search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brahmaputra river"

    • முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அழைத்து, மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
    • படகில் 15 பயணிகள் இருந்ததாகவும், மீதமுள்ளவர்கள் நீந்தி தப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

    அசாம் முழுவதும் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழைக்கு மத்தியில், தெற்கு சல்மாரா-மங்காச்சார் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், இரண்டு பேர் காணாமல் போனதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அழைத்து, மாநிலத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும் அனைத்து உதவிகளும் செய்வதாகவும் உறுதியளித்தார்.

    நேற்று மாலை முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் மழையுடன் கூடிய திடீர் புயல், மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் வீடுகளை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தியது என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சிஇஓ ஞானேந்திர தேவ் திரிபாதி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர், " நேபுரேர் ஆல்கா கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் சிசுமாரா காட்டில் இருந்து நேபுரேர் ஆல்கா காட் நோக்கி பயணித்த நாட்டுப்படகு மூழ்கியது. இதில் ஒரு குழந்தையின் சடலத்தை உள்ளூர்வாசிகள் மீட்டனர் மற்றும் காணாமல் போன இரண்டு பேரை தேடி வருகின்றனர்" என்றார்.

    படகில் 15 பயணிகள் இருந்ததாகவும், மீதமுள்ளவர்கள் அருகிலுள்ள 'சார்' பகுதிகளிலிருந்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக நீந்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    • ராகுல் காந்தி 2வது கட்டமாக மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணம் தொடங்கி உள்ளார்.
    • தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அவர் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    கவுகாத்தி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

    இதையடுத்து, ராகுலை மீண்டும் நடை பயணம் செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணத்தைத் தொடங்கி உள்ளார். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் அவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    இந்த யாத்திரையில் பங்கேற்குமாறு இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், அசாமில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்கு பிரம்மபுத்திரா ஆற்றில் படகு சவாரி செய்தார்.

    ஜோர்ஹட் பகுதியில் இருந்து மஜூலி நோக்கிச் செல்வதற்காக நிமாடி கட் படித்துறையில் இருந்து ராகுல் காந்தி படகில் பயணம் செய்தார்.


    அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இதில் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #AssamBoatAccident
    கவுகாத்தி:

    அசாமம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா ஆற்றில் கவுகாத்தியில் இருந்து மத்திய கந்தாவிற்கு 45 பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

    தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் அசாம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விபத்திற்குள்ளான படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தாகவும், இந்த விபத்தில் 20 பேர் பலியானதாகவும்  கூறப்படுகிறது.

    இந்தியாவின் மிகப் பெரிய ஆறான பிரம்மபுத்திரா அசாம், மேகாலயா வழியாக வங்கதேசத்துக்குச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #AssamBoatAccident
    ×