search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன்"

    • நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
    • 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளன

    2022 ஆம் ஆண்டு தொடங்கிய ரஷிய உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்த நீடித்து வருகிறது. மேற்கு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சித்ததால் தங்களுக்கு ஆபத்து என்று கூறி ரஷியா இந்த போரை துவங்கியது. ரஷியா பக்கம் வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன. போரில் உக்ரைனுக்கு பக்க பலமாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத மற்றும் பொருளாதார ரீதியாக உக்ரைனுக்கு உதவி வருகிறது. உக்ரைனுக்கு பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ என்ற அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளது. இதை ரஷியா மீது உக்ரைன் பய்னபடுத்தும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு புதின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

     

    இந்நிலையில்தான் இந்த ஒட்டுமொத்த போரானது எந்நேரமும் மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்லும் என்று நிலவி வரும் அச்சத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ரஷிய அதிபர் புதின் முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இன்று தொலைக்காட்சி வாயிலாக பேசிய புதின், அதிகரித்து வரும் சர்வதேச பாதுகாப்பு அச்சறுத்தல் காரணமாக ரஷியாவின் அணு ஆயுதங்கள் பயன்பாடு [பயன்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட கொள்கைகளில்]  திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது.

    சர்வதேச ராணுவ மற்றும் அரசியல் சூழல் தொடர்ச்சியாக மாறி வருகிறது, அதற்கு ஏற்ற முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஷிய ராணுவ தளபதிகளுடனான கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் உக்ரைன் ரஷியாவை எதிர்ப்பது என்பது உக்ரைன் வழியாக அதற்கு உதவும் அணு ஆயுத நேரடியாக ரஷியாவை எதிர்ப்பதாகக் கருதப்படும். எனவே தாங்களும் தங்களின் அணு ஆயுதங்களை உபயோகிக்கும் நிர்பந்தம் ஏற்படலாம் என்ற வகையில் புதின் பேசியுள்ளது மேற்கத்திய நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில், 8-0 சதவீதம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன. ரஷியாவிடம் மட்டுமே 6,732 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில், 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

    • நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயன்றதால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று ரஷியா கருதியது
    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா வந்திருந்தார்

    குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் அமெரிக்கா நோக்கிப் படையெடுத்தனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி அமெரிக்க சென்று நாடு திரும்பியுள்ளார். அந்த வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்கா வந்திருந்தார். பிரதமர் மோடியையும் ஜெலன்ஸ்கி சந்தித்தார்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் ரஷியா போர் தொடர்ந்து வரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவை சமாளித்து வருகிறது. மேலும் ரஷிய பகுதிகளில் நுழைந்தும் உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் போர் முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்க்டன் மாகாணத்தில் வைத்து ஏபிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போரில் அமைதிக்கு மிக அருகில் நெருங்கியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே போரை முடிவுக்குக் கொண்டுவரும் தருவாயில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 

    மேற்கு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயன்றதால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதிய ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம்  உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளும், அமெரிக்காவும் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது. சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.
    • அங்கு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராகப் போரிடும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா சென்று, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்கிறார்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை வரும் 26-ம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார். துணை அதிபர் ஹாரிஸ் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியை தனித்தனியாகச் சந்திப்பார்.

    உக்ரைனின் மூலோபாய திட்டமிடல் மற்றும் ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்க ஆதரவு உட்பட ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் நிலை குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள்.

    இந்தப் போரில் உக்ரைன் வெற்றிபெறும் வரை உக்ரைனுடன் நிற்பதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அதிபரும், துணை அதிபரும் வலியுறுத்துவார்கள் என தெரிவித்துள்ளது.

    இதுவரை 45 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர்.காலை 6 மணி முதல் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் நாங்கள் வேலை செய்தோம், தூங்குவதற்கும் அனுமதிக்க மாட்டார்கள்.

