search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caste"

    • பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர்.
    • சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புவனேஸ்வர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நடத்தி வருகிறார். அவரது யாத்திரை, தற்போது ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்து வருகிறது. இன்று யாத்திரையில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    பிரதமர் மோடி, தனது சாதி பற்றி பொய் சொல்கிறார். அவர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் அல்ல. அவர் குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். அந்த சமூகத்திற்கு 2000-ம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் அடையாளத்தை பா.ஜனதா வழங்கியது. பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர். பொது சாதியில் பிறந்தவர் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்கமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தி தனது யாத்திரையில் பிரதமர் மோடி, மத்திய அரசையும் விமர்சனம் செய்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை பற்றி பேசி வருகிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை.
    • யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது ராகுல் காந்தி அசாமில் நடைபயணம் மேற்கொண்டார்.

    அசாமை தொடர்ந்து ராகுல் காந்தி தனது யாத்திரையை அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மதம் மற்றும் மொழியின் பெயரால் பாஜக தங்களுக்குள் சண்டையிட மக்களைத் தூண்டுகிறது. நாட்டை பிரிக்கிறது. பாஜக ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறதே தவிர, மிகவும் கஷ்டப்படும் மக்களின் நலனுக்காக அல்ல.

    மறுபுறம், காங்கிரஸ் மக்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுகிறது. ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கி மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிவடையும் 6,713 கிமீ நீளமுள்ள யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

    நாங்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை வழங்கினோம். ஏழைகளின் பிரச்சினைகளை எழுப்பவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகவும் எங்கள் கட்சி எப்போதும் தயாராக உள்ளது.

    பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை. அவர்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் எழுப்பவில்லை. யாத்திரையின் போது, காலை முதல் மாலை வரை பல மணிநேரம் பயணித்து, மக்களின் வலி மற்றும் துன்பங்களை கேட்கும் இடங்களில் நின்றுகொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாதி மோதல்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறினார்.
    • தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.

    மதுரை

    மதுரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை விடுவிக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக நீண்ட போராட்டம் நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான சூழல் வரும் என்று நம்புகிறோம்.

    மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு கூடி எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து விட்டது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.

    எனவே தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி தான் பழனிசாமி தான்

    தமிழக அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. இது தொழிலாளர்களுக்கு எதிரான செயல்.

    தமிழகத்தில் ஜாதி மோதல் இருக்கிறது. சமீபத்தில் பரமக்குடியில் நடந்த கல்லூரி விழாவில் தாழ்த்தப்பட்ட மாணவன் மீது பிற மாணவர்கள்-ஆசிரியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    மேலும், கடலாடியில் பள்ளி ஆசிரியரை அதிகாரிகள் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.

    இந்தச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற சம்பவங்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்லடத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
    • நம் நாட்டின் பாரம்பரியம் குறித்து தெரியப்படுத்த இங்கு ஆளில்லை.

    பல்லடம் :

    பல்லடத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. பொள்ளாச்சி ரோடு, வடுகபாளையத்தில் துவங்கி ஹாஸ்டல்ரோடு, கொசவம்பாளையம் ரோடு வழியாக பொதுக்கூட்ட மேடை வரை அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் துவக்கிவைத்தார். ஏராளமான தொண்டர்கள் சீருடையுடன் அணிவகுப்பில் நேர்த்தியுடன் பங்கேற்றனர்.

    திருப்பூர் கோட்ட பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் கார்மேகம், பல்லடம் நகர தலைவர் செந்தில்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி கோட்ட தலைவர் முத்துகிருஷ்ணசாமி பேசுகையில், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும்இந்த இயக்கத்தில் உள்ளனர். நம் நாட்டின் பாரம்பரியம் குறித்து தெரி யப்படுத்த இங்கு ஆளில்லை. ஆர்.எஸ்.எஸ்.,ன்ஒவ்வொரு தொண்டனும் தேசத்தின் பாரம்பரியத்தை விதை க்கின்றனர். முன்னோர்கள், குடும்ப உறவுகள், பாரம்ப ரியம் குறித்து இன்றைய தலை முறைக்கு சொல்ல ப்படுவதில்லை.தீண்டாமை, சாதிவேறுபாடுகள் ஒவ்வொருவர் மனதிலும் இருந்தும் நீங்க வேண்டும். தாங்கள் வகுத்த கொ ள்கைகள், சித்தாந்த ங்களை பல அமைப்புகள் இழந்து ள்ளன. ஆனால் தான் கொண்ட கொள்கை களால் கடந்த 97 ஆண்டு களாக உடையாத இயக்க மாகஆர்.எஸ்.எஸ்., உள்ளது என்றார்.உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பா.ஜ., மாநில பொது செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்டோர் பங்கே ற்றனர்.அணி வகுப்பில் ஏராளமான தொண்டர்கள் சீருடையுடன் கம்பீரத்துடன் பங்கேற்றனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
    • கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபம் ஆனதையடுத்து புகார் கூறப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப் பட்டார்.

    புதிய எஸ்.பி. நியமனம்

    தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சிலம்பரசன் நெல்லை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார்.

