என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளர்ச்சியாளர்கள்"

    • ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனநாயக படை என்ற கிளர்ச்சி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
    • கிவு மாகாணத்தில் நியாதோ என்ற இடத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கூடியிருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர்.

    உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட காங்கோவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் காங்கோ - உகாண்டா எல்லையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனநாயக படை என்ற கிளர்ச்சி அமைப்பினர் நடத்திய 2 வெவ்வேறு தாக்குதல்களில் பொதுமக்கள் 89 கொல்லப்பட்டனர்.

    திங்கட்கிழமை, நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் நியாதோ என்ற இடத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கூடியிருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை, பெனியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த பகுதியில், பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் முன்னரும் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். 

    • காவல் நிலையம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
    • சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    நேற்று, வாஷுக் மாவட்டத்தில், உள்ளூர் காவல் நிலையம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

    மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினர் கடந்து சென்றபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

    சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது. இந்தத் தாக்குதலில் ஒன்பது வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்" என்று தெரிவித்தார். 

    பலுசிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    சமீபத்தில், கராச்சியில் இருந்து குவெட்டாவுக்குச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் மூன்று பயணிகள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

    கில்லா அப்துல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தையிலும் குண்டு வீசப்பட்டது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். 

    • இந்தப் பகுதி ராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
    • இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

    மியான்மரின் சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது நேற்று காலை மியான்மர் ராணுவம் குண்டுவீசி நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்தப் பகுதி ராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான பள்ளி ஜனநாயக ஆதரவு இயக்கத்தால் நடத்தப்பட்டது. ஆனால் தாக்குதல் நடந்த நேரத்தில் அங்கு தீவிரமான சண்டை எதுவும் இல்லை.

    தாக்குதலைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG) இந்த சம்பவத்தை கண்டித்தது.

    மியான்மர் ராணுவம் அரசு ஊடகங்கள் மீதான தாக்குதலை மறுத்துள்ளதுடன், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், நேரில் கண்ட சாட்சிகளும் சுயாதீன ஊடக அறிக்கைகளும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.

    மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சாகைங் பகுதியில் இதுபோன்ற தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்துள்ளன. அதில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தும் உள்ளனர். 

    • துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி வருகின்றனர்.
    • ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநா தெரிவித்திருந்தது.

    வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இரண்டு வருட போருக்குப் பிறகு, சூடானின் தலைநகர் கார்ட்டூமில்  உள்ள அதிபர் மாளிகையை பாராளுமன்ற படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக சூடான் ராணுவம் அறிவித்துள்ளது.

    நேற்று (வெள்ளிக்கிழமை) கார்ட்டூமில் RSF கட்டுப்பாட்டில் இருந்த அதிபர் மாளிகையை சூடான் ராணுவம் முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் தொலைக்காட்சி மற்றும் இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

     

    துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி, மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சூடான் இராணுவம் இப்போது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    உள்நாட்டு போரில் கடந்த 2 வருடமாக நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.

     

    கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் சூடானில் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை மதிப்பிடுகிறது .

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ப்வேரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • உகாண்டா காவல்துறையும் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையும் சந்தேக நபர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேற்கு உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லையில் உள்ள போண்ட்வே பகுதியில் லுபிரிரா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்குள் நுழைந்த கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இதில், 38 மாணவர்கள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள ப்வேரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் குறித்து உகாண்டா போலீஸ் படையின் செய்தித் தொடர்பாளர் ஃப்ரெட் எனங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பள்ளிக்கூடத்தில் ஒரு தங்குமிடம் எரிக்கப்பட்டது மற்றும் ஒரு உணவுக்கூடம் சூறையாடப்பட்டது. இங்கு இதுவரை 41 உடல்கள் பள்ளியில் இருந்து மீட்கப்பட்டு ப்வேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.

    உகாண்டா காவல்துறையும் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையும் சந்தேக நபர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

    • கூட்டத்துக்குள் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
    • தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    போர்ட்-ஓ-பிரின்ஸ்:

    ஹைதி நாட்டு தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் வடக்கு புறநகர் பகுதியில் பாதிரியார் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தவ பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அணிவகுத்து சென்றனர்.

