என் மலர்
நீங்கள் தேடியது "படகு விபத்து"
- திடீரென ராட்சத அலை தாக்கியதால் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.
- இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்டியாகோ கடற்பகுதியில் ஒரு படகு சென்று கொண்டிருந்தது.
அதில் இருந்தவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். அப்போது திடீரென ராட்சத அலை தாக்கியதால் அந்தப் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
தகவலின் பேரில் கடலோர போலீசார் அங்கு சென்றதும் மீட்பு பணி நடைபெற்றது. ஆனால் அவர்கள் செல்வதற்குள் 4 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். இதனையடுத்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
- மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர். ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
ஆனால், அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலிய கடலோர காவல்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தகவல்படி, படகில் சுமார் 92 முதல் 97 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாக UNHCR-ன் இத்தாலிய செய்தித் தொடர்பாளர் பிலிப்போ உங்காறோ தெரிவித்தார்.
- வியட்நாமின் ஹா லாங் விரிகுடாவில் ஒரு சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் கடலில் மூழ்கி 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹனோய்:
வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹா லாங் வளைகுடா பகுதிக்கு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. ஹா லாங் கடலோர பகுதியில் திடீரென சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் கடலில் தத்தளித்த 11 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில், 8 குழந்தைகள் உள்பட 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மாயமான 8 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுதொடர்பாக மீட்புக் குழுவினர் கூறுகையில், திடீரென வீசிய சூறைக்காற்றால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.
- விபத்து நடந்தபோது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.
- குழுவினர் சுமார் 6.5 அடி உயர அலைகளுடன் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் கெட்டபாங் துறைமுகத்தில் இருந்து நேற்று இரவு 65 பேருடன் படகு ஒன்று பாலி தீவில் உள்ள கிலிமானுக் துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது. மேலும் அந்த படகில் 14 லாரிகள் உள்பட 22 வாகனங்கள் இருந்தன.
கே.எம்.பி. துனு பிரதாமா ஜெயா என்று பெயரிடப்பட்ட அந்த படகு புறப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. இதில் படகு கடலில் ஒருபக்கம் சாய்ந்து மூழ்கியது.
இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். உடனே மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். விபத்து நடந்தபோது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் மீட்புப் பணி சவாலாக இருந்தது.
இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 38 பேர் மாயமாகி இருந்தனர். அவர்களை மீட்க இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இன்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.
மீட்புப் பணியில் 2 இழுவைப் படகுகள், 2 சிறிய அளவிலான கப்பல்கள் உள்பட 9 படகுகள் ஈடுபட்டுள்ளன. இந்த குழுவினர் சுமார் 6.5 அடி உயர அலைகளுடன் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களில் பலர் மணிக்கணக்கில் கொந்தளிப்பான கடலில் மிதந்ததால் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படகு விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- விபத்துக்குள்ளான படகில் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன.
விபத்து நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் கூறினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
- கங்குலியின் மூத்த சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா ஆகியோர் படகு சாகசத்தில் ஈடுபட்டனர்.
- அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி. அவரது மூத்த சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா கங்குலி ஆகியோர் ஒடிசாவின் பூரி கடற்கரையில் ஒரு படகு சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்னேஹாசிஷ் கங்குலி மற்றும் அர்பிதா கங்குலி ஆகியோர் கடல் நீரில் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெரிய அலை படகைத் தாக்கியது. இதனால் படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர்.
உடனடியாக அங்கிருந்த லைஃப் கார்டுகள் விரைந்து செயல்பட்டு, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஸ்னேஹாசிஷ் மற்றும் அர்பிதா உட்பட அனைவரையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.
- சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி நூலிழையில் தப்பினர்.
- படகு ஓட்டுபவரின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்துள்ளது.
ஒடிசாவின் பூரி கடற்கரையில் நடந்த விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி நூலிழையில் தப்பினர்.
அவர்கள் பயணித்த வேகப் படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இருப்பினும், அருகிலுள்ள உயிர்காப்பாளர்கள் உடனடியாக செயல்பட்டு அவர்களைப் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.
சினேகாஷிஷ் கங்குலியும் அவரது மனைவி அர்பிதா பூரியும் படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துக்கு படகு ஓட்டுபவரின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்துள்ளது.
