என் மலர்
நீங்கள் தேடியது "Bharat Jodo Nyay Yatra"
- ஜனவரி 14-ந்தேதி ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்குகிறார்.
- மணிப்பூரில் இருந்து மகாராஷ்டிரா வரை 14 மாநிலங்கள் வழியாக நடை பயணம் மேற்கொள்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் 27-ந்தேதி (டிசம்பர்) சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் இன்று நடைபயணத்திற்கான லோகோ மற்றும் முழக்கம் ஆகியவற்றை வெளியிட்டனர்.
ராகுல் காந்தி கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி "பாரத் நயா யாத்ரா" என்ற பெயரில் நடைபயணத்தை வருகிற ஜனவரி 14-ந்தேதி முதல் மேற்கொள்கிறார். 14 மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
- ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நாகாலாந்தில் தொடங்கியது.
- 2-ம் உலகப் போரில் உயிர்நீத்த வீரர்கள் கல்லறைக்கு ராகுல் காந்தி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கோஹிமா:
காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது கட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நாகாலாந்தில் இருந்து தொடங்கியது. அங்கிருந்த மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
நாகாலாந்து சிறிய மாநிலம் என சொல்லப்படுகிறது. ஆனால் மற்ற மாநில மக்களைப் போலவே உங்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்த வீரர்கள் கல்லறைக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
- ராகுல் காந்தி 2வது கட்டமாக மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணம் தொடங்கி உள்ளார்.
- தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அவர் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
கவுகாத்தி:
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.
இதையடுத்து, ராகுலை மீண்டும் நடை பயணம் செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணத்தைத் தொடங்கி உள்ளார். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இந்த யாத்திரையில் பங்கேற்குமாறு இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அசாமில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்கு பிரம்மபுத்திரா ஆற்றில் படகு சவாரி செய்தார்.
ஜோர்ஹட் பகுதியில் இருந்து மஜூலி நோக்கிச் செல்வதற்காக நிமாடி கட் படித்துறையில் இருந்து ராகுல் காந்தி படகில் பயணம் செய்தார்.
#WATCH | Congress MP Rahul Gandhi's 'Bharat Jodo Nyay Yatra' travels on a boat across the Brahmaputra river from Nimati Ghat, Jorhat to Majuli pic.twitter.com/7qFgKTlaic
— ANI (@ANI) January 19, 2024
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது.
- இந்த யாத்திரையால் ஊழல் முதல் மந்திரி ஹிமந்தா பீதி அடைந்துள்ளார் என காங்கிரஸ் தெரிவித்தது.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது.
அசாமின் லக்கிம்பூருக்குச் சென்றபோது யாத்திரையில் பங்கேற்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பா.ஜ.க. குண்டர்களால் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பேனர் கிழிப்பு போன்ற வெட்கக்கேடான செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள ஒவ்வொரு உரிமையையும், நீதியையும் காலில் போட்டு மிதிக்க கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. முயற்சிக்கிறது. மக்களின் குரலை நசுக்கி. அதன்மூலம் ஜனநாயகத்தை சிதைக்கிறது. அசாம் பா.ஜ.க. அரசின் இத்தகைய மிரட்டல் மற்றும் தாக்குதல் தந்திரத்துக்கு காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது என பதிவிட்டுள்ளார்.
We strongly condemn the shameful attack on the #BharatJodoNyayYatra vehicles and tearing of Congress party's banners and posters by BJP goons in Lakhimpur, Assam.
— Mallikarjun Kharge (@kharge) January 20, 2024
In the last 10 years, BJP has attempted to trample and demolish every right and justice guaranteed by the…
- அசாம் மாநில அரசு பல தடைகளை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
- வருகிற 25-ந்தேதி வரை அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் நடைபாதை மேற்கொண்டு வருகிறார். அசாம் மாநிலத்தில் அவருடைய நடை பயணத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாஜனதா தொண்டர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என முழக்கமிட்டனர்.
உடனடியாக பேருந்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்ட ராகுல் காந்தி, கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அதன்பிறகு பேருந்தில் இருந்தபடியே அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார்.
இது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி "அன்பிற்கான கடை எல்லோருக்காகவும் திறந்திருக்கும். இந்தியா ஒன்றுபடும், இந்துஸ்தான் வெல்லும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
सबके लिए खुली है मोहब्बत की दुकान,जुड़ेगा भारत, जीतेगा हिंदुस्तान।?? pic.twitter.com/Bqae0HCB8f
— Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2024
- இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைப்பயணம் மணிப்பூரில் தொடங்கியது.
- அசாம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் தலைமையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைபயணம் 'பாரத் நீதி யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூரில் தொடங்கியது. மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு பல்வேறு இடையூறுகளை கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கவுகாத்திக்குள் ராகுல் காந்தி நுழைய முற்பட்டபோது போலீசார் தடுப்புகள் அமைத்து அவரை நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கவ்ஹாத்தியில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த ராகுல் காந்தி தூண்டியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில், ராகுல் காந்தி மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.
- இன்று மேற்கு வங்காளத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று கொல்கத்தா மாநிலத்தில் அவரது நடைபயணம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி மேற்கு வங்காள மாநிலத்தின் கதிஹார் என்ற இடத்தில் நடைபயணம் மேற்கொண்டு வந்தார். அப்போது ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சில் கார் கண்ணாடி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. லேசான தாக்குதல் சம்பவம் என்பதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில் "கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கலாம். காவல்துறையினர் இந்த சம்பவத்தை புறக்கணித்துள்ளனர். போலீசாரின் புறக்கணிப்பால் ஏராளமான விசயங்கள் நடந்திருக்கலாம். இது சிறு சம்பவம்தான்" என்றார்.
