என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "syria"

    • 35 இடங்களைக் குறிவைத்து 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
    • மொத்தம் 20 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.

    சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளின் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்குறிவைத்து அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் 13-ம் தேதி ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

    அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 35 இடங்களைக் குறிவைத்து 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மொத்தம் 20 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.

    இந்தத் தாக்குதல்கள் சிரியாவின் எந்தப் பகுதியில் நடத்தப்பட்டது அல்லது இதில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற  விவரங்களை அமெரிக்க ராணுவம் இன்னும் வெளியிடவில்லை.

    இருப்பினும், பயங்கரவாத மையங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  

    • சிரியாவில் ஐ.எஸ். சிலிப்பர் செல்கள் அடிக்கடி கொடூரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    • அவர்களை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை செயல்பட்டு வருகிறது.

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத குழு ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த இடங்கள் மீது பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

    சிரியாவின் ஹொம்ஸ் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பால்மைரா நகருக்கு சற்றே வடக்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் சுரங்கங்கள் அமைத்து ஐ.எஸ். அமைப்பினர் ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனர். இந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.எஸ். பயங்கரவாத குழுவிற்கு எதிராக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து போரிட்டு வருகிறது.

    இங்கிலாந்து ராணுவம் தைபூன் FGR4 என போர் விமானத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து சிரியா அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஐ.எஸ்.க்கு எதிரான படையுடன் சிரியா கடந்த வருடம் இணைந்தது.

    சிரியாவில் இருந்து 2019-ல் ஐ.எஸ். ஒழிக்கப்பட்ட போதிலும், ஐ.எஸ். சிலிப்பர் செல்கள் அடிக்கடி சிரியா மற்றும் ஈராக்கில் மோசமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    • டமாஸ்கஸ் தேவாலயத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
    • தற்போது வெள்ளிக்கிழமை தொழுகையை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    சிரியாவில் இன்று வெள்ளிக்கிழமை ஏராளமானோர் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயம் அடைந்தனர்.

    சிரியாவின் ஹோம்ஸில் உள்ள அலவைட் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சிரியாவில் இஸ்லாமிஸ்ட் அதிகாரிகள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு நடந்த 2வது பெரிய குண்டு வெடிப்பு இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் டமாஸ்கஸ் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

    இமாம் அலி பின் அபி தலிப் மசூதியில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகையை குறிவைத்து மசூதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சிரியாவின் உள்நாட்டுப் போரின்போது, ஹோம்ஸ் நகரம் கடுமையான மதவாத வன்முறையை எதிர்கொண்டது.

    • ISIS இன் கோட்டையாக இருக்கும் சிரியா மீது நாங்கள் ஒரு சக்திவாய்ந்த தாக்குதலைத் தொடங்குகிறோம்.
    • இதுவரை கண்டிராத வலிமையான தாக்குதலை நடத்துவோம்

    இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

    Operation Hawkeye என்ற பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "கொலைக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு எதிரான மிகவும் கடுமையான பழிவாங்கல்" என்று விவரித்தார்.

    மேலும், "ISIS சிரியாவில் துணிச்சலான அமெரிக்க தேசபக்தர்களைக் கொன்றது, அவர்களின் புனித ஆன்மாக்களை இந்த வாரம் மிகவும் மரியாதைக்குரிய விழாவுடன் அமெரிக்க மண்ணுக்கு வரவேற்றேன்.

    நான் ஏற்கனவே உறுதியளித்தபடி, ISIS இன் கோட்டையாக இருக்கும் சிரியா மீது நாங்கள் ஒரு சக்திவாய்ந்த தாக்குதலைத் தொடங்குகிறோம்.

    சிரியாவிற்கு மீண்டும் மகத்துவத்தை கொண்டு வர கடுமையாக உழைத்த ஒரு மனிதரின் தலைமையிலான சிரிய அரசாங்கத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

    அமெரிக்காவைத் தாக்கும் அனைத்து பயங்கரவாதிகளுக்கும், அவர்கள் நாட்டைத் தாக்கினால் அல்லது அச்சுறுத்தினால், நாங்கள் இதுவரை கண்டிராத வலிமையான தாக்குதலை நடத்துவோம் என்று இதன் மூலம் நான் எச்சரிக்கிறேன்" என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறினார். 

