search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2½ ஆண்டுகால ஆட்சியில் கோவைக்கு தி.மு.க. எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
    X

    2½ ஆண்டுகால ஆட்சியில் கோவைக்கு தி.மு.க. எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்.
    • தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை கடன் வாங்கியது தான்.

    கோவை,

    அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி சார்பில் செல்வபுரம் தெலுங்குபாளையம் முத்துமாரியம்மன் கோவில் அருகே பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு 76-வது வட்ட செயலாளர் கேபிள் கருப்புசாமி தலைமை தாங்கினார்.

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் டி.கருப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் டிபி.வேலுசாமி, ராஜா என்ற ராமமூர்த்தி, டி.சக்திவேல், பகுதி செயலாளர்கள் தி.மதனகோபால், வி.குலசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி மற்றும் கொள்கை பரப்பு துணை செயலாளரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ரவி மரியா, பழக்கடை மூர்த்தி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் டி.லட்சுமி–காந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முன்னதாக விழாவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதா வது:-

    எடப்பாடியார் பழனி சாமி முதல்-அமைச்சராக இருந்த போது கோவை மாவட்டத்திற்கு கேட்ட திட்டங்களை எல்லாம் தந்தார்.

    அ.தி.மு.க ஆட்சியில் கோவைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் 2½ ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களையும் கோவைக்கு கொண்டு வரவில்லை.

    தி.மு.க ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி உயர்வு என அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர்.காவிரி பிரச்சினைக்காக திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராடாமல் உள்ளனர்.

    கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஏமாந்து வாக்களித்ததாக மக்கள் கூறுகிறார்கள். தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை கடன் வாங்கியது தான்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம். எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 200 தொகுதிக்கு மேல் வென்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் என்.கே.செல்வ துரை, எஸ்.மணிமேகலை, என்.எஸ்.கருப்புசாமி, ஜிகே.விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.சந்திரசேகர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் டி.சி.பிரதீப், பொதுக்குழு உறுப்பினர் சுசிலா மாணிக்கராஜ், பேரூராட்சி கழக செயலாளர்கள் ஜெகநாதன், கே.கிருஷ்ணராஜ், ஏ.சுந்தர் ராஜ், ரவி(எ) காளிச்சாமி, ஆடலரசு, கே.எஸ்.ஷங்கர், ஏ.விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.மோகன்ராஜ், ஏ.செல்வராஜ், டி.கே.கார்த்திகா பிரகாஷ், பி.கனகராஜ், மற்றும் சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சிவகுமார், மாணிக்கராஜ், பாசறை நிஷ்கலன், ஆவின் எஸ்.முருகன், செபி செபாஸ்டியன், முத்துஇள ங்கோவன், சுரேஷ்குமார், அப்துல்ரகுமான், வட்ட கழக செயலாளர்கள் சித்திரை செல்வராஜ், ஏ.செல்லப்பன், ஜூனியர் ராஜா, எம்.புல்கான், கே.பி.பாஸ்கரன், எம்.ஜெகதீசன், விவேகானந்தன், எஸ்.ஜெகதீஷ், மணல் நாராயணன், எஸ்டி.கதிரேசன், ரவி நடராஜன், கே.சுப்பிரமணியம், சி.ஜனார்த்தனன், எஸ்.சி.செல்வராஜ், ஹரி, பிரகாஷ், வினோத், கே.ஏ.காட்டுத் துரை, கேபிள் ஐ.பஷீர், என்.வேலுமயில், மு.குஞ்சாலி, கரும்புக்கடை முஜி, தங்கம் ரகூப், கேபிள் சரவணன், சி.கே.விஸ்வநாதன், பத்மநாபன், டி.கே.கண்ணையன், சி.தர்மராஜ் மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பகுதி துணை செயலாளர் கவுதம் நன்றி கூறினார்.

    Next Story
    ×