என் மலர்
நீங்கள் தேடியது "allegation"
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் விரைவாக முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்
- எந்த பணிகளையும் செய்யாமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது.
கோவை,
கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதி கோவைப்புதூரில், அ.தி.மு.க. துணை செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான டி.ரமேஷ் ஏற்பாட்டில் நீர் மோர்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி. வேலுமணி எம்.எல்.ஏ., திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி மற்றும் நீர்மோர் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய தாவது:-
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள்.
ஆனால் விடியா தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற இந்த 2 ஆண்டு காலங்களில் எந்த திட்டங்களையும் தரவில்லை.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் விரைவாக முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
கோவையை பொறுத்த வரை அதிமுக ஆட்சி காலத்தில் பாலங்கள், சாலைகள் அனைத்தும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.
தற்பொழுது எந்த பணிகளையும் செய்யாமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. சாலைகள் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத வகையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் கூட இருந்து விட்டோம். பல போராட்டங்களையும் ஆர்ப் பாட்டங்களையும் நடத்தி விட்டோம்.
தற்பொழுது கோவைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி யானது போதுமானதாக இல்லை. இந்த அரசு இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும்.
இனியாவது இந்த திமுக அரசு விழித்துக் கொண்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை பாகுபாடு பார்க்காமல் நிறைவேற்ற வேண்டும்.
ஒட்டுமொத்தமாக தமிழகமெங்கும் இன்றைய தி.மு.க அரசின் மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர். இப்போது தேர்தல் வைத்தாலும் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெறும். மக்களை புரிந்த எடப்பா டியார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் சுண்டக்காமுத்தூர் பகுதி செயலாளர் வி.குலசேகரன், குனிய முத்தூர் பகுதி செயலாளர் மதனகோபால், பகுதி தலைவர் கே.ஆர். செல்வராஜ், வட்ட கழக செயலாளர்கள் தமிழரசி கே. சுப்பிரமணியன், சி.ஜனார்த்தனன், எஸ்டி.கதிரேசன், பிரகாஷ், எஸ்.சி. செல்வராஜ் மற்றும் வட்ட கழக துணை செயலாளர் பி.நித்தி யானந்தம், நிர்வா கிகள் ஓம் சக்தி தேவராஜ், ஜெயபால், ராஜசேகர், வடிவேல், ஜீவானந்தம், குமார், ஆவின் மண்டல செயலாளர் ஆவின் எஸ்.முருகன், அம்மா பேரவை பகுதி செயலாளர் ஜி.எம்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு.
- திமுக பேச்சாளரின் தரக்குறைவான பேச்சிற்கு கனிமொழி மன்னிப்பு கோரியிருந்தார்.
பாஜகவில் உள்ள நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகார் எழுந்தது. சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் ஒருவரான நடிகை குஷ்பு குறித்து அவர் தரகுறைவாக பேசியது சமுக வளைதளங்களில் வெளியானது.
இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி மன்னிப்பு கோரியிருந்தார். இதையடுத்து தமது பேச்சிற்கு சைதை சாதிக்கும் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் அவரை மன்னிக்க முடியாது என்று குஷ்பு கூறியிருந்தார். இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்,வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- திருப்பரங்குன்றம், விருதுநகர், சிவகாசி பகுதிகளின் எந்த கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை/
- மாணிக் தாகூர் எம்.பி குற்றச்சாட்டினார்.
திருமங்கலம்
திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணிக் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார். மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளிக்குடி தாலுகாவாக மாறி 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படவில்லை. தாலுகாவாக மாறுவதற்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களே இன்று வரை உள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றில் எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒன்றை மோடி செய்திருக்கிறார். சுதந்திர தின விழா மேடையில் குடும்ப அரசியல் குறித்து பேசி இருக்கிறார். அது உண்மையிலேயே மற்றவர்களுக்காக சொன்னதா? அல்லது அமித்ஷாவின் மகன் குறித்து பேசினாரா? என்பது தெரியவில்லை.
தமிழிசை சவுந்தராஜன், பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோது கூட அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் நடைபெற்றதில்லை. அண்ணாமலை பொறுப்பேற்ற பின்பு தான் பா.ஜ.க. அரசியலில் அநாகரிகமான செயல்கள் நடைபெறுகிறது.
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் பலமுறை பேசி உள்ளோம். ஆனால் அமைச்சரவை அலுவலகம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி இந்த கோரிக்கையை புறக்கணிக்கிறது.
அதே போல் திருமங்கலம், திருப்பரங்குன்றம், விருதுநகர், சிவகாசி பகுதிகளின் எந்த கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதற்கு சாட்சியாக கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது.
