என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால், அனைத்து இலக்குகளையும் ராணுவ வழிகளில் அடைவோம்: புதின்
    X

    உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால், அனைத்து இலக்குகளையும் ராணுவ வழிகளில் அடைவோம்: புதின்

    • ரஷியா பிடித்துள்ள பகுதிகளை விட்டுக்கொடுக்க உக்ரைன மறுப்பு தெரிவிக்கிறது.
    • டிரம்பை இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேச இருக்கிறார்.

    ரஷியா- உக்ரைன் இடையில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவர 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதில் பெரும்பாலான அம்சங்களில் அமெரிக்கா- உக்ரைன் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

    உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுக்கு விட்டுக் கொடுப்பதும், ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுஉலையான சபோரிசியாவை ரஷியாவிடம் ஒப்படைக்கவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இன்று புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, ஜெலன்ஸ்கி சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் நேற்று ரஷிய அதிபர் புதின், அந்நாட்டின் ஆயுதப்படைகள் கமாண்டு மையத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். அங்குள் அதிகாரிகளிடம் பேசும்போது "உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால், ரஷியா ராணுவ வழியில் அனைத்து சிறப்பு ராணுவ ஆபரேசன் இலக்குகளை அடையும் எனத் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன்- ரஷியா எல்லையில் பாதுகாப்பு பகுதி தொடக்கம் சிறப்பான நடைபெற்று வருகிறது. ரஷியப் படைகள் டான்பாஸ் மற்றும் சபோரோசியே பிராந்தியத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×