    உக்ரைன் ரஷியா போர் கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷிய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக அங்கு மாறியுள்ள இந்திய இளைஞர்கள் சிலர் தங்களை காப்பாற்றும்படி வீடியோ வெளியிட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்தபோது ரஷிய ராணுவத்திலுள்ள இந்திய இளைஞர்களை பணியிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியிருந்தார். இதற்கு ரஷியா இசைவு தெரிவித்த நிலையில் இதுவரை 45 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர். மேலும் 50 இந்தியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் விடுவிக்கப்பட்டவர்களில் தெலுங்கனா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 4 இந்தியர்கள் நேற்றைய தினம் [வெள்ளிக்கிழமை] இந்தியா திரும்பியுள்ளனர். ரஷியாவில் மாதம் ரூ.1 லட்சத்தில் வேலைவாய்ப்பு எனக்கூறி அழைத்துச்செல்லப்பட்ட இவ்விளைஞர்கள் உக்ரைன் போர் தொடங்கியதும் வலுக்கட்டாயமாக ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுப் போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரஷிய ராணுவத்தில் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    காலை 6 மணி முதல் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் நாங்கள் வேலை செய்தோம், தூங்குவதற்கும் அனுமதிக்க மாட்டார்கள்.மனிதாபிமானமற்ற சூழலில் நாங்கள் இருந்தோம். AK-12, AK-74, கிரெனைடுகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாள எங்களுக்கு பயிற்சி அளித்தனர். குறைந்த உணவுடன் கடுமையான குளிரில் சுரங்கப்பாதைகளைத் தோண்டினோம். உடல் ரீதியான வலியுடன் மன ரீதியாகவும் எங்களுக்கு கடும் தொல்லைகள் கொடுக்கப்பட்டது.

    எங்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டது. போருக்கிடையில் தாங்கள் எத்தனை நாட்கள் உயிர்பிழைக்கப் போகிறோம் என்று அஞ்சினோம். துப்பாக்கி குண்டுகளின் சத்தம் இன்னும் எங்களின் காதுகளுக்கு இரைந்து கொண்டிருக்கிறது. வேலையின்போது நாங்கள் சோர்ந்துவிட்டால் கால்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்கள், போரில் நண்பர்கள் பலரின் மரணத்திலிருந்தும் தாங்கள் இன்னும் மீளவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த அஜித் தோவல் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்
    • பிரதமர்[மோடி] உங்களிடம் டெலிபோன் மூலம் பேசியிருந்தபடி அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறார்.

    உக்ரைன் போரும் இந்தியாவும் 

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவால் உதவ முடியும் என அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட மேற்கு நாடுகள் கூறி வரும் நிலையில் மோடியின் ரஷிய பயணம் மற்றும் அதன்பின்னான உக்ரைன் பயணம் சர்வதேச கவனம் பெற்றது. ரஷியாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமே என்று மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த ஆகஸ்ட் 23 அன்று உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மோடி ரஷியா உடனான போர் நிறுத்தம் குறித்தும் இந்தியா- உக்ரைன் வர்த்தக உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் தேசிய மாநாடு பணிகள் தொடர்பாக நேற்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ரஷியா சென்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

     

    அஜித் தோவல் தூது 

    மேலும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த அஜித் தோவல் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார். மோடி உக்ரைன் சென்று சரியாக இரண்டரை வாரங்கள் கழிந்து ரஷியா சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் புதினை சந்தித்து கைகுலுக்கி பேசுகையில், பிரதமர்[மோடி] உங்களிடம் டெலிபோன் மூலம் பேசியிருந்தபடி அவரது உக்ரைன் பயணம் குறித்தும், அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்தும் உங்களிடம் விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறார். எனவே உங்களை சந்தித்து இதுபற்றி விளக்கமாக கூற என்னை தனிப்பட்ட முறையில் பிரதமர் [மோடி] அனுப்பி வைத்துள்ளார் என்று பேசியுள்ளார்.  அதிபர் புதின் மற்றும் அஜித் தோவல் சந்திப்பின்போது இருவரும் தனியே உரையாடியுள்ளனர். அப்போது உக்ரைன் போரை நிறுத்துவதற்காக மோடியின் அமைதி திட்டத்தை அஜித் தோவல் புதினிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தீவிரமாகும் போர் 

    இதற்கிடையே அக்டோபர் 22 முதல் 24 வரை நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் உக்ரைன் போர் தொடர்பாக அதிபர் புதினின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மோடி உக்ரைன் சென்று திரும்பிய சில நாட்களிலேயே ரஷியா- உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைய தொடங்கியது. இருவரும் மாறி மாறி டிரோன்கள் மூலமும் ராக்கெட்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறனர். உக்ரைன் தலைங்கர் கீவில் மின்சார கட்டமைப்பைக் குறிவைத்து ரஷியா பெரிய அளவில் தாக்குதல் நடத்தி இருந்தது குறிப்பிடத்தத்க்து.

    • அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த வாரம் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
    • அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பாதிக்கும் மேற்பட்ட மந்திரிகள் மாற்றப்படலாம் என கட்சி தலைவர் தகவல்.

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையே ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து வைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து நான்கு முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய மந்திரி ஒலெக்சாண்ட்ர் கமிஷின் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் கமிஷின் ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதில் முங்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தது.

    நீதித்துறை மந்திரி டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை மந்திரி ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

    நான்கு மந்திரிகள் ராஜினாமா குறித்து அரசும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நான்கு பேருக்கு பதிலாக முக்கியமான மந்திரி பதவிக்கு புதிதாக யாரை நியமிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம், உடனடியாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றத்திற்கான அந்த கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் மந்திரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    ரஷியாவுக்கு எதிராக சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த ராஜினாமா விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

    • உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ரஷியாவின் ரோன்களின் தாக்குதலை முறியடிக்க 70 உக்ரைன் பெண்கள் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளனர்.

    ரஷியா - உக்ரைன் போர் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அண்மையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை ரஷியா நடத்தியது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது.

    இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்தது. டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

    உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க உக்ரைன் பெண்கள் போர்க்களத்திற்கு வந்துள்ளனர். இந்த பெண்கள் குழு ரஷியாவின் டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் உக்ரைன் ஆண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் உக்ரைன் எல்லையை பாதுகாத்து வருகின்றனர். ஆண்களோடு கைகோர்த்து தற்போது பெண்களும் நாட்டை பாதுகாக்க முன்வந்துள்ளனர். ரஷியாவின் டிரோன் தாக்குதலை முறியடிக்க முதற்கட்டமாக 70 பெண்கள் பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளனர்.

    • உக்ரைன் படைகளை எதிர்கொள்ள தற்போது 30,000 ரஷிய ராணுவ வீரர்கள் கூர்க்ஸ் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • இரு நாட்டு எல்லைக்குள் இடையில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்க இந்த தாக்குதல் என்று ஜெலன்ஸ்கி கூறினார்

    உக்ரைன் ரஷியா போர் தீவிரமாகி வரும் நிலையில் ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் மக்கள் வாழும் 100 குடியேற்ற பகுதிகளை [settlements] கைப்பற்றியுள்ளதாகவும் 600 ரஷிய வீரர்களைக் கைது செய்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2022 இல் தொடங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில் சமீப காலமாக உக்ரைன் ரஷியா மீது பெரிய அளவிலான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

    கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதலைமுறையாக ரஷியாவுக்குள் நுழைந்த உக்ரைன் படைகள் கூர்க்ஸ் பிராந்தியத்தில் சரமாரியாகத் தாக்குதல் நடத்தின. இதனால் அங்குள்ள மக்கள் வெளியேற்ட்டப்பட்டு, ரஷிய ராணுவம் குவிக்கப்பட்டது . இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷிய மண்ணில் வெளிநாட்டுப் படைகள் முன்னெடுத்த மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.  

     

    இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, எல்லையிலிருந்து ரஷியா நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்காகத்தான் இந்த முயற்சி. இரு நாட்டு எல்லைக்குள் இடையில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவதற்குத்தான் இந்த தாக்குதல். மற்ற எந்த நோக்கமும் கிடையாது என்று தெரிவித்தார். ஆனால் உக்ரைன் படைகள் ரஷிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அதிபர் புதின் குற்றம்சாட்டியிருந்தார்.

    உக்ரைன் படைகளை எதிர்கொள்ள தற்போது 30,000 ரஷிய ராணுவ வீரர்கள் கூர்க்ஸ் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைன் படைகளைச் சுற்றிவளைத்துப் பாதுகாப்பு அதற்கு மேல் அவர்கள் முன்னேற முடியாத படி பாதுகாப்பு வளையத்தை உருவாக்க முயன்று வருகின்றனர். இந்த நிலையில்தான் உக்ரைன் தரைப்படை தளபதி சிர்ஸ்கி [Syrsky] கூர்க்ஸ் பிராந்தியத்தில் இறுதிவரை நடத்திய தாக்குதல்களில் 600 ரஷிய படை வீரர்களைக் கைது செய்துள்ளோம் என்றும் 100 குடியிருப்பு பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

     