    • துப்பாக்கி சூடு நடத்திய நபரை மற்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
    • இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய சிரியாவில் உள்ள பால்மைரா நகருக்கு அருகே உள்ள ராணுவ முகாம் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள், ஒரு அமெரிக்க உரைபெயர்ப்பாளர் என 3 அமெரிக்கர்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை மற்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

    இந்த தாக்குதலை ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த நபர் நடத்தியதாகவும், அவர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்தது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "சிரியாவில் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு ஆபத்தான பகுதியில் ஐ.எஸ் நடத்திய தாக்குதல் இதுவாகும். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். இந்தச் சம்பவத்தால் சிரிய அதிபர் அகமது அல்-ஷாரா அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளார். சிரியா அமெரிக்கப் படைகளுடன் இணைந்து போராடி வருகிறது" என்றார்.

    • எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு
    • 7 நாடுகள் எதிர்ப்பும் 43 நாடுகள் புறக்கணிப்பும் செய்தது.

    1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு நாடுகளுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. அப்போது ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேம், சிரியாவிலிருந்து கோலன் ஹைட்ஸ் மற்றும் எகிப்திடமிருந்து காசா பகுதி மற்றும் சினாய் தீபகற்பம் உள்ளிட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் கைப்பற்றியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தில் , "சிரியாவின் கோலன் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து இருப்பதை சட்டவிரோதம் என்றும், அப்பகுதியை விட்டு அந்நாடு வெளியேற வேண்டும்" என்று எகிப்து கோரியிருந்தது.

    எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் 7 நாடுகள் எதிர்ப்பும் 43 நாடுகள் புறக்கணிப்பும் செய்தது. இதன் முடிவில் இந்த தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறியது.

    இதனையடுத்து தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு சிரியா நன்றி தெரிவித்தது.

    • அதிபர் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்தது.
    • ஐ.நா. கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது.

    சிரியாவில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

    சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதையடுத்து அந்நாட்டின் அதிபராக அகமது அல் ஷரா பொறுப்பேற்றார்.

    ஆசாத் ஆட்சி கவிழ்ந்தபோது சிரியாவில் ஐ.நா. கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், சிரியாவில் ரைப் டிமாஷ்கியு மாகாணம் குவாண்டனா மாவட்டம் பெட் ஜின் கிராமத்தில் இன்று இஸ்ரேல் படையினருக்கும், உள்ளூர் ஆயுதக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதலில் பொதுமக்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் படையினர் 6 பேர் காயமடைந்தனர். 

    • சிரியாவில் மோதல் ஏற்பட்ட பிறகு கடந்த 8-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
    • 6-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற சிலைகள் திருடப்பட்டுள்ளன.

    சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டு நடைபெற்றுள்ளது. திருடர்கள் ரோமன் காலத்து சிலைகளை திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருட்டுப் போனது இன்று காலை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    சிரியாவின் தொல்பொருட்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கான இயக்குநரகத்தின் அதிகாரி ஒருவர், 6 சிலைகள் திருடப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மற்றொரு அதிகாரி பல சிலைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் சரியான எண்ணை அவர் குறிப்பிடவில்லை. அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடாததால், இரண்டு அதிகாரிகளும் பெயரை குறிப்பிடவில்லை.

    50 வருட ஆசாத் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, கொள்ளை நடக்க வாய்ப்புள்ளதாக கருதி அருங்காட்சியகம் மூடப்பட்டது. கடந்த ஜனவரி 8-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

    சிரியாவில் மார்ச் 2011-ல் மோதல் தொடங்கிய பிறகு, அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை டமாஸ்கஸுக்கு கொண்டு வந்தனர்.

    • சிரிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை, உள்நாட்டு மோதல் மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 374 பேர் கொல்லப்பட்டதாக கூறுகிறது.
    • மதகுருமார்களுக்கு அப்பகுதியில் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியை வழங்கியதாகக் கூறினார்.

    சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து ஸ்விடா மாகாணத்துக்கு கூடுதல் அரசுப்படைகள் அனுப்பப்பட்டன. இதில் ட்ரூஸ் மதத்தினர் மீது அரசுப்படைகள் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதையடுத்து ட்ரூஸ் மதத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேல், சிரியா மீது தாக்குதல் நடத்தியது. சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது.

