என் மலர்
நீங்கள் தேடியது "Boat Capsize"
- ஜொனாய் சப்-டிவிஷனுக்குட்பட்ட கங்கன் சபோரி பகுதிக்கு அருகில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.
- குழந்தையை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாமின் தேமாஜி மாவட்டத்தில் உள்ள லாலி ஆற்றில் நாட்டு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஜொனாய் சப்-டிவிஷனுக்குட்பட்ட கங்கன் சபோரி பகுதிக்கு அருகில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.
இதையடுத்து, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தேமாஜி மாவட்டத்தின் தீயணைப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒரு வயது குழந்தை காணாமல் போயுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால், குழந்தையை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது.
துருக்கியில் இருந்து கீரிசுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் 2 படகுகளில் அகதிகளாக தப்பி சென்றனர். அப்போது கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதனால் 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று 30 பேரை பத்திரமாக மீட்டனர். 15 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மேலும், காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது.
- அதிக பாரம் காரணமாக படகு ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
- காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
டாக்கா:
வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர். கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்ததில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். அவுலியார் காட் பகுதியில் இந்த கோர விபத்து நடந்தது.

மேலும் 25க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளிட்ட மீட்பு படையினர் மூலம் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக பஞ்சகர் மாவட்ட துணை நிர்வாகத் தலைவர் சோலைமான் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, வங்காள தேச அதிபர் அப்துல் ஹமீது மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவுல்லங்கா என்னும் இடத்தில் இருந்து சலாதிவரி பாலெம் என்னும் இடம் நோக்கி பயணிகள் ஒரு படகு நேற்று மாலை கவுதமி ஆற்றில் சென்று கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.
இந்த நிலையில் நீர்ச்சுழலில் சிக்கிய அந்த படகு ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 30 பேரும் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதையடுத்து விசாகப்பட்டினம் மற்றும் ராஜமகேந்திரவரம் நகரங்களில் இருந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து 23 பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
எனினும் மற்ற 7 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. அவர்களை தேடும்பணி தொடர்ந்து நீடித்து வருவதாக மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். #AndhraPradesh #EastGodavri