கொல்கத்தா மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வது குறித்து தன்னிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என மம்தா பானர்ஜி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். மக்களவை தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி விலகியுள்ளார்.
இதனால் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- ஜேஎம்எம் கட்சியின் சட்டசபை தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
- சம்பாய் சோர்ன் இன்று ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் சம்பாய் சோரன் சட்டமன்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, தனக்கு 43 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும், அதற்கான ஆதரவு கடிதத்தையும் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அத்துடன் தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரினார்.
அதனைத் தொடர்ந்து நேற்றிரவு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவர் 10 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை ஜார்கண்டில் இன்று நுழைந்தது. இந்த யாத்திரையில் முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட சம்பாய் சோரன் பங்கேற்றுப் பேசினார்.
#WATCH | Jharkhand Chief Minister Champai Soren participates in Congress' Bharat Jodo Nyay Yatra in Pakur. The yatra entered Jharkhand today. pic.twitter.com/d4F4J9wDKf
— ANI (@ANI) February 2, 2024
- அதானியின் பெயரை எடுத்துக்கொண்டாலே பிரதமர் மோடி தான் அவரது மூலதனம்.
- மோடி ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கோட்டாவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் தொடர்புடைய மசோதாவை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.
அதானியின் பெயரை எடுத்துக்கொண்டாலே பிரதமர் மோடி தான் அவரது மூலதனம் என்பதை மக்கள் ஒரு நொடியில் புரிந்து கொள்வார்கள்.
பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாடு முழுவதும் வெறுப்பை பரப்பி வருகிறது என குற்றம் சாட்டினார்.
- உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது நாளாக யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று வாரணாசி பகுதியில் ஜீப்பில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மும்பை வரை 15 மாநிலங்களின் வழியாக சுமார் 6700 கிமீ தூரம் நடைபெறுகிறது.
இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் மக்களை சந்தித்து பேசினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது நாளாக யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று வாரணாசி பகுதியில் ஜீப்பில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பிறகு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் செய்தார்.
சோனியா காந்தியின் தொகுதியாக இருந்த ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி யாத்திரை வரும் போது அதில் நான் பங்கேற்பேன் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மும்பை வரை 15 மாநிலங்களின் வழியாக சுமார் 6700 கிமீ தூரம் நடைபெறுகிறது.
- இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 1 வரை 5 நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
- ராகுல் காந்தி மார்ச் 2ம் தேதி ராஜஸ்தானில் இருந்து இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்குகிறார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று உத்தர பிரதேசத்தில் நுழைந்துள்ளது.
இந்நிலையில், வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை 5 நாட்கள் யாத்திரைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை 5 நாட்கள் யாத்திரைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே உரையாற்றுவதற்காக ராகுல் காந்தி லண்டன் செல்கிறார். 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் மாணவர்களிடையே உரையாற்ற உள்ளார். அதன்பின், நாடு திரும்பும் அவர் டெல்லியில் முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்கிறார். மார்ச் 2-ம் தேதி ராஜஸ்தானின் டோல்பூரில் இருந்து மீண்டும் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்குகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
- உ.பி.யின் அலிகாரில் இன்று நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் பிரியங்கா பங்கேற்றார்.
- இந்த யாத்திரையில் லோக்தளம் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஜமால்பூரில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று கலந்து கொண்டார். இதில் லோக்தளம் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர்.
இந்த யாத்திரை அம்ரோஹா, சம்பல், புலந்த்சாஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக பதேபூர் சிக்ரி செல்கிறது. இதில் ராகுல் காந்தியுடன் திறந்த ஜீப்பில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அமர்ந்து கொண்டு தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தவாறு சென்றார். அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது:
பா.ஜ.க. 10 ஆண்டாக ஆட்சியில் உள்ளது. ஜி20 மாநாடு போன்ற பல பெரிய நிகழ்வுகள் நடந்தன. இதுபோன்ற நிகழ்வுகளால் நாட்டின் மரியாதை கூடுகிறது என எல்லோரும் சொன்னார்கள். நாங்கள் கூட ஒப்புக்கொள்கிறோம்.
நாட்டின் மரியாதையில் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தொடர்பில்லையா? இளைஞர்களுக்கு வேலை இல்லை, விவசாயிகள் இன்னும் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள். பணவீக்கம் நாட்டு மக்களுக்கு சுமையாக இருக்கிறது. இதை எல்லாம் நான் சுட்டிக்காட்டி கேள்வி கேட்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
காங்கிரஸ், சமாஜ்வாதி இடையேயான தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், யாத்திரை நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த யாத்திரை இந்தியா கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
இன்று மாலை ஆக்ராவில் நடைபெற உள்ள யாத்திரையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க உள்ளார்.
#WATCH | Agra, UP: Congress leader Rahul Gandhi says, " ..90% (minorities, OBC, Adivasis, Dalits) have only 7% participation in the central budget... 62 officers control the Uttar Pradesh budget, in these 62 officers, OBC has 4% participation who are 55% here in the state, Dalit… pic.twitter.com/F1bBRV4oZs
— ANI (@ANI) February 25, 2024