    தலைநகர் டமாஸ்கசில் உள்ள சிரியா ராணுவ தலைமையக கட்டிடம் மீது இஸ்ரேல் விமானப்படை ஏவுகணையை வீசியது. இதைதொடர்ந்து இஸ்ரேலுக்கு சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அவர் கூறும்போது, "போருக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. சவால்களை எதிர்கொண்டு எங்கள் மக்களைப் பாதுகாப்பதில் எங்கள் வாழ்க்கையை செலவிட்டுள்ளோம். சிரியா மக்களின் கண்ணியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் போராடத் தயாராக இருக்கிறோம். பொதுமக்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது" என்றார்.

    இந்நிலையில் அமெரிக்கா, துருக்கி மற்றும் அரபு நாடுகளின் மத்தியஸ்தத்தின் கீழ் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.  

    இதையடுத்து சிரிய இராணுவத்திற்கும் ட்ரூஸ் படைகளுக்கும் இடையே பல நாட்கள் நீடித்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.

    போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, சிரிய இராணுவ படையினர் ஸ்விடா மாகாணத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.

    சிரிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை, உள்நாட்டு மோதல் மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 374 பேர் கொல்லப்பட்டதாக கூறுகிறது. அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

    சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா, ட்ரூஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்களுக்கு அப்பகுதியில் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியை வழங்கியதாகக் கூறினார். 

    • உலகில் சுமார் ஒரு மில்லியன் ட்ரூஸ் மக்கள் உள்ளனர்
    • டமாஸ்கஸுக்கு எச்சரிக்கைகள் முடிந்துவிட்டன. இப்போது பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம்.

    சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

    தெற்கு சிரியாவின் ஸ்வீடா பகுதியில் சிறுபான்மை ஷியா பழங்குடியினரான ட்ரூஸ் போராளிகளுக்கும், சன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயுத மோதல்கள் தொடங்கின.

    உலகில் சுமார் ஒரு மில்லியன் ட்ரூஸ் மக்கள் உள்ளனர், அவர்களில் பாதி பேர் சிரியாவில் உள்ளனர். இந்நிலையில் சிரியாவில் உள்ள ட்ரூஸ் மக்களைப் பாதுகாப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    "டமாஸ்கஸுக்கு எச்சரிக்கைகள் முடிந்துவிட்டன. இப்போது பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம் " என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார். ஸ்வீடா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தனது கடுமையான தாக்குதல்களைத் தொடரும் என்று அவர் எச்சரித்தார்.

    பாதுகாப்பு அமைச்சராக நானும் பிரதமர் நெதன்யாகுவும் இதற்கு உறுதிபூண்டுள்ளோம் என்று காட்ஸ் கூறினார்.

    இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் அரசு தொலைக்காட்சி கட்டிடத்தின் மீது ஒரு குண்டு விழுந்து வெடித்தது. இதனால் நேரடி ஒளிபரப்பில் இருந்த ஒரு தொகுப்பாளர் நிகழ்ச்சியை நடுவில் விட்டுவிட்டு ஓடினார். இதன் வீடியோவை காட்ஸ் பகிர்ந்துள்ளார். 

    • தேவாலயத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஆசாமி ஒருவர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்.
    • தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

    டமாஸ்கஸ்:

    சிரியா நகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த தேவாலயத்தில் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது, தேவாலயத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அங்கு மக்களோடு மக்களாக இருந்த ஆசாமி ஒருவர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தினார். இந்த தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 53 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், குண்டுவெடிப்பில் தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.
    • ஹமாஸ்-க்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட பத்து பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்த ஆயத்தமான பயங்கரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஒப்புக் கொள்ள வலியுறுத்தி ஹமாஸ்-க்கு எதிராக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் பஷார் ஆசாத் வீழ்த்தப்பட்ட நிலையில், சிரியாவில் ஒரு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக எந்த அச்சுறுத்தலையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், தற்போது சிரியாவை ஆளும் முன்னாள் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை இது என்று இஸ்ரேல் கூறுகிறது.

    இஸ்ரேலின் இந்த தாக்குதல் சிரியாவின் தெற்கில் அமைந்துள்ள தாரா என்ற குடியிருப்பு பகுதியை தாக்கி அழித்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் நான்கு பேர் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதலில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேதமுற்றதாகவும், மற்ற தாக்குதல்கள் நகரின் ராணுவ தளங்களை தாக்கியதாக சிரிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

    ×