என் மலர்

  நீங்கள் தேடியது "Moscow"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரஷிய- உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
  • இரு நாடுகளும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன

  ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவத்தால் ஆக்ரமித்தது.

  சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டு ரஷியா மேற்கொண்ட இந்த ஆக்ரமிப்பிற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது.

  இந்த ரஷிய-உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்து பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களாக தாக்குதல்களில் இரு நாடுகளும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன.

  இந்நிலையில் உக்ரைன் இரு டிரோன்களை ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி ஏவியது. இவற்றை ரஷியாவின் விமானப்படை தாக்கி அழித்தது. மாஸ்கோவின் தெற்கு புறநகரில் உள்ள டொமோடிடோவோ (Domodedovo) பகுதியின் மீது ஏவப்பட்ட ஒரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது.

  தலைநகரின் மேற்கு பகுதியில் உள்ள மின்ஸ்க் நெடுஞ்சாலையின் மேலே இன்னொரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது. வீழ்த்தப்பட்ட டிரோன்களின் பாகங்கள் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவோ அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல்கள் இல்லை.

  ரஷியாவின் மாஸ்கோ நகரை குறிவைத்து ஒரே வாரத்தில் 3-வது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். #Moscow #ApartmentBuildingFire
  மாஸ்கோ:

  ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோபோட்கின்ஸ்கை என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு எண்ணற்ற குடும்பங்கள் வசித்து வருகின்றன.

  இந்த நிலையில், நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.

  இதனால் அங்கு கரும் புகைமண்டலம் உருவானது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைவரும், அலறிஅடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். இதையடுத்து, தீப்பிடித்த வீட்டுக்குள் சிக்கி இருந்த 4 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.  #Moscow #ApartmentBuildingFire 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஷியாவுக்குள் நுழைந்து உளவு பார்த்ததாக அமெரிக்காவை சேர்ந்த நபரை மாஸ்கோ நகரில் அந்நாட்டு ரகசிய போலீசார் கைது செய்தனர். #RussiaFSB #UScitizen #Spyaction #PaulWhelan
  மாஸ்கோ:

  ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் அமெரிக்காவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கரான பால் வெலான் என்பவரை ரஷிய நாட்டின் ரகசிய போலீசார் கடந்த 28-ம் தேதி கைது செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

  கைதான நபரிடம் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் மேற்கொண்டு எந்த விபரங்களையும் ரஷிய ஊடகங்கள் வெளியிடவில்லை. ரஷியாவுக்கு எதிரான நாசவேலை மற்றும் சதிச்செயலில் ஈடுபட்டதாக இவர்மீது வழக்கு தொடரப்பட்டால் சுமார் 20 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #RussiaFSB #UScitizen #Spyaction #PaulWhelan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து கைதாகி, ஈராக் சிறைகளில் தண்டனை அனுபவித்துவரும் ரஷிய நாட்டுப் பெண்களின் 30 குழந்தைகள் விமானம் மூலம் மாஸ்கோ நகரை வந்தடைந்தனர். #RussianISFighters #IraqISFighters
  மாஸ்கோ:

  சிரியா மற்றும் ஈராக் நாட்டின் சில பகுதிகளை முன்னர் கைப்பற்றி, அங்கிருந்து பரந்து, விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்க பயங்கரவாத ஆயுதத்தை கையில் ஏந்திய ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதற்காக கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து சில வாலிபர்கள் சிரியா மற்றும் ஈராக் நாட்டுக்கு சென்றனர்.

  இதேபோல், இணையதளங்களின் வழியாக மூளைச்சலவை செய்யப்பட்டு உலகின் பல நாடுகளை சேர்ந்த வாலிபர்களும், இளம்பெண்களும் சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு சென்றனர். அங்கிருந்த ஐ.எஸ். பயங்கரவாத முகாம்களில் சேர்ந்த அவர்கள் போர் பயிற்சிபெற்று, அரசுப் படைகள் மற்றும் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர்.

  அவ்வகையில், ரஷியாவில் இருந்து ஈராக் நாட்டுக்கு சென்ற நூற்றுக்கணக்கான பெண்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள் பல்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

  இப்படி ரஷியாவில் இருந்து ஈராக் வந்த பல பெண்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். சில பெண்கள் இங்கு வந்த பின்னர் குழந்தைகளை பெற்றனர். தற்போது தண்டனை அனுபவித்துவரும் இந்தப் பெண்களுடன் அவர்களின் குழந்தைகளும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், ரஷியாவில் உள்ள பிரபல தொண்டு நிறுவனத்தின் மூலம் ஈராக் சிறைகளில் அடைபட்டு கிடக்கும் 115 குழந்தைகளை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

  இதன் ஒருபகுதியாக  16 சிறுமியர் 14 சிறுவர்கள் என 3 முதல் 13 வயதுக்குட்பட்ட 30 குழந்தைகள் முதல்கட்டமாக நேற்று விமானம் மூலம் மாஸ்கோ நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

  போதிய கவனிப்பின்றி சிறைகளில் வைக்கப்பட்டிருந்த இவர்களில் பலருக்கு உடல்நலக்குறைவு மற்றும் மன அழுத்த பாதிப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த குழந்தைகள் அனைவரும் மாஸ்கோவில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

  வரும் ஜனவரி மாதத்தில் மேலும் 36 குழந்தைகளை அழைத்து வரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ரஷிய குழந்தைகள் உரிமை அமைப்பின் நடுவர் அன்னா குஸ்னேட்சோவா தெரிவித்துள்ளார். #RussianISFighters #IraqISFighters

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆன்லைன் மூலம் நட்பாக கிடைத்த தோழி தன்னை காதலிக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த சிறுவன் சுமார் 6 ஆயிரம் கி.மீட்டருக்கு அப்பால் உள்ள காதலியை தேடிப்பிடித்து கொலைசெய்துள்ளான். #Russia #SocialMediaKills
  மாஸ்கோ:

  பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் இளைஞர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சமூக வலைதளங்கள் மூலம் பல சாதகமான விஷயங்கள் நடந்தாலும், உயிருக்கு பாதகமான நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.

