுமி, நகர் மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, பயிற்சி பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு திருக்குறள் மற்றும் நீதி நூல்கள் போன்ற போதனை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. ஆண்டுக்கு 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ள நிலையில் தற்போது 16 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
சிறு வயதில் இருந்தே அர்ச்சகராக வேண்டும் என விரும்பிய மாணவர்களுக்கு தற்போது தொடங்கப்பட்டுள்ள பயிற்சி பள்ளி அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், கோவில்களில் பூஜை செய்யலாம் என்ற சமத்துவ நோக்கில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்துள்ள முதல்-அமைச்சருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.