    அவர் இன்று காலை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். உளவுத்துறையின் அறிக்கை யின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

    பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கஞ்சா விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரமும் என்னை 9498101775 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.
    • வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெறாதவாறு நடவடிக்கை.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் சாதி குறித்து கேள்வி இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய கேள்வியால் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இனிவரும் காலங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வினாக்கள் இடம் பெறாதவாறு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்ற வினாத்தாள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வில் சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
    • அ.ம.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

    அரியலூர்:

    அரியலூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் அலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது அ.தி.மு.க.வில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்கள் குறித்து அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளிவந்துள்ளது. அவர் உண்மையைத்தான் பேசியுள்ளார். ஆனால், யாருக்கோ பயந்து கொண்டு அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

    இதே போல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக நான் பேசியபோது, என் மீது வழக்கு தொடுக்கப்படும் என ஜெயகுமார் கூறியுள்ளார். அந்த வழக்கை சந்திக்க நான் தயார். அப்போதுதான் ஆடியோவில் உள்ள உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, அ.தி.மு.க.வில் நடைபெறக்கூடிய அனைத்து சம்பவங்களும் தொண்டர்களுக்கு தெரியவரும். அ.தி.மு.க. பொது குழு எவ்வாறு நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வில் தற்போது சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சாதிரீதியாக பிரித்து, அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிட பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது. துரோகம் செய்தவர்கள் துரோகத்தால் அழிந்து போவார்கள். விரைவில், துரோகிகளிடமிருந்து அ.தி.மு.க. மீட்கப்படும் என்றார்.

    கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் துரை.மணிவேல் தலைமை வகித்தார். அ.ம.மு.க. துணைச் செயலர் ரங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்டச் செயலர் ராஜேஷ், பெரம்பலூர் மாவட்டச் செயலர் கார்த்திக்கேயன், தா.பழூர் ஒன்றியச் செயலர் புகழேந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான்கு பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
    • சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம்

    சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வி கேட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வினாத்தாள் பிற பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டதாக விளக்கம்.
    • பெரியார் பல்கலைக்கழகத்திலேயே சாதி பற்றிய கேள்வி கேட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வி கேட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

    மேலும், வினாத்தாள் பிற பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

    பெரியார் பல்கலைக்கழகத்திலேயே சாதி பற்றிய கேள்வி கேட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மாணவர்கள் மத்தியில் ஜாதி வன்மத்தை தூண்டியதாக ஆசிரியைகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • வன்மத்தை தூண்டிவிடும் ஆசிரியர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.

     மதுரை

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆயோசனை குழு உறுப்பினராகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்னாள் கண்காணிப்பு குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். கடந்த மாதம் சமூக வலைதளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆசிரியருக்கு எதிராக உயர்சாதியை சேர்ந்த ஒரு மாணவரை பள்ளி ஆசிரியைகள் தூண்டிவிட்டு பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.

    வாட்ஸ்-அப்பில் வெளிவந்த ஆடியோவில் பேசியவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் உள்ள குவத்தூர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் என்பது தெரியவந்தது. மாணவர்கள் மத்தியில் சாதி வன்மத்தை தூண்டிவிடும் ஆசிரியர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரி யர்களே இதுபோன்று சாதி வன்மத்தை மாணவர்கள் மத்தியில் விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில், மனுதாரர் புகார் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, விளாத்திகுளம் போலீஸ் டி.எஸ்.பி. ஆகியோர் மேற்பார்வையில் குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 2 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியை குறிப்பிடக் கூடாது என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியை குறிப்பிடக் கூடாது.

    வருவாய்த் துறை வழங்கிய சாதிச் சான்றிதழ் தான் இறுதியானது என்பதால், பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை

    சாதி என்ற பிரிவில் வருவாய்த்துறை ஆவணத்தில் பார்க்கவும் என குறிப்பிடவும் என தெரிவித்துள்ளது.
    ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் என்னைப் பொறுத்தவரை அதை விளையாட்டாக கூட பயன்படுத்தக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவன தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் என்னைப் பொறுத்தவரை அதை விளையாட்டாக கூட பயன்படுத்தக்கூடாது. கருணாஸ் அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.



    ஜாதியைப் பற்றி பேசும் காலம் முடிந்து விட்டது. என்னைப் பொருத்தவரை அதைப்பற்றி பேசவே கூடாது.

    எந்த தேர்தலாக இருந்தாலும் ஆயத்தம் இல்லாமல் எதையும் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளவன் நான். அது உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி. ஆயத்தம் இல்லாமல் செய்யக்கூடாது என்பதால் தான் எங்களுடைய பயிலரங்க தேதியை மாற்றி இருக்கிறேன்.

    உள்ளாட்சி தேர்தல் வரும்போது அதைப் பற்றி பேசலாம். இவர்கள் நடத்தும் தேர்தலை வேடிக்கையாகத் தான் பார்க்க வேண்டும்.

    நான் மக்களை சந்திக்க கிராமங்களுக்கு சென்றேன். அங்கு நாங்கள் நடத்தும் கூட்டத்துக்கு அனுமதி எளிதாக கிடைக்கவில்லை. அதனால் இடங்கள் மாற்றப்பட்டது.

    மேடை அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் சந்தோ‌ஷமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தார்கள்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதையை ‘அயர்ன் லேடி’ என்ற பெயரில் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் கட்சியினர் படமாக எடுக்கிறார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 13 பேர் குண்டு பாய்ந்துதான் இறந்துள்ளனர். அதைத்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பண்டு வந்ததா? செண்டு வந்ததா? என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது. குற்றத்திற்கு மன்னிப்பு கோர வேண்டிய நேரத்தில் குற்றத்தை மக்கள் பக்கமே திருப்பக்கூடாது.

    ஊழலை ஒழிப்பது என்பதை ஆதாரங்களுடன் கையும் களவுமாக பிடிக்க வேண்டும். அதுதான் ஒரே வழி. ஆனால் ஊழல் செய்பவர்கள் சாதுர்யமாக செய்வதால் ஆதாரங்களை திரட்டுவது கஷ்டமாக இருக்கிறது. ஊழலை ஒழிக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    ×