என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: கடலில் கவிழ்ந்த படகு.. மனைவியுடன் மயிரிழையில் உயிர் தப்பிய சவுரவ் கங்குலியின் சகோதரர்
    X

    VIDEO: கடலில் கவிழ்ந்த படகு.. மனைவியுடன் மயிரிழையில் உயிர் தப்பிய சவுரவ் கங்குலியின் சகோதரர்

    • சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி நூலிழையில் தப்பினர்.
    • படகு ஓட்டுபவரின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்துள்ளது.

    ஒடிசாவின் பூரி கடற்கரையில் நடந்த விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி நூலிழையில் தப்பினர்.

    அவர்கள் பயணித்த வேகப் படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இருப்பினும், அருகிலுள்ள உயிர்காப்பாளர்கள் உடனடியாக செயல்பட்டு அவர்களைப் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.

    சினேகாஷிஷ் கங்குலியும் அவரது மனைவி அர்பிதா பூரியும் படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துக்கு படகு ஓட்டுபவரின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்துள்ளது.

    Next Story
    ×