என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டுவெடிப்பு"

    • சுற்றுலா தலங்களையும் தகர்க்க முடிவு செய்துள்ளதாக உளவு அமைப்பு தனது எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது.
    • செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ந்தேதி நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காரை இயக்கிய பயங்கரவாதி டாக்டர் உமர் நபி உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    இந்த சம்பவத்தில் உமர் நபியின் கூட்டாளிகளான சில டாக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பேட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட டாக்டர்கள் அரியானாவின் பரிதாபாத்தில் செயல்படும் அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் டெல்லியில் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    செங்கோட்டை அருகே உள்ள பகுதிகள், சாந்தினி சவுக்கின் சில பகுதிகள் மற்றும் டெல்லியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், பாரம்பரிய கட்டிடங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்பு அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

    சாந்தினி சவுக்கில் உள்ள ஒரு கோவிலும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருப்பதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களையும் தகர்க்க முடிவு செய்துள்ளதாக உளவு அமைப்பு தனது எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது.

    இதை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதை தவிர தீவிரவாதிகள் இலக்காக நிர்ணயித்த இடங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அல்லது செயல்பாடுகள் குறித்து போலீசாருக்கு தெரிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பீதி அடைய வேண்டாம் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 6-ந்தேதி மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். 160 பேர் காயம் அடைந்தார்கள். இதற்கு பழி வாங்கவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தலாம் என்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    • குண்டு வெடிப்பு தாக்கத்தால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
    • அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் நேற்று மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

    சந்தேக நபர் ஒருவர் மசூதி வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.

    குண்டு வெடிப்பு தாக்கத்தால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

    இதையடுத்து, இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், 170-க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    • மேலும் 160 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
    • மண்டபத்தில் வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளார்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா சமூகத்தினரின் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் இன்று மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சந்தேக நபர் ஒருவர் மசூதி மண்டபத்தில் வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளார். 

    இதில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 160 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

    குண்டுவெடிப்பின் தாக்கத்தால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை எந்த அமைப்பும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.  

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாதிகள் பயங்கரவாத தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் தலைநகரிலேயே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • அரசு தரப்பு சமாதானக் குழு தலைவராக நூர் ஆலம் மெஹ்சூத் என்பவர் உள்ளார்.
    • வரது வீட்டில் நேற்று இரவு நடந்த திருமண விழாவின்போது விருந்தினர்கள் இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர்.

    பாகிஸ்தானில் திருமண விழாவில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில்

    பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில், கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு தரப்பு சமாதானக் குழு தலைவராக நூர் ஆலம் மெஹ்சூத் என்பவர் உள்ளார்.

    இவரது வீட்டில் நேற்று இரவு நடந்த திருமண விழாவின்போது விருந்தினர்கள் இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.   

    • வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது.
    • வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

    வெனிசுலா தலைநகர் கராகசின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தன. குண்டுகள் வெடித்ததில் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டு கரும்புகை எழும்பியது. மேலும் தலைநகரின் பல இடங்களில் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றன. வெடிப்பு சத்தங்களை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். தலைநகர் கராகசில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதை நடத்தியது யார் என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. ஆனால் சமீபகாலமாக அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் வெனிசுலா மீது தாக்குதல் நடந்துள்ளது.

     

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது.

    வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். மேலும் வெனிசுலாவில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்று டிரம்ப் கூறி இருந்தார். இந்த நிலையில்தான் வெனிசுலாவில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷியா - உக்ரைன் போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் கொல்லப்பட்டார்.

    உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ரஷியாவின் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் உயிரிழந்துள்ளார்.

    இந்த கார் குண்டுவெடிப்புக்கு பின்னால் உக்ரைனின் சதி உள்ளதா என்ற கோணத்தில் ரஷியா விசாரணை நடத்தி வருகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே சமயம் ஜெனரல் இகோர் கிரிலோவ் 2024 டிசம்பரில் ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.
    • பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.

    குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார். முதலில் நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்றார். தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.

    குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம் என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவு செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, பாகிஸ்தான் தலைமையின் ஆதாரமற்ற மற்றும் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

    தங்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இராணுவத்தின் தூண்டுதலால் நிகழும் அரசியலமைப்புச் சட்ட மீறல் மற்றும் அதிகாரக் கைப்பற்றலில் இருந்து சொந்த மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகப் பொய்யான கதைகளை உருவாக்க முனைகிறது. இது பாகிஸ்தானின் எதிர்பார்க்கப்பட்ட தந்திரமாகும்.

    சர்வதேச சமூகம் உண்மையை நன்கு அறிந்துள்ளது. பாகிஸ்தானின் கவனத்தைத் திசை திருப்பும் சூழ்ச்சிகளால் யாரும் ஏமாற மாட்டர்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
    • குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.

    குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார். முதலில் நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்றார். தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.

    குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம் என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தத் தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தாலிபான், மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான் பிரதிநிதிகள் இந்திய ஆதரவுடன் நடத்தினர் என்று தெரிவித்தார். 

    • குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்றும் ரேகா குப்தா தெரிவித்தார்.

    டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா நிவாரண நிதியை அறிவித்துள்ளார்.

    தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன் தினம் மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.

    கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

    இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி அரசு ரூ. 10 லட்சம் நிவாரண நிதியை டெல்லி அரசு அறிவித்துள்ளது.

    மேலும் குணப்படுத்தமுடியாத காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்றும் ரேகா குப்தா தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு துணை நிற்கும் என்று அவர் உறுதியளித்தார். குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரேகா குப்தா தனது இரங்கலைத் தெரிவித்தார். 

    • உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.

    கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

    இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி உடனடியாக அமித்ஷாவை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    இந்நிலையில், டெல்லி செங்கோட்டை சம்பவம் தொடர்பாக அமித்ஷாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு ஜனாதிபதி முர்மு இன்று பேசினார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொண்டார்.

    • மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இன்று மதியம் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
    • இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இன்று மதியம் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர்.

    இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் உடனே மீட்புப் பணிக்கு விரைந்து சென்றனர்.

    இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. உயர் அதிகாரிகள், அரசு அலுவலகங்கள் அமைந்த இந்த பரபரப்பான பகுதியில் நடந்த இச்சம்பவம் அங்கு பாதுகாப்பின்மையை எடுத்துக்காட்டுகிறது.

    இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    • பரிதாபாத்தில் நமது பாதுகாப்புப் படையினரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன்.
    • கடலோரப் பகுதிகளிலும் சிறப்பு கவனம் மற்றும் அதிகரித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு பல அப்பாவி உயிர்களைப் பலிகொண்டதால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அந்த இடத்திலிருந்து வரும் காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன.

    துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு எனது மனம்கனிந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. அவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.

    அதே நேரத்தில், பரிதாபாத்தில் நமது பாதுகாப்புப் படையினரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். கிட்டத்தட்ட 300 கிலோ வெடிபொருட்கள் மற்றும் பல AK-47 துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருப்பது, நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசும் காவல்துறையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    அதிக கண்காணிப்பு தேவைப்படும் கடலோரப் பகுதிகளிலும் சிறப்பு கவனம் மற்றும் அதிகரித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று வலியறுத்தி உள்ளார்.  

    ×