என் மலர்tooltip icon

    உலகம்

    வியட்நாமில் சோகம்: சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 34 பேர் பலி
    X

    வியட்நாமில் சோகம்: சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 34 பேர் பலி

    • வியட்நாமின் ஹா லாங் விரிகுடாவில் ஒரு சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் கடலில் மூழ்கி 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஹனோய்:

    வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹா லாங் வளைகுடா பகுதிக்கு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. ஹா லாங் கடலோர பகுதியில் திடீரென சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் கடலில் தத்தளித்த 11 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில், 8 குழந்தைகள் உள்பட 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மாயமான 8 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக மீட்புக் குழுவினர் கூறுகையில், திடீரென வீசிய சூறைக்காற்றால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

    Next Story
    ×