search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "bombing"

  • விஜய் என்பவர் மது போதையில் தகராறு செய்தார்.
  • இரவு தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டது.

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் அருகே ஜம்புதுரைக்கோட்டை ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது37). திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

  இவர் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

  எங்கள் பகுதியில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. அப்போது விஜய் என்பவர் மது போதையில் தகராறு செய்தார். அது குறித்து போலீசில் புகார் தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை எச்சரித்து காலையில விசாரணைக்கு வருமாறு கூறினர்.

  பின்னர் நிலக்கோட்டையில் வக்கீலாக பணிபுரியும் எனது சகோதரர் உதயகுமார் எங்கள் வீட்டிற்கு வந்தார். முன்பகையை மனதில் வைத்துக் கொண்டு விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

  பின்னர் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென வெடி சத்தம் கேட்டது. நாங்கள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு பைப் சேதம் அடைந்தது தெரிய வந்தது. அப்போது விஜய் குடும்பத்தினர் காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • தெற்கு காசாவில் உள்ள கான்யூனுசின் கிழக்கு பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.
  • காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் நோய், மரணம் மற்றும் அழிவு ஆகியவற்றை எதிர்கொண்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

  காசா:

  இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தியதில் 14,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

  இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் காசாவில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டாகின. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவாார்த்தை மூலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

  கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் நிறுத்தம் 7 நாட்கள் நீடித்தது. இதில் 83 இஸ்ரேல் பிணைக் கைதிகள், 24 வெளிநாட்டினரை ஹமாஸ் விடுத்தது. அதே போல் இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அரசு விடுதலை செய்தது.

  போர் நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க கத்தார் நாடு முயற்சித்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

  இதையடுத்து காசா மீது இஸ்ரேல் தனது போர் தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது. தெற்கு காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின.

  அதே போல காசாவின் மற்ற பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. குண்டு வீச்சால் பல இடங்களில் கடும் புகை எழும்பின. காசா மீது இஸ்ரேல் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள கான்யூனுசின் கிழக்கு பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.

  போர் நிறுத்தத்துக்கு பிறகு முதல் நாள் தாக்குதலில் 180 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள்.

  இது தொடர்பாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, நேற்று காலை இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கிய 2 மணி நேரத்தில் 180-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 589 பேர் காயம் அடைந்துள்ளனர்.

  காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காசா மக்கள் உயிரை கையில் பிடித்தப்படி தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

  காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் நோய், மரணம் மற்றும் அழிவு ஆகியவற்றை எதிர்கொண்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

  இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் 126 இஸ்ரேலியர்கள், தாய்லாந்தை சேர்ந்த 8 பேர், நோபளம், தான்சானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என 137 பேர் பிணைக் கைதிகளாக இன்னும் உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

  • ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.
  • ஆஸ்பத்திரி, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

  காசா:

  இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

  ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி, இஸ்ரேலின் தாக்குதலில் நிர்மூலமாகி இருக்கிறது.

  காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மேலும் வடக்கு காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

  ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.

  இந்த நிலையில் இரண்டு பள்ளிகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஐ.நா. சபை நடத்தும் அல்-பகுரா பள்ளியில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். இந்த பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின.

  இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 50 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அதே போல் வடக்கு காசாவின் தால்-அல்-ஜாதார் பகுதியில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

  இதற்கிடையே பள்ளிகள் மீதான தாக்குதலில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபா லியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஐ.நா. நடத்தும் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போர்க்குற்றம் என்றும் ஐ.நா. சபையை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் என்றும் எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.

  வடக்கு காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்து சோதனை நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்ததாக கூறி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

  இதற்கிடையே அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகள், மருந்துவ ஊழியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது என்றும் இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து பலர் வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியானது.

  ஆனால் ஆஸ்பத்திரியில் மக்களை வெளியேற உத்தரவிடவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. ஆஸ்பத்திரியின் இயக்குனரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற அனுமதித்தாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்கள் தாமாக முன்வந்து வெளியேறுகிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறது.

  அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மின்சாரம் இல்லை, தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். அந்த ஆஸ்பத்திரி, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

  • உயிரிழந்தவர்களில் 260 பேர் குழந்தைகள் மற்றும் 230 பேர் பெண்கள் ஆவர்.
  • நகரின் பல பகுதிகள் இடிபாடுகளால் சிக்கி உள்ளது. 24 மணி நேரத்தில் 450 இலக்குகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டது.

  இஸ்ரேல், காசா படை மோதலில் இதுவரை 2,265 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேரும். காசாவில் 1,050 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 260 பேர் குழந்தைகள் மற்றும் 230 பேர் பெண்கள் ஆவர்.

  காசாவில் மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலிய விமானப்படை காசாவில் ஒரு பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக கட்டிடங்களை குண்டுவீசி தரைமட்டமாக்கி வருகிறது.

  இதனால், நகரின் பல பகுதிகள் இடிபாடுகளால் சிக்கி உள்ளது. 24 மணி நேரத்தில் 450 இலக்குகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டது.

