Moscow Under Attack: ரஷிய தலைநகர் மீது பாய்ந்த உக்ரைன் டிரோன்கள் - விமான நிலையங்கள் மூடல்

விமான நிலையங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.
Moscow Under Attack: ரஷிய தலைநகர் மீது பாய்ந்த உக்ரைன் டிரோன்கள் -  விமான நிலையங்கள் மூடல்
Published on

ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயன்றதை எதிர்த்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது.

இந்த போரானது கடந்த 5 வருடங்களாக முடிவின்றி நடந்து வருகிறது. போரை நிறுத்த கடந்த வருடம் அமெரிக்க அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப் கடுமையாக முயன்று வருகிறார்.

பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே நேற்று உக்ரைனின் வடக்கு பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

மாஸ்கோவை நோக்கி வந்த 10 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்க்கோவின் 4 சர்வதேச விமான நிலையங்களும் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மறுபுறம் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. கைப்பற்றிய பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க ரஷியா மறுப்பதால் ஒப்பந்தம் எட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com