search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yathra"

    • இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார்.
    • ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இன்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் நிறைவு விழா நடைபெற்றது.

    இதில், இந்தியா கூட்டணியை சேர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார்.

    இப்போது அவர் பேசியதாவது:-

    இந்து மதத்தில் சக்தி என்ற வார்த்தை உள்ளது. ஒரு சக்திக்கு எதிராக நாம் போராடுகிறோம். அது என்ன சக்தி என்பது கேள்வி.

    ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இல்லாமல் மோடியால் வெற்றிப் பெற முடியாது. இது உண்மை.

    ராஜாவின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் மற்றும் நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தின் ஆன்மா அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையிலும் உள்ளது.

    மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் காங்கிரசை விட்டு வெளியேறி என் அம்மாவிடம் கதறி அழுதார். 'சோனியா ஜி, இந்த சக்தியை எதிர்த்துப் போராட எனக்கு தெம்பு இல்லை என்பதில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிறைக்குச் செல்ல விரும்பவில்லை' என்றார்.

    ஆயிரக்கணக்கான மக்கள் இப்படி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராகுல் காந்தியின் நீதிக்கான ஒற்றுமை பயணத்தில் கலந்துக் கொள்ள திட்டம்.
    • உடல்நலக் குறைவால் நடை பயணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவால் உ.பி.யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ராகுல் காந்தியின் நீதிக்கான ஒற்றுமை பயணத்தில் அவர் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது நடைபயணத்தில் கலந்து கொள்ளவில்லை.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில், "உடல் நலம் தேறியதும் யாத்திரையில் பங்கேற்க உள்ளேன். யாத்திரையில் பங்கேற்றுள்ள தனது சகோதரர் மற்றும் கட்சியினருக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

    • பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை.
    • யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது ராகுல் காந்தி அசாமில் நடைபயணம் மேற்கொண்டார்.

    அசாமை தொடர்ந்து ராகுல் காந்தி தனது யாத்திரையை அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மதம் மற்றும் மொழியின் பெயரால் பாஜக தங்களுக்குள் சண்டையிட மக்களைத் தூண்டுகிறது. நாட்டை பிரிக்கிறது. பாஜக ஒரு சில தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறதே தவிர, மிகவும் கஷ்டப்படும் மக்களின் நலனுக்காக அல்ல.

    மறுபுறம், காங்கிரஸ் மக்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுகிறது. ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கி மார்ச் 20ம் தேதி மும்பையில் முடிவடையும் 6,713 கிமீ நீளமுள்ள யாத்திரை, வடகிழக்கு பிராந்திய மக்களின் துன்பங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

    நாங்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை வழங்கினோம். ஏழைகளின் பிரச்சினைகளை எழுப்பவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகவும் எங்கள் கட்சி எப்போதும் தயாராக உள்ளது.

    பாஜக ஆட்சியில், மக்களின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இல்லை. அவர்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் எழுப்பவில்லை. யாத்திரையின் போது, காலை முதல் மாலை வரை பல மணிநேரம் பயணித்து, மக்களின் வலி மற்றும் துன்பங்களை கேட்கும் இடங்களில் நின்றுகொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராகுல்காந்தியின் நடை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 'இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்' என்ற பெயரில் அவரது யாத்திரை மணிப்பூரில் இன்று தொடங்கியது.

    மணிப்பூரில் உள்ள தவுபல் மாவட்ட மைதானத்தில் இருந்து யாத்திரை தொடங்கப்பட்டது. ராகுல்காந்தியின் நடை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

    இந்நிலையில், யாத்திரை பயணத்தில் தொடக்க விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    லட்சக்கணக்கான மக்கள் இங்கே இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள். மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்கவும் அவர்களுக்கு ஆறுதல் கூறவும், இன்றுவரை பிரதமர் மோடி வரவில்லை. பிரதமர், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மணிப்பூரை இந்தியாவின் ஒருபகுதியாக கருதவில்லை என நினைக்கிறேன்.

    மணிப்பூர் மக்களின் வலியை நாங்கள் புரிந்துள்ளோம். உங்களது சோகமும், வலிகளும் எங்களுக்கு புரியும். மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம்.

