பிரியங்கா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு- மருத்துவமனையில் அனுமதி

ராகுல் காந்தியின் நீதிக்கான ஒற்றுமை பயணத்தில் கலந்துக் கொள்ள திட்டம்.உடல்நலக் குறைவால் நடை பயணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை.
பிரியங்கா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு- மருத்துவமனையில் அனுமதி
Published on

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவால் உ.பி.யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் நீதிக்கான ஒற்றுமை பயணத்தில் அவர் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது நடைபயணத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில், "உடல் நலம் தேறியதும் யாத்திரையில் பங்கேற்க உள்ளேன். யாத்திரையில் பங்கேற்றுள்ள தனது சகோதரர் மற்றும் கட்சியினருக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com