  இத்தாக்குதல்களால் காசா மக்கள் பள்ளிகளில் ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் தங்குமிடங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

  அனைத்து சாலைகளும் அழிக்கப்பட்டுள்ளன' என ஹமாஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2,50 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். 4 லட்சம் மக்கள் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

  புதுவை முத்தியால்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால் யாராவது கட்சி அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

  புதுச்சேரி:

  புதுவை முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது70). இவரது மூத்த மகள் கவுரி. இவரது கணவர் ராஜி. இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபராம் செய்து வருகிறார்.

  இவர்களது மகன் சுரேஷ். இவர் உழவர்கரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி தலைவராக உள்ளார். சீனிவாசன் வீடு 3 மாடியில் அமைந்துள்ளது.

  வீட்டின் கீழ் தளத்தில் 4 அறைகள் உள்ளது. வீட்டின் முன்புறம் சுரேஷ் பாரதிய ஜனதா அலுவலகம் நடத்தி வருகிறார். அதே தளத்தில் சீனிவாசன், அவரது மனைவி ஜோதி (60), 2-வது மகள் சாந்தி (42), இளைய மகள் எழிலரசி (38), சீனிவாசன் பேத்திகள் தீபிகா (15), ஸ்ரீ (14) ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

  இன்று காலை 6.30 மணியளவில் சீனிவாசன் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. வீடும் உருக்குலைந்தது. வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து கிடந்தது.

  வீட்டில் இருந்த ஜோதி, எழிலரசி, சிறுமி ஸ்ரீ ஆகியோர் தீக்காயத்துடன் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

  கோட்ட தீயணைப்பு அலுவலர் இளங்கோ, நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் முத்தியால்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீடு முற்றிலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.

  வீட்டின் மேல் தளத்தில் ஜோதி சிக்கி கொண்டார். அவரை மாடி வழியாக இறங்கி ஸ்டிரக்சர் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். எழிலரசி மற்றும் சிறுமி ஸ்ரீயையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜோதி, எழிலரசி ஆகியோர் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டில் இருந்த சாந்தி, தீபிகா ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். வீட்டின் பின்பக்க அறையில் இருந்ததால் சீனிவாசன் காயமின்றி தப்பினார்.

  சீனிவாசன் வீட்டில் வைக்கப்பட்டடிருந்த பிரிட்ஜ் எரிந்து உருக்குலைந்து காணப்பட்டது. ஆனால் சிலிண்டர் அப்படியே இருந்தது. மேலும் சுரேஷ் நடத்தி வந்த பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ‌ஷட்டர் பெயர்ந்து அப்பகுதியில் உள்ள சந்தில் விழுந்து கிடந்தது.

  சீனிவாசன் வீட்டின் அருகில் இருந்த வீடுகளிலும், எதிரில் உள்ள வீடுகளிலும் கீறல் விழுந்துள்ளது. மேல் மாடியில் உள்ள வீட்டின் ஜன்னல், கதவுகள் இறுகி விட்டது. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

  பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்தான் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால் யாராவது கட்சி அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தீயணைப்புதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சீனிவாசன் வீட்டில் உள்ள சிலிண்டர் அப்படியே உள்ளது. பிரிட்ஜ் மட்டும்தான் தீபிடித்து எரிந்துள்ளது.

  மேலும் மின்கசிவு ஏற்பட்டதற்கான எந்த தடயங்களும் இல்லை. எனவே கட்சி அலுவலகத்தில் யாராவது நாட்டு வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

  தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்கு பின்னரே இது தொடர்பான முழுவிவரம் தெரியவரும் என்றார். 

  ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் அப்துல் ஜப்பார் காஹ்ரமன் உள்பட 4 பேர், உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். #Afghanistan #Bombing #ElectionCampaign
  காபூல்:

  ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் உள்நாட்டு படையினரும், அமெரிக்க கூட்டுப்படையினரும் திணறி வருகின்றனர்.

  இந்த நிலையில் அங்கு ஹெல்மாண்டு மாகாணத்தில் நாளை மறுதினம் (20-ந் தேதி) நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியவர் அப்துல் ஜப்பார் காஹ்ரமன். இவர் நேற்று காலை 10 மணியளவில் தனது தேர்தல் அலுவலகத்தில் இருந்தார். அவர் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது.

  இந்த குண்டுவெடிப்பில் அப்துல் ஜப்பார் காஹ்ரமன் உள்பட 4 பேர், உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

  அவரது அலுவலகத்தில் சோபாவுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டுதான் வெடித்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து உயிரிழந்த வேட்பாளர் அப்துல் ஜப்பார் காஹ்ரமன் உள்ளிட்ட 4 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த குண்டுவெடிப்புக்கு தலீபான் பயங்கரவாதிகள் உடனடியாக பொறுப்பேற்றனர்.

  ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி தலீபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.  #Afghanistan #Bombing #ElectionCampaign 
  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் பகுதி வழியாக ரோந்து சென்ற பாதுகாப்பு படை வாகனங்களின் மீது சில மர்ம நபர்கள் இன்று கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள பந்தா சவுக் பகுதி வழியாக இன்று மாலை வழக்கம்போல் மத்திய துணை ராணுவப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது, அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் சென்ற பாதுகாப்பு படை வாகனங்களின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

  தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் வேட்டையில் அதிகாரிகளும், வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். #SrinagarCRPFparty
  ×