  ரஷ்யாவைச் சேர்ந்த கிரில் வொல்ஸ்கி என்ற 16 வயது சிறுவன், ஆன்லைன் மூலம் மாஸ்கோவில் உள்ள கிறிஸ்டினா என்ற சிறுமியுடன் நட்புடன் பழகிவந்துள்ளான். நாளடைவில் இவனுக்கு கிறிஸ்டினா மீது காதல் வர, இவனது காதலை கிறிஸ்டினா ஏற்க மறுத்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த கிரில் தனது சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பெற்றோருக்கு தெரியாமல் மாஸ்கோ பயணித்துள்ளான். 6 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் தூரம் பயணித்த கிரில், சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். மேலும், யாரும் கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக கழிவுநீர் தொட்டியில் சிறுமியின் உடலை மூழ்கச்செய்துள்ளான்.

  சிறுமி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஆப் மூலம் ஏற்பட்ட நட்பு இரண்டு சிறுவர்களின் வாழ்வை சூறையாடியிருப்பது சற்றே சிந்திக்க வைக்கிறது. #Russia #SocialMediaKills
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார். #SushmaSwaraj #Russia
  புதுடெல்லி:

  வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார். இந்த பயணம் இரண்டு நாள் பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது.

  ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு செல்லும் சுஷ்மா சுவராஜ், அங்கு நடைபெறும் தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான 23-வது சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SushmaSwaraj #Russia
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொலைபேசி அழைப்புகள் மட்டுமே போதாது என்பதால் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ நகருக்கு வருமாறு டிரம்ப்புக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார். #Putin #Trump
  ஜோகனஸ்பர்க்:

  சமீபத்தில் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையே வரலாற்று சிறப்புமிக்க முதல் சந்திப்பு நடைபெற்றது.

  இந்நிலையில், ஈரான், சிரியா உள்ளிட்ட  உலக நாடுகளின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச தொலைபேசி அழைப்புகள் மட்டுமே போதாது என்பதால் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ நகருக்கு வருமாறு டிரம்ப்புக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார்.  பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகனஸ்பர்க் நகருக்கு வந்துள்ள ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபருடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு வருமாறு டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். #Putin #Trump
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலைநகர் மாஸ்கோவில் கால்பந்து ரசிகர்கள் உள்பட மக்கள் இருந்த கூட்டத்தில் கார் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
  மாஸ்கோ:

  ரஷிய நாட்டில் உலக கால்பந்து போட்டி நடப்பதால் உலகமெங்கும் இருந்து கால்பந்து ரசிகர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

  இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் நேற்று முன்தினம் செஞ்சதுக்க பகுதியில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் உள்பட மக்கள் கூட்டம் அலைமோதியது.

  அப்போது ஒரு கார் வேகமாக வந்து, மக்கள் கூட்டத்தில் மோதியது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இருப்பினும் இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த சம்பவத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார். அவர் கிர்கிஸ்தான் நாட்டில் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் வைத்து இருந்தது தெரிய வந்தது.

  சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறும்போது “மக்கள் கூட்டத்தில் மோதிய காரை மக்கள் மறித்து, அதை ஓட்டி வந்தவரை வெளியே இழுத்தனர். ஆனால் அவர் ஓடத் தொடங்கினார். இருப்பினும் சிலர் அவரை விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தனர்” என்றனர்.

  இந்த சம்பவத்தின்போது, அவர் மது அருந்தி இருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், மக்கள்கூட்டத்தில் மோத வேண்டும் என்ற நோக்கத்தில் மோதவில்லை என்று அவர் கூறி உள்ளார். இருப்பினும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

  படுகாயம் அடைந்தவர் களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகக் கோப்பை தொடடக்க விழா நாளன்று மாஸ்கோ நகரில் பொதுமக்கள் காரை பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். #WorldCup2018
  ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் நாளைமறுநாள் உலகக் கோப்பை தொடக்க விழா நடைபெறுகிறது. தொடக்க விழாவிற்காக முக்கிய அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் ரசிகர்கள் மாஸ்கோவில் குவிவார்கள். அப்போது அவர்கள் மைதானத்திற்கு எளிதாக செல்ல வேண்டும்.

  இதனால் சாலைகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். விமான நிலையத்திற்கு ரசிகர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். இதனால் உள்ளூர்வாசிகள் சொந்த காரை பயன்படுத்த வேண்டும். அதை வீட்டில் விட்டுவிட்டு அரசு வாகனத்தை பயன்படுத்துங்கள் என்று மாஸ்கோ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.  மேலும், பல முக்கிய சாலைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. மாஸ்கோவில் முன்னணி தலைவர்கள் வந்தால் மட்டுமே சாலை போக்குவரத்த்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். தற்போது உலகக்கோப்பை தொடக்க விழாவால் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
  ×