என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JMM Champai Soren"

    • ஜேஎம்எம் கட்சியின் சட்டசபை தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
    • சம்பாய் சோர்ன் இன்று ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் சம்பாய் சோரன் சட்டமன்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதையடுத்து, தனக்கு 43 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும், அதற்கான ஆதரவு கடிதத்தையும் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அத்துடன் தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரினார்.

    அதனைத் தொடர்ந்து நேற்றிரவு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவர் 10 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை ஜார்கண்டில் இன்று நுழைந்தது. இந்த யாத்திரையில் முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட சம்பாய் சோரன் பங்கேற்றுப் பேசினார்.

    • ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
    • "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது"

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது.

    இந்நிலையில், பீகார் மற்றும் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் சம்பாய் சோரன், "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கையை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாநில மக்கள்தொகையில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

    ×