திருமங்கலம், சிவகாசியில் சென்னை ெரயிலை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அதையும் மத்திய அரசு நிராகரிக்கிறது. இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படும் இ்வ்வாறு அவர் கூறினார்.
கரூர்:
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, அண்ணாநகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை தேர்தல் அதிகாரி 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது. எனவே மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்களை அழைத்து அவரே கூறினார். ஆனால் இரவு 11 மணிக்கு மேலே அகில இந்திய தேர்தல் ஆணையம் 13 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு என அறிவிக்கிறது. அப்படியானால் மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த தவறு என்ன ஆனது.
தேர்தல் ஆணையம் மீதான சந்தேகம் பற்றி நாங்கள் புகார் சொன்னால், தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தேர்தல் ஆணையத்துக்கு வக்காலத்து வாங்கி அவர்கள் செய்வது சரி என்கிறார்கள். எனவே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு, உத்தரவுக்கு பணிந்து தான் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் நாங்கள் சொல்கிறோம், தலைமை தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும். அல்லது சிறப்பு பார்வையாளரை நியமித்து வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும்.
இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்திற்கு வித்திட வாய்ப்பு இருக்கிறது. இதனால் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்கிற அச்சத்துடன் தான் அ.தி.மு.க. உள்ளது. இதனால் 4 தொகுதிகளிலும் தில்லுமுல்லு செய்ய ஆளுங்கட்சி தயாராக இருக்கிறது. தேர்தல் முடிவு அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எதிராகத்தான் இருக்கும். பிளஸ்-1, பிளஸ் -2 மாணவர்களுக்கு 6 பாடத்தில் இருந்து 5 பாடமாக குறைத்து, மொழிப்பாடத்தில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையென்றால் அதிக மாணவர்கள் தமிழை புறக்கணிக்கும் நிலை ஏற்படும்.
ஆனால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அப்படிவராது என தெரிவித்துள்ளார். அது நம்பிக்கை அளித்தாலும் கூட எந்த சூழ்நிலையிலும் தமிழ் படிப்பை மாணவர்கள் கைவிடும் வகையில் தமிழக அரசு செயல்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் பிரபலங்கள், ‘மீ டூ’ என்ற சமூக வலைத்தள ஹேஷ்டேக் மூலம், தங்களது பாதிப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், முன்னாள் ‘மிஸ் இந்தியா’ அழகியும், நடிகையுமான நிஹரிகா சிங், அதில் தனது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், டெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் அனிசியா பத்ரா, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் மயாங்க் சிங்வி கைது செய்யப்பட்டார். மயாங்க் சிங்வி மீதுதான் நிஹரிகா சிங் குற்றம் சாட்டி உள்ளார். அதில், ‘‘கடந்த 2011-ம் ஆண்டு, சிங்வியை ஒரு பிறந்தநாள் விருந்தில் சந்தித்தேன். பிறகு அவர், எனது பெயரை தனது மார்பில் பச்சை குத்திக்கொண்டார்.
என்னிடம் காதலை தெரிவித்தார். எனக்கு மோதிரம் பரிசளித்து, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவருக்கும், எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அவரது மோசமான குணம் தெரிந்தவுடன், நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தேன். அதனால் ஆத்திரம் அடைந்த அவர், என்னை ஆபாசமாகவும், சாதி ரீதியாகவும் திட்டினார். தாக்கவும் செய்தார். என்னை பற்றி தவறான செய்திகளை பரப்பினார்’’ என்று நிஹரிகா கூறியுள்ளார். #MeToo #NiharikaSingh
சினிமா துறை உள்ளிட்ட பல்வேறு துறை களைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம், புகார் கூறி வருகிறார்கள். நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பாலியல் புகார்களுக்கு ஆளாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகார் தெரிவிக்கும் பெண்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் பெண்கள் கூறும் பாலியல் தொல்லை புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்றும், மேலும் அப்படி புகார் தெரிவிக்கும் பெண்களுக்கு தேவையான உதவிகளையும், பாதுகாப்பையும் வழங்குமாறு தேசிய பெண்கள் நல ஆணையத்துக்கு கட்டளையிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரர் எம்.எல்.சர்மா நேற்று ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், உரிய நேரத்தில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர். அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு, தம்மை முதல்வராக ஆக்குவதற்கு ஓபிஎஸ் கூறியதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிப்பதற்காக இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 4 நாட்களுக்கு முன்பு, பாஜகவுடன் தாம் இணைந்து தமிழக அரசை கவிழ்க்க முயற்சித்ததாக தினகரன் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து தினகரன் என் மீது அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.
