என் மலர்
காங்கோ
- சுரங்கத்தில் பாலம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்..
- சுரங்க விபத்தை பார்வையிடுவதற்காக அமைச்சர் பயணித்த விமானம் தீப்பற்றி எரிந்தது.
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் லுவாலாபா மாகாணத்தில் உள்ள கலண்டோ சுரங்கத் தளத்தில் நவம்பர் 15-ம் தேதி பாலம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அங்கே பாதுகாப்பிற்கு இருந்த ராணுவத்தினர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு பீதியடைந்த தொழிலாளர்கள், சுரங்கத்தில் பாலம் வழியாக தப்பி செல்ல முயன்ற போது திடீர் அழுத்ததால் பாலம் சரிந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட காங்கோ சுரங்கத்துறை மந்திரி லூயிஸ் வாடும் கபாம்பா மற்றும் அவரது குழுவை சேர்ந்த 19 பேர் தலைநகர் கின்ஷாசாவிலிருந்து விமானம் மூலம் லுவாலாபா மாகாணத்தின் கோல்வேசி விமான நிலையம் சென்றனர்.
கோல்வேசி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது ரன்வேயில் இருந்து விலகிச்சென்று தீப்பற்றி எரிய தொடங்கியது.
அங்கிருந்த அவசர கால மீட்புக்குழுவினர் விரைந்து செயல்பட்டு உள்ளே இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். தீயையும் அணைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
- காங்கோ ஆற்றில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது.
- அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் ஆவர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு படகு விபத்துகளில் 193 பேர் உயிரிழந்தனர்.
காங்கோவின் வடமேற்கு மாகாணமான ஈக்வேட்டரில் வியாழக்கிழமை மாலை, லுகோலிலா பகுதியில் உள்ள காங்கோ ஆற்றில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது. இதில் படகு கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 209 பேர் மீட்கப்பட்டதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு, அதே மாகாணத்தில் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசன்குசு பகுதியில் மற்றொரு மோட்டார் படகு விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் இறந்த 86 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். இந்த விபத்து இரவில் அதிக சுமையுடன் பயணம் செய்தபோது ஏற்பட்டதாக தெரிகிறது.
காங்கோவில் மோசமான சாலை கட்டமைப்புகள் காரணமாக, மக்கள் மலிவான படகு பயணங்களை அதிகம் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனநாயக படை என்ற கிளர்ச்சி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
- கிவு மாகாணத்தில் நியாதோ என்ற இடத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கூடியிருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட காங்கோவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் காங்கோ - உகாண்டா எல்லையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனநாயக படை என்ற கிளர்ச்சி அமைப்பினர் நடத்திய 2 வெவ்வேறு தாக்குதல்களில் பொதுமக்கள் 89 கொல்லப்பட்டனர்.
திங்கட்கிழமை, நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் நியாதோ என்ற இடத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கூடியிருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை, பெனியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பகுதியில், பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் முன்னரும் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
- துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் தேவாலயத்துக்குள் ஒரு கும்பல் நுழைந்தது.
- அந்த கும்பல் அங்கிருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்தது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கோமாண்டா நகரில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அப்போது துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் தேவாலயத்துக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. உயிருக்கு பயந்து பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
மேலும் அந்த கும்பல் அங்கிருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்தது. அதில் வீடுகள், கடைகள் எரிந்து சேதமானது. இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக தேவாலயம் அருகில் உள்ள மக்சோஸ்கனி கிராமத்தில்இந்த கும்பல் நடத்திய தாக்குதலில் 5 பேர் இறந்தனர்.
கோமாண்டா நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டையில் இருந்து வந்த இக் கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளனர். அரசுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவ்வப் போது இவர்கள் பொதுமக்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
- இஸ்லாமிய ஆட்சியை நாட்டில் நிறுவ வேண்டும் என்பதே ADF-ன் நோக்கம்.
காங்கோவின் கிழக்கு பகுதியான கோமண்டாவில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் இன்று, இஸ்லாமிய அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை அலைய்ட் டெமாக்ரடிக் ஃபோர்ஸ் (ADF) உறுப்பினர்கள் அதிகாலை 1 மணியளவில் நடத்தியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோமண்டாவில் சிவில் சமூக ஒருங்கிணைப்பாளர் டியூடோன் டியூரந்தாபோ, 21-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பல வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
உகாண்டா மற்றும் காங்கோ எல்லைப் பகுதியில் செயல்படும் ADF, பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்லாமிய ஆட்சியை நாட்டில் நிறுவ வேண்டும் என்பதே ADF-ன் நோக்கம்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் இடுரியில் நடந்த தாக்குதல்களில் ADF குழு 12க்கும் அதிகமானோரை கொன்றது குறிப்பிடத்தக்கது.
- இறந்தவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.
- மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன.
மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள கசாபா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.
உள்ளூர் நிர்வாகத்தின் கூற்றுப்படி, இறந்தவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.
வெள்ளத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர், சுமார் 150 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த வெள்ளப்பெருக்கினால் கசாபா நதியின் நீர்மட்டம் உயர்ந்து, பெரிய பாறைகள், மரங்கள் மற்றும் சேறு கிராமத்திற்குள் பாய்ந்து வீடுகளை அழித்தது.
வெள்ளம் நீரினால் பரவும் நோய்கள், சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்று உள்ளூர் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
கனமழை காரணமாக நிவாரணப் பணிகளும் சிரமங்களை எதிர்கொள்கின்றன. கசாபா கிராமம் டாங்கன்யிகா ஏரியின் கரையில் அமைந்துள்ளது மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன.