    இதற்கிடையில் நேற்று முன் தினம் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நூற்றுக்கணக்கான மிசைல்கள் மற்றும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் மின்சார சேவை கட்டமைப்பை அழிக்க ரஷியா குறி வைத்துவருகிறது. மேலும் உக்ரைன் படைகளும் ரஷ்யாவின் சராதோவ் பகுதியில் டிரோன்களை ஏவித் தாக்குதல் தாக்குதல் நடத்தின 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆகஸ்ட் 23 அன்று உக்ரைன் நாட்டுக்கு அரசுமுறை பயணமாக மோடி சென்றிருந்தார்.
    • ரஷிய அதிபர் புதனுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அண்மையில், அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். அங்கு, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்தார். ரஷியா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், உக்ரைன் நாட்டு பயணம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ரஷிய அதிபர் புதினுடன் பேசினேன். இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான கூட்டாண்மை மற்றும் பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். ரஷியா -உக்ரைன் போர் பற்றிய எனது கருத்துகள் மற்றும் சமீபத்தில் நான் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டது குறித்து உரையாடினோம். போரை கைவிட்டு, அமைதியான தீர்வுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஜூலை 9 அன்று நடந்த 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ரஷியா சென்றிருந்தார். அப்போது மோடியை புதின் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் விவாதித்தோம்
    • இருதரப்பு உறவை வலுப்படுத்த பைடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அமரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி நேற்றைய தினம் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். சமீபத்தில் மேற்குகொண்ட ரஷிய-உக்ரைன் பயணம், வங்கதேச விவகாரம், இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருவரும் விரிவாக விவாதித்தோம் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், அதிபர் ஜோ பைடனுடன் உரையாற்றினேன். உக்ரைனில் உள்ள நிலைமை உட்பட பல்வேறு பிராந்திய, உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசினோம். அந்த பகுதிகளில் விரைவில் அமைதி மற்றும் நிலைத்தன்மை திரும்ப இந்தியா எப்போதும் முழு ஆதரவு அளிக்கும் என்று அவரிடம் தெரிவித்தேன். வங்கதேச நிலைமை குறித்து பேசியபோது, அங்கு விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது குறித்தும் , சிறுபான்மையினரின், முக்கியமாக இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் விவாதித்தோம் என்று பதிவிட்டுள்ளார்.

    இதுதவிர்த்து க்வாட் கூட்டமைப்பு உள்ளிட்ட பிராந்திய, சர்வதேச அமைப்புகளில் இந்தியா-அமெரிக்கா தொடர்ந்து இணக்கமாக செயல்படுவது குறித்தும் பிரதமர் மோடி பைடனுடன் பேசியுள்ளார். இருதரப்பு உறவை வலுப்படுத்த பைடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்ததாகவும் இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ரஷியா நேற்று இரவு, பல கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது
    • மின்சார ஆற்றல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து ரஷியா மிசைல்களை ஏவி வருகிறது.

    ரஷியா நேற்று இரவு, பல கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. டிரோன் விழுந்து சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

    இந்நிலையில் உக்ரைன் பகுதிகள் மீது ரஷியா விடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. ராட்சத மிசைல்கள் மற்றும் டிரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர். மேற்கு லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரிஜியா பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மின்சார ஆற்றல் உள்கட்டமைப்பைக் குறிவைத்து மிசைல்கள் ஏவப்பட்டுள்ளன.

    இதனால் நாட்டின் மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனம் DTEK கீவ் உள்ளிட்ட தாக்குதலுக்கு உள்ளான 15 நகரங்களில் குறிப்பாக லெவிவ் [lviv] மின்சாரம் சேவைகளை நிறுத்தியுள்ளது. இதனை அந்த மாகாணத்தின் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த தாக்குதலால் தண்ணீர் விநோயாகம் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது
    • வானிலேயே தகர்க்கப்பட்ட டிரோன்களின் பாகங்கள் சராதோவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்களின் மீது வவிழுந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது

    ரஷியா உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளும் மேலாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் உக்ரைன் படைகள் ரஷிய பகுதிகளுக்குள் நுழைந்தது தாக்குதல் நடத்தியது. ரஷியாவின் கூர்க்ஸ் உள்ளிட்ட பிராந்தியங்களை உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதனால் ரஷிய ராணுவம் பெரிய அளவிலான தாக்குதலுடன் பதிலடி கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை, 2 கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இந்த சம்பத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனால் வானிலேயே தகர்க்கப்பட்டடிரோன்களின் பாகங்கள் சராதோவ் பகுதியில் உள்ள 38  மாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இதற்கிடையில் சராதோவ் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சராதோவ் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தடைபட்டுள்ளன.

    ×