    வேலைவாய்ப்பின்மை,விலைவாசி உயர்வால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 3 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்.
    • அசாமில் 2 இடங்களில் இரவு ஓய்வு எடுப்பதற்கும் அம்மாநில பா.ஜனதா அரசு அனுமதி மறுப்பு.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல் கடந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டார். தெற்கில் இருந்து வடக்கு நோக்கி அவர் பாத யாத்திரை சென்றார்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங் கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 136 நாட்கள் அவரது நடைபயணம் இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக நாட்டின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி ராகுல்காந்தி 2-வது கட்ட மாக நடைபயணம் மேற் கொள்ள முடிவு செய்தார்.

    'இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்' என்ற பெயரில் அவரது யாத்திரை மணிப்பூரில் இன்று தொடங்கியது. 

    அங்குள்ள இம்பால் கிழக்கு மாவட்டத்தில் நடை பயணத்தை தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. ஆனால் அங்கு அனுமதி வழங்குவதில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதை தொடர்ந்து மணிப்பூரில் உள்ள தவுபல் மாவட்ட மைதானத்தில் இருந்து யாத்திரை தொடங்கியது.

    ராகுல்காந்தியின் நடை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    நடைபயணத்தையொட்டி மணிப்பூர் பா.ஜனதா அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தது. தொடக்க விழா 1 மணி நேரத்துக்கு மேல் நடைபெறக் கூடாது, நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 3 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பேரணியின்போது நாட்டுக்கு எதிரான, மத ரீதியான கோஷங்களை எழுப்பக் கூடாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரசு அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையில் அமைதி சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் விதமாக நடைபயணத்துக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று தவுபல் துணை கமிஷனர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

    மேலும் அசாமில் 2 இடங்களில் இரவு ஓய்வு எடுப்பதற்கும் அம்மாநில பா.ஜனதா அரசு அனுமதி மறுத்துள்ளது.

    ராகுல்காந்தியின் முந்தைய நடைபயணத்தை போல் அல்லாமல் இந்த முறை பெரும்பாலும் பஸ்களில் நீதிப்பயணம் மேற்கொள்ளப் பட உள்ளது. சில வேளைகளில் நடைபயணம் இருக்கும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    மொத்தம் 6713 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 110 மாவட் டங்கள், 100 எம்.பி. தொகுதிகள் வழியாக 67 நாட்கள் நடைபெற உள்ளது. மணிப்பூர், நாகலாந்து, அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ் தான், குஜராத் மராட்டியம் ஆகிய 15 மாநிங்களில் நடைபயணம் மேற் கொள்ளப்படும். மார்ச் 20 அல்லது 21-ந் தேதி மும்பையில் பயணம் நிறைவடைய உள்ளது.

    பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்ப மத்திய அரசு வாய்ப்பு அளிக்காததாலும், அரசமைப்பு சட்டம் பாதுகாத்து வரும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வற்றை நிலைநாட்டவும், கடந்த 10 ஆண்டுகால மத்திய பா.ஜனதா ஆட்சியின் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும் இந்த பயணம் மேற்கொள்ளப் படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த யாத்திரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாளை ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும், பாத யாத்திரையிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.
    • ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த செப்டம்பர் 7-ந் தேதி அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு ராகுல்காந்தி கடந்த 19-ந்தேதி காஷ்மீர் சென்று அடைந்தார்.

    அவரது நடைபயணத்தின் போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர். சோனியாகாந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணத்தின்போது உடன் சென்றனர். முக்கிய பிரமுகர்களும் அவருடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

    ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடை பயணத்தை தற்காலிகமாக நிறுத்தினார். பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டை காஷ்மீர் போலீசார் மறுத்து இருந்தனர். பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை என்று தெரிவித்தது.

    தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ராகுல்காந்தியின் பாத யாத்திரை புல்வாமா மாவட்டம் அவந்தி போராவில் நேற்று மீண்டும் தொடங்கியது.

    ராகுல்காந்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, அவரது மகள் இல்டிஜா முப்தி மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராமானோர் பங்கேற்றனர். ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா லேத்போரா பகுதியில் நடைபயணத்தில் இணைந்தார்.