    அப்போது கூட்டத்துக்குள் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

    • குக்கி கிளர்க்காரர்கள் துப்பாக்கி, ராக்கெட், டிரோன் என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின்மூலம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்
    • நேற்று மதியம் முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் ராக்கெட் குண்டு விழுந்து வெடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்

    மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மகக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியான பின் நாட்டு மக்களின் கவனமும் அரசியல்வாதிகளின் கவனமும் மணிப்பூரை நோக்கி திரும்பியது.

    இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆயுதமேந்திய குக்கி கிளர்க்காரர்கள் துப்பாக்கி, ராக்கெட், டிரோன் என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின்மூலம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு இம்பாலில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி டிரோன் மூலம் மெய்தி இன மக்கள் வசிக்கும் 2 கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். நேற்றைய தினம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தாக்குதல்கள் அரங்கேறின. பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் நேற்று மதியம் முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் ராக்கெட் குண்டு விழுந்து வெடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 வயது சிறுமி உள்பட 5 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று [சனிக்கிழமை] ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மாவட்டத் தலைநகரில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தவரைச் சுட்டுக்கொன்றனர்.

    தொடர்ந்து மாவட்டத் தலைநகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள இடத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மூன்று பழங்குடியின போராட்டக்காரர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர் மணிப்பூரில் மீண்டும். மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கத்தொடங்கியுள்ள நிலையில் அம்மாநில பாஜக முதல்வர் பைரேன் சிங் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

    • அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது.
    • தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் அலெப்போ உள்ளது.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

    பஷரை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் பஷர் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். போராட்டக்காரர்களை ஒடுக்க ரஷியா பஷருக்கு பேருதவி செய்தது.

    2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷியா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் அதிபர் பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு அங்கங்கே போராட்டங்கலகள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது.

     

    முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் ராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமரிக்கா மற்றும் ஐநா சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது

     

    இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் அலெப்போ நகரில் இருந்து ராணுவம் தாற்காலிகமாக பின்வாங்கி உள்ளது.

     

    மேலும் அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று [சனிக்கிழமை] அலெப்போ புறநகர்ப் பகுதியில் ரஷிய மற்றும் சிரிய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்று காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பு பேணி வந்துள்ளது.
    • அலெப்போ நகர் வரலாற்றுக் காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருகிறது.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

    பஷரை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் பஷர் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். போராட்டக்காரர்களை ஒடுக்க ரஷியா பஷருக்கு பேருதவி செய்தது.

    2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷியா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் அதிபர் பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு ஆங்காங்கே போராட்டங்கள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது.

    முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் ராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமரிக்கா மற்றும் ஐநா சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது

    இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ரஷிய ராணுவம் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 300க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்றுக் காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • டமாஸ்கஸ் - இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் அலெப்போ
    • ஹோம்ஸ் நகரை கைப்பற்றினால் டமாஸ்கஸ் நோக்கி எளிதில் முன்னேற முடியும்.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் ஆசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

    ஆசாத்தை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் ஆசாத் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த வாரம் முதல் ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.

    அல் கொய்தாவுடான் நெருங்கிய தொடர்பில் இருந்த இவ்வமைப்பு ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ளது. கடந்த வாரம் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் படையினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்தது. அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை கைப்பற்றிய நிலையில் ராணுவம் அங்கிருந்து வெளியேறியது.

     

    சிரியாவுக்கு ஆதரவாக மீண்டும் ரஷியா ராணுவ விமானங்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தலைநகர் டமாஸ்கஸ் - இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கட்டுபாட்டுக்குள் வைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து நேற்றைய தினம் ஹமா நகரையும் கைப்பற்றி உள்ளனர்.