மேலும், ஆர்.கே நகரில் பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதுபோல், கட்சியில் தினகரனின் பொய் பிரச்சாரம் பலிக்காது என தெரிவித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் தினகரன் இவ்வாறு செய்துவருவாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருந்த தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 2-வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்தும் வாய்ப்பு அளிக்கப்படாத கருண்நாயரை போல் முரளி விஜய்யும் தேர்வு குழுவினர் மீது குற்றம்சாட்டி இருக்கிறார். இதுதொடர்பாக முரளி விஜய் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு என்னிடம் தேர்வு குழு தலைவரோ, தேர்வு குழு உறுப்பினர்களோ பேசவில்லை.
இங்கிலாந்து பயணத்தில் இடம் பிடித்து இருந்த அணி நிர்வாகிகளிடம் கலந்துரையாடினேன். அணி வீரர்கள் தேர்வுக்கு எந்த மாதிரியான அளவுகோல் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது புரியாததாக இருக்கிறது என்று ஹர்பஜன்சிங் கூறிய கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். அணியில் இருந்து ஒரு வீரரை நீக்கும் போது அதற்கான காரணத்தை அந்த வீரரிடம் சொல்வது முக்கியமானது என்று நான் கருதுகிறேன். அப்போது தான் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பதை புரிந்து அதற்கு தகுந்தபடி செயல்பாட்டை மாற்றி அமைத்து கொண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். தற்போது ஆஸ்திரேலிய தொடருக்காக என்னை தயார்படுத்தி வருகிறேன்’ என்றார். #MuraliVijay
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமான நிறுவனத்தை பங்குதார நிறுவனமாக சேர்த்துக்கொள்ள பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் மறுத்து விட்டதால்தான், அந்த பேரத்தை காங்கிரஸ் அரசு முறித்துக்கொண்டதாக பா.ஜனதா சமீபத்தில் குற்றம் சாட்டியது.

பா.ஜனதா கடந்த 4 ஆண்டுகளாக எனக்கு எதிராக அடிப்படையற்ற அரசியல் அவதூறுகளை பரப்பி வருகிறது. எனக்கு தொடக்கத்தில் அது வியப்பாக இருந்தது. ஆனால், இப்போது அது முழுமையான கேலிக்கூத்தாக தோன்றுகிறது.
ஏனென்றால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, எரிபொருள் விலை உயர்வு என எந்த பிரச்சினையில் நெருக்கடியில் சிக்கினாலும், பா.ஜனதா எனது பெயரை இழுத்து வருகிறது.
அதிலும், ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பா.ஜனதா முழுமையாக அம்பலப்பட்டு நிற்கிறது. பொய்களின் பின்னால் ஒளிந்து கொள்வதை பா.ஜனதா நிறுத்த வேண்டும். அவர்கள் திரும்பத்திரும்ப சொல்வதை கேட்டு மக்கள் வெறுத்துப்போய் விட்டனர்.
அதற்கு பதிலாக 56 அங்குல மார்பை நிமிர்த்திக்கொண்டு, இந்த விவகாரத்தில் உண்மையை சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மன்மோகன் சிங் அரசு நடந்தபோது, அந்த அரசு துணிச்சலாக செயல்பட வேண்டும் என்ற பொருளில், ‘56 அங்குல மார்பு வேண்டும்’ என்ற சொற்றொடரை நரேந்திர மோடி பயன்படுத்தி வந்தார். அதை சுட்டிக்காட்டும் வகையில், அதே சொற்றொடரை ராபர்ட் வதேரா பயன்படுத்தி உள்ளார். #RafaleDeal #RobertVadra #BJP
முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்தார்.
2014-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள பிரபல ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக சசிதரூரிடம் விசாரணை நடத்தினார்.
முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.
இந்த நிலையில் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகள் 498(ஏ), 306 ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது ஜாமீனில் வர முடியாத வழக்குகள் ஆகும். இதனை வருகிற 24-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் அறிவித்துள்ளார்.
டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை குறித்து சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சுனந்தா புஷ்கர் மரணத்தில் டெல்லி போலீசார் என் மீது குற்றம் சாட்டி உள்ளது அபத்தமானது. இதற்கு தகுந்த பதிலை தெரிவிப்பேன். சுனந்தாவின் தற்கொலைக்கு நான் காரணமில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
சுனந்தா வழக்கில் எவரையும் சந்தேகிக்கும் வகையில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லையென்று டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.
6 மாதத்தில் இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுனந்தாவை நான், தற்கொலைக்கு தூண்டியதாக அதே போலீஸ் துறை கூறுகிறது. இது நம்பும்படியாக இல்லை. இதனை எதிர்த்து நான், கோர்ட்டில் எனது வாதத்தை பதிவு செய்வேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ShashiTharoor #SunandaPushkarDeath #SunandaPushkar