    நேற்று ராகுல்காந்தியை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நடைப்பயணம் தொடங்கிய இடத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். புல்வாமாவில் கடந்த 2019-ல் தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 40 பேர் பலியான இடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்ரீநகரை நோக்கி அவர் நடைபயணத்தை தொடர்ந்தார்.

    ராகுல்காந்தியின் பாத யாத்திரை நாளையுடன் நிறைவு பெறுகிறது. ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அதன் பின்னர் எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிறைவு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த கட்சி பல்வேறு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    ஸ்ரீநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கேரளா காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 12 எதிர்க்கட்சிகள் ராகுல்காந்தியின் நடை பயண நிறைவு விழாவில் பங்கேற்கின்றன.

    திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 9 எதிர்க்கட்சிகள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. சில எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக புறக்கணிக்கின்றன.

    ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிறைவு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

    நாளை ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும், பாத யாத்திரையிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம். நிறைவு விழாவின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல்காந்தி 12 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் 145 நாட்கள் மொத்தம் 3,970 கிலோ மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    • பஞ்சாப்பில் இன்று நடைபயணத்தின்போது ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணம் அடைந்தார்.
    • நாளை பிற்பகல் ஜலந்தர் அருகே இருந்து நடைபயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணம் அடைந்தார்.

    நடைபயணத்தின்போது மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.யின் மறைவை தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் ஜலந்தர் அருகே இருந்து நடைபயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • பஞ்சாப், காஷ்மீரில் நடைபெறும் பாதயாத்திரையில் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்.
    • காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு சி.ஆர்.பி.எப். (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த யாத்திரையின்போது பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டது.

    பல இடங்களில் பாதுகாப்பு சமரசம் செய்து கொள்ளப்பட்டது. யாத்திரையில் சட்டவிரோதமாக விஷமிகள் நுழைந்தனர் என்றும் பஞ்சாப், காஷ்மீரில் நடைபெறும் பாதயாத்திரையில் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில் காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு சி.ஆர்.பி.எப். (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

    ராகுல் காந்திக்கு வழிகாட்டுதல்களின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடந்த யாத்திரையின்போது ராகுல்காந்தியே பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறினார்.

    பல சந்தர்ப்பங்களில் ராகுல்காந்தியின் தரப்பில் வழிகாட்டுதல்களை மீறுவது கவனிக்கப்பட்டது. அதுபற்றி அவருக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டது.

    2020-ம் ஆண்டு முதல் ராகுல் காந்தியால் 113 பாதுகாப்பு வழிகாட்டுதல் மீறல்கள் நடந்துள்ளன.

    பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகின்றன. ராகுல்காந்தி பாதுகாப்பு குறித்து அதிகாரிகள்தரப்பில் போதிய பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹரித்வாரில் இருந்து குவாலியருக்கு தங்கள் கன்வார்களுடன் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
    • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தகவல்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கன்வார் யாத்திரையில் ஈடுபட்ட ஏழு பக்தர்கள் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

    விபத்து குறித்து ஆக்ரா மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா கூறியதாவது:-

    சதாபாத் காவல் நியைத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கன்வார் பக்தர்கள் 7 பேர் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் லேசான காயத்துடன் உயிர்தப்பியுள்ளார். இவர்கள் ஹரித்துவாரில் இருந்து குவாலியருக்கு தங்கள் கன்வார் யாத்திரீகர்களுடன் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளை தேடி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ‘யாத்ரா’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கார்த்தியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. #YSRBiopic
    ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு ‘யாத்ரா’ என்னும் பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மகி வி ராகவ் இதை இயக்குகிறார்.

    இந்தப்படத்தில் மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்மூட்டி, ராஜசேகர் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அவருடன் பல முன்னணி நடிகர்களும் இணைந்து நடிக்கின்றனர்.



    ராஜசேகர் ரெட்டியின் மகனான ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் யாரை நடிக்கவைப்பது என யோசித்த படக்குழு தற்போது நடிகர் கார்த்தியை நடிக்கவைக்கும் முயற்சியில் இறங்கி அவருடன் பேச்சுவார்த்தையும், கதை விவாதமும் நடத்திவருகிறது. விரைவில் அவர் இந்தப் படக்குழுவில் இணையும் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிகிறது. #YSRBiopic #Karthi


    ×