     

    ஹமா[hama] நகரம் தலைநகர் டமாஸ்கஸ் - அலெப்போ இடையிலான நேரடி இணைப்புப் பாதை கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் ஏராளமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நகர் பகுதியில் தாக்குதல் தொடர்ந்தால் மக்களும் பாதிக்கப்படுவர் என்பதால் ஹமா நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

     

    இதனால் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் ஹமா நகரம் சென்றுள்ளது. கிழக்கில் உள்ள இரண்டு நகர்களை தொடர்ந்து தற்போது மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் [homs] நகரைக் கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தாக்குதலுக்கு அஞ்சி ஆயிரக்கணக்கானோர் ஹோம்ஸ் நகரை விட்டு வெளியேறியுள்ளனர்.

    ஹோம்ஸ், கிழக்கு பகுதி நகரங்களுடன் டமாஸ்கஸ் ஐ இணைக்கிறது. இந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றும் பட்சத்தில் தலைநகர்  டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சிப் படைகள் முன்னேறுவது எளிதாக அமையும்.  

    • அதிபர் ஆசாத்தின் புகைப்படத்தைப் பள்ளிச் சுவர்களில் கிராப்பிடி ஆக வரைந்து எதிர்ப்பை பதிவு செய்த பள்ளி மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்
    • முந்தைய உள்நாட்டு போரின் போது தாரா கிளர்ச்சியின் பிறப்பிடமாக இருந்தது

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.

    ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.

     

    ராணுவம் அங்கிருந்து வெளியேறிய நிலையில் முந்திய உள்நாட்டு போரின் போது உதவிய ரஷியா மீண்டும் போர் விமானங்களை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் துரிதமாக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் கடந்த வியாழனன்று ஹமா நகரையும் கைப்பற்றினர். 

    கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் ஏராளமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நகர் பகுதியில் தாக்குதல் தொடர்ந்தால் மக்களும் பாதிக்கப்படுவர் என்பதால் ஹமா நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ராணுவம் தெரிவித்தது.

    தொடர்ந்து மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் நகருக்கு கிளர்ச்சியாளர்கள் குறிவைத்துள்ளதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். ஹோம்ஸ், கிழக்கு பகுதி நகரங்களுடன் டமாஸ்கஸ் ஐ இணைப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

     

    இந்நிலையில் தாரா [Daraa] நகரையும் ராணுவத்திடம் இருந்து கிளர்ச்சியாளர்கள் இன்று கைபட்டறியுள்ளனர். முந்தைய உள்நாட்டு போரின் போது தாரா கிளர்ச்சியின் பிறப்பிடமாக இருந்த ஒன்றாகும்.

    இங்கே 2011 ஆம் ஆண்டில் அதிபர் ஆசாத்தின் புகைப்படத்தைப் பள்ளிச் சுவர்களில் கிராப்பிடி ஆக வரைந்து எதிர்ப்பை பதிவு செய்த பள்ளி மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தாரா நகரில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அதுவே உள்நாட்டு போராக பின்னர் பரிணமித்தது.

     

    அலெப்போ - ஹாமா ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில் தாரா நகரை உள்ளூர் ஆயுதக்குழு ஒன்று கைப்பற்றி உள்ளதாக சிரிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது.

    தாரா நகரின் 90 சதேவீதம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்ற நிலையில் ராணுவம் அங்கிருந்து வெளியேறி வருகிறது. ஜோர்டான் நகரில் எல்லையில் தாரா மாகாண பகுதிகள் அமைந்துள்ளதால் நிலைமை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த உள்நாட்டு போரின் போது நாடு முழுவதும் 500,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    • சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    • விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.

    ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.

    இந்த நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததாக சிரிய கிளிர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்பதாக தெரிவித்துள்ளனர். எனினும், இது குறித்து சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    இது குறித்து அந்நாட்டின் ஷாம் எப்.எம். ரேடியோ வெளியிட்ட தகவல்களில் டமாஸ்கஸ் விமான நிலையம் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிரிய தலைநகர் வடக்கில் உள்ள சயித்நயா ராணுவ சிறைக்குள் நுழைந்து தங்களது குழுவை சேர்ந்த சிறைவாசிகளை விடுவித்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸ்-ஐ அரசாங்கப் படைகள் கைவிட்டதைத் தொடர்ந்து முந்தைய நாள் இரவு, எதிர்க்கட்சிப் படைகள் அதைக் கைப்பற்றின. ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான வதந்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

    ×