என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archakar School"

    • தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
    • ஆண்டுக்கு 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ள நிலையில் தற்போது 16 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பயணிகள் தங்கும் விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பழனியில் மாவட்ட கலெக்டர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ெ பான்ராஜ், கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜசேகரன், மணிமாறன், உதவி ஆணையர் லெட்சுமி, நகர் மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, பயிற்சி பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாணவர்களுக்கு திருக்குறள் மற்றும் நீதி நூல்கள் போன்ற போதனை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. ஆண்டுக்கு 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ள நிலையில் தற்போது 16 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

    சிறு வயதில் இருந்தே அர்ச்சகராக வேண்டும் என விரும்பிய மாணவர்களுக்கு தற்போது தொடங்கப்பட்டுள்ள பயிற்சி பள்ளி அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், கோவில்களில் பூஜை செய்யலாம் என்ற சமத்துவ நோக்கில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்துள்ள முதல்-அமைச்சருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    ×