- பலர் காங்கோ நதி மற்றும் அதன் துணை நதிகளின் வழியே படகு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
- தீ மளமளவென பரவியதால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் போதுமான சாலை உள்கட்டமைப்பு இல்லாததால் பலர் காங்கோ நதி மற்றும் அதன் துணை நதிகளின் வழியே படகு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். மோசமான பராமரிப்புள்ள படகுகளால் அவ்வப்போது விபத்துகளும் நேர்கிறது.
இந்நிலையில் காங்கோவின் ஈக்வடூர் மாகாணத்தில் இருந்து அருகே உள்ள மாகாணத்திற்கு 150க்கும் மேற்பட்டோரை ஏற்றுக்கொண்டு மரப்படகு ஒன்று ருகி ஆற்றில் சென்றுகொண்டிருந்தது. படகில் எரிபொருட்களும் ஏற்றிச் செல்லப்பட்டன.
பண்டமா என்ற பகுதியில் சென்றபோது படகில் சமையல் செய்துகொண்டிருந்தபோது தீயானது எரிபொருட்கள் மீது பற்றியது. தீ மளமளவென பரவியதால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவத்தில் படகில் பயணித்த 143 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆற்றில் குதித்த மாயமாகினர். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.
போதிய தகவல் தொடர்பு வசதி இல்லாததால் இந்த விபத்து குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஆற்றில் குதித்து மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட உடல்கள் முற்றிலும் எறிந்த நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடற்கரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியுள்ளது.
- இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த கோர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.
ரோம்:
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல்படை மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை நிலவரப்படி 43 சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். 80 பேர் உயிர் பிழைத்தனர். அவர்களில் சிலர் படகு விபத்துக்குள்ளானதும் நீந்தி கரைக்கு வந்துள்ளனர்.
கலப்ரியா பிராந்தியத்தின் ரிசார்ட் அருகே கடற்கரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வேறு யாரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்களா? என கடற்பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த கோர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். மேலும் கடலில் அதிக உயிரிழப்புகளைத் தவிர்க்க, முறையற்ற வகையில் புலம்பெயரும் பயணங்களை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார்.
- கடந்த சில ஆண்டுகளாக அவர் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் இருந்தார்.
- வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இத்தாலியில் சமீபத்தில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியதில், பாகிஸ்தானின் முன்னாள் ஹாக்கி வீராங்கனை ஷகிதா ரசாவும் உயிரிழந்திருக்கலம் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் பெண்கள் அணியில் இடம்பெற்றிருந்த ஷகிதா ரசா 2012 மற்றும் 2013-ல் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2019க்கு பிறகு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
ஆனால், மகனுக்கு உடல்நலக்குறைவு, விவாகரத்து, வேலையின்மை என கடந்த சில ஆண்டுகளாக அவர் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் இருந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மூன்று வயது மகனுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை அளிக்க முடியாத அளவுக்கு வருவாய் இல்லாமல் தவித்தார். மகனை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மகனை காப்பாற்றுவதற்கு பணம் சம்பாதிப்பதற்காகவும், சிகிச்சைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய அவர் கடந்த ஆண்டு துருக்கி சென்றுள்ளார். குழந்தையை தன் குடும்பத்தினரிடம் விட்டுச் சென்றுள்ளார். குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். விபத்து நடந்த அன்றும் பேசியிருக்கிறார்.
புகைப்படங்கள் மற்றும் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை வைத்து ஷகிதா ராசாவின் உடலை குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் அவரது இறப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த படகு விபத்தில் கிட்டத்தட்ட 70 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
- படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர் இருந்தனர். இந்த படகு ஹொடைடா நகருக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது.
- கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரம் ஹொடைடா. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய தீவான கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படகில் சென்று கொண்டிருந்தனர்.
படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர் இருந்தனர். இந்த படகு ஹொடைடா நகருக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஆனால் அதற்குள் 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் என 21 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அதே சமயம் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.
அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.
அதே சமயம் கடலில் வீசிய பலத்த காற்றினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 21 பலியானது ஏமனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மடகாஸ்கரில் கடலில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அன்டநானரிவோ:
ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பயணங்கள் பெரும்பாலும் ஆபத்தானதாக அமைந்து விடுகின்றன. மொத்தம் 47 பேர் இந்த படகில் பயணம் செய்தனர். அப்போது இந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது.
தகவலறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக கடலுக்குள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாயமான சிலரை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.






