என் மலர்
நீங்கள் தேடியது "பிரம்மபுத்திரா ஆறு"
- ராகுல் காந்தி 2வது கட்டமாக மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணம் தொடங்கி உள்ளார்.
- தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அவர் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
கவுகாத்தி:
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.
இதையடுத்து, ராகுலை மீண்டும் நடை பயணம் செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணத்தைத் தொடங்கி உள்ளார். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இந்த யாத்திரையில் பங்கேற்குமாறு இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அசாமில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்கு பிரம்மபுத்திரா ஆற்றில் படகு சவாரி செய்தார்.
ஜோர்ஹட் பகுதியில் இருந்து மஜூலி நோக்கிச் செல்வதற்காக நிமாடி கட் படித்துறையில் இருந்து ராகுல் காந்தி படகில் பயணம் செய்தார்.
#WATCH | Congress MP Rahul Gandhi's 'Bharat Jodo Nyay Yatra' travels on a boat across the Brahmaputra river from Nimati Ghat, Jorhat to Majuli pic.twitter.com/7qFgKTlaic
— ANI (@ANI) January 19, 2024
- 2015ம் ஆண்டில் திபெத்தில் உள்ள மிகப்பெரிய ஜாம் நீர்மின் நிலையத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது.
- அருணாச்சல பிரதேசத்தில் பிரம்மபுத்திராவின் குறுக்கே இந்தியாவும் அணை கட்டுகிறது.
இந்தியாவின் எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் திபெத்தில் கட்டப்படும் இந்த அணையால் பிரம்மபுத்திரா நதி பாய்ந்தோடும் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. இந்த நதி திபெத்திலுள்ள கயிலாய மலையில் 'ஸாங்-போ' என்ற பெயரில் புறப்பட்டு திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான 'யர்லுங் இட்சாங்போ' வழியாக அருணாசலபிரதேசத்தில் நுழைந்து, அசாம் மாநிலத்தில் ஓடுகிறது. பின்னர் தெற்கு நோக்கி பாய்ந்து வங்கதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த நதியின் சராசரியான நீர் வெளியேற்றம் விநாடிக்கு 19,800 கன மீட்டர்.
திபெத் பகுதியில் பெரும்பாலும் பாயும் இந்த பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் பகுதியில் நீர்மின்சாரத் திட்டத்திற்காக உலகிலேயே மிகப்பெரிய அணை கட்ட சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று சீன அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தாக்கில் இந்த அணை கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சீனாவின் த்ரீ கோர்ஜஸ் அணை உட்பட ஹாங்காங்கை தளமாகக் கொண்ட தென் சீனா அணை உட்பட உலகில் உள்ள அனைத்து அணைகளையும் விட மிகப்பெரியதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டில் திபெத்தில் உள்ள மிகப்பெரிய ஜாம் நீர்மின் நிலையத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது. தற்போது 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு திட்டத்தில் பிரம்மபுத்திரா அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. சீனா அணை கட்டிவிட்டால் பிரம்மபுத்திரா நதி மீது சீனாவுக்கு அதிகாரம் வந்துவிடும். மேலும் எல்லைப் பகுதிகளில் இருந்து பெரிய அளவில் தண்ணீரை திறந்து இந்தியாவுக்குள் விடவும் வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த அணை கட்டுவதால் இந்தியா அதிக கவலை கொண்டுள்ளது. அதே சமயம் அருணாச்சல பிரதேசத்தில் பிரம்மபுத்திராவின் குறுக்கே இந்தியாவும் அணை கட்டுகிறது.