பேரழிவைத் தொடர்ந்து காங்கோ அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவியைக் கோரியுள்ளது.
- பலர் காங்கோ நதி மற்றும் அதன் துணை நதிகளின் வழியே படகு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
- தீ மளமளவென பரவியதால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் போதுமான சாலை உள்கட்டமைப்பு இல்லாததால் பலர் காங்கோ நதி மற்றும் அதன் துணை நதிகளின் வழியே படகு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். மோசமான பராமரிப்புள்ள படகுகளால் அவ்வப்போது விபத்துகளும் நேர்கிறது.
இந்நிலையில் காங்கோவின் ஈக்வடூர் மாகாணத்தில் இருந்து அருகே உள்ள மாகாணத்திற்கு 150க்கும் மேற்பட்டோரை ஏற்றுக்கொண்டு மரப்படகு ஒன்று ருகி ஆற்றில் சென்றுகொண்டிருந்தது. படகில் எரிபொருட்களும் ஏற்றிச் செல்லப்பட்டன.
பண்டமா என்ற பகுதியில் சென்றபோது படகில் சமையல் செய்துகொண்டிருந்தபோது தீயானது எரிபொருட்கள் மீது பற்றியது. தீ மளமளவென பரவியதால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவத்தில் படகில் பயணித்த 143 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆற்றில் குதித்த மாயமாகினர். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.
போதிய தகவல் தொடர்பு வசதி இல்லாததால் இந்த விபத்து குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஆற்றில் குதித்து மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட உடல்கள் முற்றிலும் எறிந்த நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது.
- பயணிகள் உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்தனர்.
கின்சாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகு புறப்பட்டது. அந்தப் படகில் சுமார் 400 பேர் பயணம் செய்தனர். பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்து உள்ளனர். அப்போது துரதிருஷ்டவசமாக படகும் ஆற்றில் கவிழ்ந்தது.
இந்தக் கோர விபத்தில் படகில் இருந்து 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். காணாமல் போன மற்றவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.
படகு தீப்பிடித்த விபத்துக்கு பெண் ஒருவர் சமையல் செய்ததே காரணம் என கூறப்படுகிறது.
- பொதுமக்கள், பாதுகாப்புப் படை மீது பயங்கரவாத குழு தாக்குதல் நடத்தி வருகிறது.
- கிராமங்களில் உள்ள வீடுகளை பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துச் சென்றனர்.
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கோவின் தென்கிழக்கில் உள்ள இடுரி மாகாணத்தின் பஹிமா பட்ஜிரா பகுதியில் உள்ள கிராமங்களில் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.
கிராமங்களில் உள்ள வீடுகளை பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துச் சென்றனர். இந்தத் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
- ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
- சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினரால் சிறைக்குள் செல்ல முடியவில்லை.
காங்கோவின் கோமா நகரில் உள்ள மன்சென்ஸ் சிறையில் நூற்றுக்கணக்கான பெண் கைதிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
ருவாண்டா ஆதரவு கிளர்ச்சிக் குழுக்கள் கடந்த வாரம் காங்கோ நகரத்திற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது மன்சென்ஸ் சிறையில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பெண் கைதிகள் நூற்றுக்கணக்கானோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த சிறை பகுதி தீவைத்து கொளுத்தப்பட்டதில் ஏராளமான பெண்கள் உடல் கருகி உயிரிழந்ததாக ஐ.நா.அமைதிப் பேச்சுவார்த்தை குழுவின் துணை தலைவர் விவியன் வான் டி பெர்ரேவின் தெரிவித்துள்ளார்.
ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்கள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினரால் சிறைக்குள் செல்ல முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து அதிக விவரங்கள் இல்லை என்றாலும், கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் சமீபத்தில் நடந்த M23 தலைமையிலான மோதலில் இந்த அட்டூழியங்கள் மிக மோசமானவை என்று கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சிறை வளாகப் பகுதியில் சுமார் 2,000 உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாக விவியன் வான் டி பெர்ரேவின் கூறினார்.
- ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.
- மாயமான 100 பேரை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.
கின்ஷசா:
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடான காங்கோவின் இகியுடர் மாகாணத்தில் புசிரா என்ற ஆறு பாய்கிறது.
இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு அண்டை நகருக்கு புசிரா ஆற்றில் நேற்று படகு ஒன்று புறப்பட்டது. அந்தப் படகில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊருக்கு அந்தப் படகில் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர்.
இதில் ஆற்றில் மூழ்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் பலியானது நினைவிருக்கலாம்.
- ஏரியில் தத்தளித்த படகில் இருந்து பலர் மீட்கப்பட்டனர்.
- மேலும் சிலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம்.
கோமா:
ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் மினோவில் இருந்து வடக்கு கிவு மாகாணத்தின் கோமா பகுதியை இணைக்கும் ஏரியில் நேற்று படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் படகில் 278 பயணிகள் இருந்தனர்.
ஏரியை ஒட்டி அமைந்துள்ள கிடுகு துறைமுகம் அருகே சென்றபோது அதிக பாரம் தாங்காமல் படகு திடீரென கவிழ்ந்தது. இதில் பயணித்த பலர் ஏரி நீரில் மூழ்கினர். நீச்சல் தெரிந்தவர்கள் கரையை நோக்கி நீந்தினர்.
தகவலறிந்த மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. தண்ணீரில் தத்தளித்த 10 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்து நடந்த ஏரியில் மீட்புப் பணி தொடர்கிறது.
இந்நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் பலியாகினர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என உள்ளூர் கவர்னர் தெரிவித்தார்.
படகு விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் சிலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.






